Monday

சாலை இளந்திரையன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சாலை இளந்திரையன்

இயற்பெயர் : மகாலிங்கம்

புனைபெயர்கள் : காஞ்சித் தலைவன், வீதியூர் நீதிக்கிழார், களக்காடு சா. பெரிய பெருமாள், பிள்ளைப்பாண்டியன்.      

பிறந்த ஊர் : திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல்

பெற்றோர் : இராமையா, அன்னலட்சுமி   

மனைவி பெயர் : சாலினி இளந்திரையன்

காலம் :  6/9/1930 – 4/10/1998

படைப்புகள் : காக்கைவிடு தூது, இளந்திரையன் கவிதைகள், உலகம் ஒரு குடும்பம், திருந்திய திருமணம், தமிழின் ஒரே கவிஞன், சுடர் ஏந்திய தமிழ் மலர்கள், தமிழ் தமிழன் தமிழ்நாடு, நெருப்பிலே மலர்ந்த தமிழ் மொழிப் பூக்கள், நெருப்பை வளர்க்கிறார்கள், ஒரு வணங்கா முடியின் கதை, சிலம்பின் சிறுநகை, பூத்தது மானுடம், நடைகொண்ட படைவேழம், கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, நஞ்சருக்குப் பஞ்சணையா?, வீறுகள் ஆயிரம், அன்னை நீ ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, காவல் துப்பாக்கி, உள்ளது உள்ளபடி, ஏழாயிரம் எரிமலைகள், தமிழ் தந்த பெண்கள், ஏன் இந்த மெத்தனம், கூட்டின் அமைதி குலைகிறது, இரண்டு குரல்கள், வெற்றி மலர்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், நேயப்பாட்டு, சமுதாய நோக்கு, புரட்சி முழக்கம், புதுத்தமிழ் முதல்வர்கள், புரட்சிக் கவிஞரின் கவிதை வளம்.        

குறிப்பு :

Ø  இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் 1971 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டுப் பழமொழிகளும் சமுதாயமும்  என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு திருப்புமுனை சிந்தனையாளர், எழுச்சி சான்றோர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

Ø  இவர் தமிழ்ப்பொழில், பிரசண்ட விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

Ø  இவர் சங்க கால மன்னான இளந்திரையனின் பெயரை புனைப்பெயராக வைத்துள்ளார்.

Ø  இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் போன்ற கழகத்தைத் தோற்றுவித்துள்ளார்.

Ø  இவர் தமிழ் எழுச்சி மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, எழுத்துச் சீர்திருந்த மாநாடு, அறிவியக்க மாநாடு போன்ற மாநாடுகளை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய மானுடம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிதைப் பூத்தது என்ற கவிதை புகழ் பெற்றுள்ளது.

Ø  இவரது உரை வீச்சு, புரட்சி முழக்கம் ஆகிய நூல்கள் தமிழக அரசின் பரிசுப் பெற்ற நூல்கள் ஆகும்.   

Ø  இவர் 1991 ல் பாவேந்தர் விருதினைப் பெற்றுள்ளார்.  

Ø  இவரை உலகப் பெருந்தமிழன் என்றும் அழைத்தனர்.    

மேற்கோள் :

v காசைப் பணத்தைப் பணியாதே………………………….

v எங்கும் புரட்சி எழுந்த பொழுது………………………….

v சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது………………………….     

Sunday

தேவதேவன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தேவதேவன்

இயற்பெயர் : பிச்சுமணி  

பிறந்த ஊர் : தூத்துக்குடி

காலம் :  1948

படைப்புகள் : புல்வெளியில் ஒருகல், விண்ணளவு பூமி, விரும்பியதெல்லாம், விடிந்தும் விடியாத பொழுது, ஒரு மரத்தையும் கூட காணவில்லை, மின்னற்பொழுதே தூரம், பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள், மார்கழி, குளித்தும் கரையேறாத கோபியர்கள்,நுழைவாசலிலே நின்றிவிட்டு கோலம், நார்சிஸஸ்வனம், மாற்றப்படாத வீடு, பூமியை உதறி எழுந்த மேகங்கள், சின்னஞ் சிறிய சோகம், நட்சத்திரமீன், அந்தரத்திலே ஓர் இருக்கை.      

குறிப்பு :

Ø  இவர் ஆசிரியராகப் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் ஈ.வே.ராமசாமியால் கைவல்யம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசு விருது, விளக்கு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது   ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக விருதையும் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2012 ல் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2005 ல் தேவ தேவன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றுள்ளார்.    

மேற்கோள் :

v  பொருளையே தேடுபவர்கள்………………………….

Thursday

ஞானக்கூத்தன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஞானக்கூத்தன்

இயற்பெயர் : ரங்கநாதன்  

புனைபெயர் : ஞானக்கூத்தன்   

பிறந்த ஊர் : மயிலாடுதுறை

காலம் : 1938

படைப்புகள் : இரட்டை நிழல், சூரியனுக்குப் பின்பக்கம், சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு, அன்று வேறு கிழமை, திருப்தி, நம்மை அது தப்பதோ, கடற்கரையில் சில மரங்கள், மீண்டும் அவர்கள்.

குறிப்பு :

Ø  இவரது முதல் கவிதையின் பெயர் பிரச்சினை ஆகும்.

Ø  இவருடைய ஞானக்கூத்தன் கவிதைகள் 1998 ல் வெளியானது.

Ø  இவர் தாமரை, கண்ணதாசன், நீலக்குயில்சலனம், வாசன், கசடதபற, ஞானரதம், நாற்றங்கால்,சதங்கை, வானம்பாடி, கணையாழி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.

Ø  இவரை கவிஞர்களின் கவிஞர் என்று அழைத்தனர்.    

மேற்கோள் :

v  ஞாயிறுதோறும் தலைமறைவாகும்………………………….

v  சூளைச் செங்கல் குவியலிலே………………………….

கல்யாண்ஜி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கல்யாண்ஜி

இயற்பெயர் : எஸ். கல்யாணசுந்தரம்  

புனைபெயர் : வண்ணதாசன், கல்யாண்ஜி   

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1946

படைப்புகள் : தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், அந்நியமற்ற நிதி, ஆதி, புலரி, இன்று ஒன்று நன்று, சின்னு முதல் சின்னு வரை, கல்யாண்ஜி கவிதைகள்,மணலுள்ள ஆறு, முன்பின், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, நடுகை, கனிவு, ஒளியிலே தெரிவது, அணில்நிறம், கனியான பின்னும் நுனியில் பூ, பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும், சிநேகிதங்கள், கிருஷ்ணன் வைத்த வீடு, உயரப் பறத்தல்.  

குறிப்பு :

Ø  இவர் வண்ணதாசன் என்ற புனைப் பெயரை சிறுகதைகளுக்கும் கல்யாண்ஜி என்ற புனைப் பெயரை கவிதைகளுக்கும் பெற்றார்.

Ø  இவர் தீபம் என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய தந்தை தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.

Ø  இவர் அகம் புறம் என்ற கவிதை தொகுப்பு ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது.

Ø  இவர் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடித இலக்கியத்தையும் படைத்துள்ளார்.

Ø  இவர் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2016 ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

Ø  இவருடைய ஒரு சிறு இசை என்ற நூலுக்கு 2016 ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.      

மேற்கோள் :

v  உன் பாடல்களை நீயே எழுது………………………….

Wednesday

கலாப்ரியா

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கலாப்ரியா

இயற்பெயர் : தி.சு.சோமசுந்தரம்

பெற்றோர் : கந்தசாமி, சண்முகவடிவு

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1950

படைப்புகள் : அனிச்சம், வெள்ளம், நான் நீமின், தீர்த்த யாத்திரை, மற்றாங்கே, சுயம்வரம், எட்டயபுரம், எல்லாம் கலந்த காற்று, வனம் புகுதல், உலகெல்லாம் சூரியன், கலாப்ரியா கவிதைகள், உருள்பெருந்தேர், ஓடும் நதி, நினைவின் தாழ்வாரங்கள், ஞானபீடம், வானம் புதுக்கல்.  

குறிப்பு :

Ø  இவர் கசடதபற, தீபம், கணையாழி, வானம்பாடி, தெறிகள், சுவடு, ழ ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

Ø  இவருடைய கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Ø  இவர் பொருணை என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் கண்ணதாசன் இலக்கிய விருது, கலைமாமணி விருது, கவிஞர் சிற்பி இலக்கிய விருது, விகடன் விருது, சுஜாதா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

Ø  இவருடைய முதல் கவிதை நூல் தீர்த்த யாத்திரை ஆகும்.  

Ø  இவருடைய கவிதைகள் புதுமைபித்தனின் உரைநடை போல இருந்தது. அதற்கு அவர் புதுமைபித்தனின் பார்வையை வாங்கி என் பாதிப்பில் எழுதினேன் என்று கூறியுள்ளார்.

Ø  இவரது கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள் என்று தி.ஜானகிராமன் குறிப்பிட்டுள்ளார்.  

மேற்கோள் :

v  காயங்களுடன் கதறலுடன்………………………….

v  அழகாய் இல்லாததால்………………..

v  கூட்டிலிருந்து தவறி விழுந்த………………..   

Tuesday

அப்துல்ரகுமான்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

அப்துல்ரகுமான்

இயற்பெயர் : அருள்வண்ணன்

பெற்றோர் : மஹி, ஜைனத் பேகம்

பிறந்த ஊர் : மதுரை

காலம் : 1937

படைப்புகள் : சிலந்தியின் வீடு, தீபங்கள் எரியட்டும், பறவைகளின் பாதை, பால்வீதி, கரைகளே நதியாவதில்லை, சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், நேயர் விருப்பம், முட்டைவாசிகள், பித்தன், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, ஆலாபனை, சொந்தச் சிறைகள், இல்லையிலும் இருக்கிறான், எம்மொழி செம்மொழி, தேவகானம், சலவை மொட்டு, தீக்குச்சி, ஆல்போல் விழுந்தவன், விலங்குகள் இல்லாத கவிதை, உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், குணங்குடியார் பாடற் கோவை.   

குறிப்பு :

Ø  இவர் தமிழ் அன்னை விருது மற்றும் பாரதி தாசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Ø  இவருடைய ஆலாபனை என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.

Ø  இவர் கவிக்கோ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Ø  இவரை மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று போற்றுகின்றனர்.

Ø  இவர் ஹைக்கூ, கஜல் போன்ற கவிதைகளை தமிழில் வழங்கியுள்ளார்.

மேற்கோள் :

v  இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள்…………………..

v  வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக…………………………….

v  தீப மரத்தின் தீக்கனி உண்ண விட்டில் வந்தது…………………………………….

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....