Showing posts with label TNPSC Tamil Notes 2024. Show all posts
Showing posts with label TNPSC Tamil Notes 2024. Show all posts

Wednesday

ஆலந்தூர் மோகனரங்கன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஆலந்தூர் மோகனரங்கன்

இயற்பெயர் :

பிறந்த ஊர் : செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர்

பெற்றோர் : கோபால், மீனாம்பாள்

படைப்புகள் : பள்ளிப் பறவைகள், மோகனரங்கன் கவிதைகள், இமயம் எங்கள் காலடியில், சித்திரப் பந்தல், காலக்கிளி, வைர மூக்குத்தி, மனித நேயம், மனிதனே புனிதனாவாய், புதுமனிதன், யாருக்குப் பொங்கல், கயமையைக் களைவோம், அழகிய தமிழில் எழுதுங்கள், வண்ணத்தமிழ், நினைத்தால் இனிப்பவளே, வாழ்வதற்கு மனிதர்கள் தேவை, இளைய தலைமுறை எழுந்து நிற்கட்டும், இதயமே இல்லாதவர்கள், பொய்யே நீ போய்விடு, கனவுப் பூக்கள், வணக்கத்துக்குரிய வரதராசனார், சவால் சம்பந்தம்.       

குறிப்பு :

Ø  இவர் தொலைக்காட்சி, பாவரங்க மேடை, வானொலி போன்ற ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் நாவல், கவிதை நாடகம், மரபுக்கவிதை, சிறுகதை, இசைப் பாடல்கள் போன்றவற்றில் புலமைப் பெற்றவர்.

Ø  இவர் இளங்கவிஞர்களை உருவாக்க பல போட்டிகளை நடத்தியுள்ளார்.

Ø  இவர் பாட்டரங்கப் பாவலராய்ப் புகழப் பெற்றுள்ளார்.

Ø  இவர் புதிய பாதை என்னும் கையெழுத்து ஏடு நடத்தி வந்துள்ளார்.

Ø  இவர் கவிதை வட்டம் என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள்ளார்.   

Ø  இவரது இமயம் எங்கள் காலடியில், வணக்கத்திற்க்குரிய வரதராசனார் கதை என்ற நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுப் பெற்றுள்ளார்.

Ø  இவர் வணக்கத்திற்க்குரிய வரதராசனார் கதை என்ற தலைப்பில் மு.வா. அவர்களின் கதையை கூறியுள்ளார். அதுபோல தாத்தாவுக்குத் தாத்தா என்ற தலைப்பில் மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை கதையை கூறியுள்ளார்.

Ø  இவர் குறுந்தொகையின் குழந்தைகள், குறும்பா என்ற இரண்டு ஹைக்கூ கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

Ø  இவருக்கு பொன்னம்மா புதுமைப் பெண் என்ற நாடகத்திற்கு ஏ.வி.எம் தங்கப் பதக்கம் கொடுத்துள்ளது.  

Ø  இவருக்கு கவிவேந்தர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.

Tuesday

சாலினி இளந்திரையன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சாலினி இளந்திரையன்

இயற்பெயர் : கனகசௌந்திரி 

பிறந்த ஊர் : விருதுநகர்

காலம் :  1933 – 2000

கணவர் : சாலை இளந்திரையன்

பெற்றோர் : சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்

படைப்புகள் : ஏந்திரக் கலப்பை, புதிய தடங்கல், பண்பாட்டின் சிக்கற்றங்கள், குடும்பத்தில் நான், ஆசிரியப் பணியில் நான், பண்பாட்டின் சிகரங்கள், படுகுழி, களத்திலே கடிதங்கள், சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள்.     

குறிப்பு :

Ø  இவர் புதுடில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிப்புரிந்துள்ளார்.

Ø  இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சிலப்பதிக்காரச் சொல் வலம் என்ற தலைப்பில் ரா.பி.சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Ø  இவர் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.   

Ø  இவர் கொண்டல், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், சு.மகாதேவன் போன்றவர்களிடம் தமிழ் கற்று கொண்டுள்ளார்.

Ø  இவர் சிறந்த சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர், எழுத்தாளர்.

Ø  இவர் சிலம்பின் கதை மாந்தரான சாலினி என்ற பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

Ø  இவர் 1987 ல் மனித வீறு என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவரது முதல் கட்டுரை வாடா மலர் ஆகும்.

Ø  இவர் ஆனந்த போதினி என்ற இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் போன்ற பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து சாலை இளந்திரையன் நினைவு மலர் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் படைப்புகளிலிருந்து சாலையாரின் பிளிறல்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள் என்னும் தலைப்பில் இவரது சொற்பொழிவுகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.

Ø  இவர் வீரநடை அறிவியக்கம் என்ற இதழுக்கு இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார்.  

Ø  இவர் தந்தை பெரியாரை தனது வழிக்காட்டியாக கொண்டு வாழ்ந்துள்ளார்.

Ø  சாலை இளந்திரையனுடன் சேர்ந்து இரண்டு குரல்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், தமிழ் தந்த பெண்கள் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

Monday

சாலை இளந்திரையன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சாலை இளந்திரையன்

இயற்பெயர் : மகாலிங்கம்

புனைபெயர்கள் : காஞ்சித் தலைவன், வீதியூர் நீதிக்கிழார், களக்காடு சா. பெரிய பெருமாள், பிள்ளைப்பாண்டியன்.      

பிறந்த ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல்

பெற்றோர் : இராமையா, அன்னலட்சுமி   

மனைவி பெயர் : சாலினி இளந்திரையன்

காலம் :  6/9/1930 – 4/10/1998

படைப்புகள் : காக்கைவிடு தூது, இளந்திரையன் கவிதைகள், உலகம் ஒரு குடும்பம், திருந்திய திருமணம், தமிழின் ஒரே கவிஞன், சுடர் ஏந்திய தமிழ் மலர்கள், தமிழ் தமிழன் தமிழ்நாடு, நெருப்பிலே மலர்ந்த தமிழ் மொழிப் பூக்கள், நெருப்பை வளர்க்கிறார்கள், ஒரு வணங்கா முடியின் கதை, சிலம்பின் சிறுநகை, பூத்தது மானுடம், நடைகொண்ட படைவேழம், கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, நஞ்சருக்குப் பஞ்சணையா?, வீறுகள் ஆயிரம், அன்னை நீ ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, காவல் துப்பாக்கி, உள்ளது உள்ளபடி, ஏழாயிரம் எரிமலைகள், தமிழ் தந்த பெண்கள், ஏன் இந்த மெத்தனம், கூட்டின் அமைதி குலைகிறது, இரண்டு குரல்கள், வெற்றி மலர்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், நேயப்பாட்டு, சமுதாய நோக்கு, புரட்சி முழக்கம், புதுத்தமிழ் முதல்வர்கள், புரட்சிக் கவிஞரின் கவிதை வளம்.        

குறிப்பு :

Ø  இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் 1971 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டுப் பழமொழிகளும் சமுதாயமும்  என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு திருப்புமுனை சிந்தனையாளர், எழுச்சி சான்றோர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

Ø  இவர் தமிழ்ப்பொழில், பிரசண்ட விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

Ø  இவர் சங்க கால மன்னான இளந்திரையனின் பெயரை புனைப்பெயராக வைத்துள்ளார்.

Ø  இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் போன்ற கழகத்தைத் தோற்றுவித்துள்ளார்.

Ø  இவர் தமிழ் எழுச்சி மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, எழுத்துச் சீர்திருந்த மாநாடு, அறிவியக்க மாநாடு போன்ற மாநாடுகளை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய மானுடம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிதைப் பூத்தது என்ற கவிதை புகழ் பெற்றுள்ளது.

Ø  இவரது உரை வீச்சு, புரட்சி முழக்கம் ஆகிய நூல்கள் தமிழக அரசின் பரிசுப் பெற்ற நூல்கள் ஆகும்.   

Ø  இவர் 1991 ல் பாவேந்தர் விருதினைப் பெற்றுள்ளார்.  

Ø  இவரை உலகப் பெருந்தமிழன் என்றும் அழைத்தனர்.    

மேற்கோள் :

v காசைப் பணத்தைப் பணியாதே………………………….

v எங்கும் புரட்சி எழுந்த பொழுது………………………….

v சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது………………………….     

Sunday

தேவதேவன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தேவதேவன்

இயற்பெயர் : பிச்சுமணி  

பிறந்த ஊர் : தூத்துக்குடி

காலம் :  1948

படைப்புகள் : புல்வெளியில் ஒருகல், விண்ணளவு பூமி, விரும்பியதெல்லாம், விடிந்தும் விடியாத பொழுது, ஒரு மரத்தையும் கூட காணவில்லை, மின்னற்பொழுதே தூரம், பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள், மார்கழி, குளித்தும் கரையேறாத கோபியர்கள்,நுழைவாசலிலே நின்றிவிட்டு கோலம், நார்சிஸஸ்வனம், மாற்றப்படாத வீடு, பூமியை உதறி எழுந்த மேகங்கள், சின்னஞ் சிறிய சோகம், நட்சத்திரமீன், அந்தரத்திலே ஓர் இருக்கை.      

குறிப்பு :

Ø  இவர் ஆசிரியராகப் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் ஈ.வே.ராமசாமியால் கைவல்யம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசு விருது, விளக்கு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது   ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக விருதையும் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2012 ல் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2005 ல் தேவ தேவன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றுள்ளார்.    

மேற்கோள் :

v  பொருளையே தேடுபவர்கள்………………………….

Thursday

ஞானக்கூத்தன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஞானக்கூத்தன்

இயற்பெயர் : ரங்கநாதன்  

புனைபெயர் : ஞானக்கூத்தன்   

பிறந்த ஊர் : மயிலாடுதுறை

காலம் : 1938

படைப்புகள் : இரட்டை நிழல், சூரியனுக்குப் பின்பக்கம், சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு, அன்று வேறு கிழமை, திருப்தி, நம்மை அது தப்பதோ, கடற்கரையில் சில மரங்கள், மீண்டும் அவர்கள்.

குறிப்பு :

Ø  இவரது முதல் கவிதையின் பெயர் பிரச்சினை ஆகும்.

Ø  இவருடைய ஞானக்கூத்தன் கவிதைகள் 1998 ல் வெளியானது.

Ø  இவர் தாமரை, கண்ணதாசன், நீலக்குயில்சலனம், வாசன், கசடதபற, ஞானரதம், நாற்றங்கால்,சதங்கை, வானம்பாடி, கணையாழி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

Ø  இவரை கவிஞர்களின் கவிஞர் என்று அழைத்தனர்.    

மேற்கோள் :

v  ஞாயிறுதோறும் தலைமறைவாகும்………………………….

v  சூளைச் செங்கல் குவியலிலே………………………….

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....