Wednesday

கவிமணி தேசிக விநாயகனார்

     GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

பெற்றோர் : சிவதானுப் பிள்ளை, ஆதிலட்சுமி அம்மாள்

காலம் : 27/7/1876 – 26/9/1954

பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்

துணைவியார் : உமையம்மாள்

சிறப்புப்பெயர்கள் : கவிமணி, தேவி

நூல்கள் : ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனைகள்,மலரும் மலையும், மருமக்களின் வழி மான்மியம், குழந்தை செல்வம், காந்தளூர் சாலை, கதர் பிறந்த கதை.

மேற்கோள் :

è தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு.........

è மங்கையாராக பிறப்பதற்கே நல்ல............

è உண்மையும் உள்ளத்து எழுச்சியும்...........

è ஊக்கம் உடையவர்க்கு.........

è ஔவை கிழவி நம் கிழவி.........

குறிப்பு :

F “அழகம்மை ஆசிரியவிருத்தம்” இவரது முதல் நூல் 1895 ல் வெளியானது.

F தமிழின் முதல் குழந்தை கவிஞர் என போற்றப்பட்டார்.

F இவர் BABY என்ற ஆங்கில படலை தமிழில் “குழந்தை” என்னும் தலைப்பில் மொழிப்பெயர்ந்தார்.

F இவர் ஆங்கில கவிஞர் எட்வின் அர்னால்டு எழுதிய “LIGHT OF ASIA” என்ற நூலை “ஆசிய ஜோதி” என்று தமிழில் மொழிப்பெயர்ந்தார்.

F பாரசீக கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை இவர் தமிழில் “உமர்கய்யாம் பாடல்கள்” என தமிழில் மொழிப்பெயர்ந்தார்.

F இதனை ஆங்கிலத்தில் எட்வர்டு பிட்ஸ், ஜிரால்டு என்பவர்கள் மொழிப்பெயர்ந்தனர்.

F இவர் வெண்பா இயற்றுவதில் புலமை பெற்றவர்.

F கவிதைக்கு புது இலக்கணத்தை கூறியவர்.

F இவருடைய குழந்தைப் பாடல்கள் தான் இவருக்கு சிறப்பை பெற்றுக் கொடுத்தது.

சிறப்பு :

v  நாமக்கல்லார் – இவருடைய கவிப் பெருமையை தினமும் கேட்பது என் செவிக்கு பெருமை என்று கூறியுள்ளார்.

v  சண்முகம் – இவரின் கவிதையை புரிந்து கொள்ள பண்டிதராக இருக்க தேவையில்லை, படிக்கத் தெரிந்த எவரும் பொருள் புரிந்துக் கொள்ளக்கூடிய எளிய நடை.

v  வள்ளியப்பா – “தேனொழுகக் கவிபாடும் தேசிக விநாயகமே”.

v  டி.கே.சி. – இவரின் பாடல்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருஞ்செல்வம் அதனை கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப்பூச்செண்டு.

v  இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியை தொடங்கி கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்தார்.

v  இவருடைய ஆசிரியர் பெயர் சாந்தலிங்க தம்பிரான். இவரிடம் இலக்கிய இலக்கணத்தை கற்று சமய அறிவை வளர்ந்துக் கொண்டார்.

v  டிசம்பர் 24 1940 ல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க தலைவர் உமாகாமேசுவரானார் இவருக்கு கவிமணி என்ற பட்டத்தை வழங்கினார்.

v  இவருக்கு தேரூரில் ஒரு நினைவு இல்லம் 1954 ல் வைக்கப்பட்டுள்ளது.

v  2005 ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....