Latest Government Jobs and updates

Tuesday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

 BLOCK EDUCATIONAL OFFICER

 (வட்டாரக் கல்வி அலுவலர்)

   Part I

         தமிழ்

இலக்கணம்

குற்றியலுகரம், குற்றியலிகரம்

குற்றியலுகரம்

v  குழந்தை, வகுப்பு, பாக்கு ஆகிய மூன்று சொற்களில் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை காணலாம்.

v  ‘கு’ என்னும் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக ஒலிக்கின்றது.

v  ஆனால், சொல்லின் இறுதியில் வரும்போது மட்டும் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது.

v  கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது.

v  இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

v  குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்.

v  (எ.கா) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.

முற்றியலுகரம்

v  தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.

v  வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.

v  இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.

v  (எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு.

குற்றியலுகரத்தின் வகைகள்

v  குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு பிரிக்கலாம்.

v  அவற்றை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

F நெடில்தொடர்க் குற்றியலுகரம்

F ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

F உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

F வன்தொடர்க் குற்றியலுகரம்

F மென்தொடர்க் குற்றியலுகரம்

F இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

è தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è இது ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.

è (எ.கா) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

è ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è (எ.கா) எஃகு, அஃது.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

è தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è  (எ.கா) அரசு (ர = ர் + அ)

கயிறு (யி = ய் + இ)

ஒன்பது (ப = ப் + அ)

வரலாறு (லா = ல் + ஆ)

வன்தொடர்க் குற்றியலுகரம்

è வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è வல்லின எழுத்துகள் – க், ச், ட், த், ப், ற்.

è  (எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று.

மென்தொடர்க் குற்றியலுகரம்

è மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è மெல்லின எழுத்துகள் – ங், ஞ், ண், ந், ம், ன்.

è (எ.கா) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

è இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ ஆகும்.

è இடையின எழுத்துகள் – ங், ஞ், ண், ந், ம், ன்.

è (எ.கா) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.

குறிப்பு

·         தமிழில் எழுத்துகளைக் குறிப்பதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரிகள் பயன்படுத்தப் படுகிறது.

·         குறில் எழுத்தைக் குறிக்க ‘கரம்’

(எ.கா) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்.

·         நெடில் எழுத்தைக் குறிக்க ‘கான்’

(எ.கா) ஐகான், ஔகான்.

·         குறில், நெடில் எழுத்தைக் குறிக்க ‘காரம்’

(எ.கா) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்.

·         ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’

·         (எ.கா) அஃகேனம்.

·         ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

·         சு, டு, று ஆகிய எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

குற்றியலிகரம்

v  வரகு + யாது = வரகியாது

v  இந்த சொற்களைச் சேர்ந்து ஒழிந்துப் பார்த்தால் ‘கு’ என்னும் எழுத்து ‘கி’ என்று ஒலிக்கிறது.

v  ஒரு மாத்திரை அளவிலிருந்து ஒளிக்காமல் அரை மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கின்றது.

v  இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும்.

v  குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

v  குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும். அவை,

è குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும்.

è இந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கின்றது.

è (எடுத்துக்காட்டுகள்)

Ø  கொக்கு + யாது = கொக்கியாது

     (க் + உ)        (க் + இ)    

Ø  தோப்பு + யாது = தோப்பியாது

    (ப் + உ)         (ப் + இ)

Ø  நாடு + யாது = நாடியாது

   (ட் + உ)     (ட் + இ)

Ø  எனப்படுவது + யாது = எனப்படுவதியாது

          (த் + உ)        (த் + இ)

è ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல். இது ஓசை நயத்திற்காக வரும்.

è இதில் ‘மி’ யில் உள்ள இகரம் குற்றியலிகரம் எனப்படும்.     (ம் + இ = மி)

è இவை சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கின்றது.

è (எ.கா)

Ø  கேள் + மியா = கேண்மியா

Ø  செல் + மியா = சென்மியா

குறிப்பு

·         குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.


Monday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

BLOCK EDUCATIONAL OFFICER

(வட்டாரக் கல்வி அலுவலர்)

Part I

தமிழ்

இலக்கணம்

அணி இலக்கணம்

v அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.

v நாம் நம்மை அணிகலன்களால்அழகுப்படுத்துவது போல,

v கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களுக்கு அழகுச் சேர்க்கின்றனர்.

v இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.

v கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி ஆகும்.

v மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணி ஆகும்.

v இதனை இரு வகைப்படுத்துவர். அவை,

F இயல்பு நவிற்சி அணி

F உயர்வு நவிற்சி அணி

இயல்பு நவிற்சி அணி

è ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

è இதனை தன்மை நவிற்சி அணி என்றும் அழைப்பர்.

è (எ.கா) தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

                          __ கவிமணி தேசிக விநாயகனார்.

è இதில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக கூறியுள்ளார்

è எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும். 

உயர்வு நவிற்சி அணி

è ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

è (எ.கா) குளிர்நீரில் குளித்தால்

             கூதல் அடிக்குமென்று

வெந்நீரில் குளித்தால்

         மேலே கருக்குமென்று

ஆகாச கங்கை

               அனல் உறைக்குமென்று

பாதாள கங்கையைப்

                         பாடி அழைத்தார் உன் தாத்தா

è இது ஒரு தாய் பாடும் தாலாட்டுப் பாடல் ஆகும்.

è இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.