Showing posts with label TNPSC New Syllabus. Show all posts
Showing posts with label TNPSC New Syllabus. Show all posts

Tuesday

TNPSC Tamil New Syllabus 2024 - Part III

TNPSC Tamil New Syllabus 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

 

    கட்டாயத் தமிழ்  மொழித் தகுதித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டம்

 

நேரடி நியமனத்திற்கான பதவிகள்:

 

தொகுதி – III

தொகுதி – IV

தொகுதி VII - B

(செயல் அலுவலர், நிலை - III , இந்து சமய அறநிலையத் துறை)

தொகுதி –

(செயல் அலுவலர், நிலை - IV , இந்து சமய அறநிலையத் துறை)

Jailor (சிறை அலுவலர்)

Assistant Jailor (உதவி சிறை அலுவலர்)

 

பாடத்திட்டம் – பொதுத்தமிழ் (கொள்குறிவகைத் தேர்வு)

           (பத்தாம் வகுப்புத் தரம்)

             பகுதி

               இலக்கணம்

1. பொருத்துதல்பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ்  பெற்ற

நூல், நூலாசிரியர்

2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்படும் நூல்.

3. பிரித்தெழுதுக.

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

5. பொருந்தாச் சொல்லைக் கண் டறிதல்.

6. பிழைதிருத்தம் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச்சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.

9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்.

1௦. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்.

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல்.

15. இலக்கணக் குறிப்பறிதல்.

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல்.

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

2௦. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்.

21. பழமொழிகள்.

                                         பகுதி

               இலக்கியம்

 

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை,  கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள், பாவகை, சிறந்த தொடர்கள்.

.4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,

 கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

5. சிலப்பதிகாரம், மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

7. சிற்றிலக்கியங்கள்:

திருக்குற்றாலக்குறவஞ்சிகலிங்கத்துப்பரணிமுத்தொள்ளாயிரம்,

தமிழ்விடு தூதுநந்திக்கலம்பகம்முக்கூடற் பள்ளுகாவடிச்சிந்து - முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் - இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மானோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இறட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.

9. நாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.

10. சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப் புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

                       பகுதி

  தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்

 

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.  

2. மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

3. புதுக்கவிதை.பிச்சமூர்த்தி, சீ.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், காலப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம்நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.

7. கலைகள்சிற்பம்ஓவியம்பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.

8. தமிழின் தொன்மை – தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.

9. உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.

10. .வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.

11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.

12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள். 13. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர் – காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத் தொண்டு.

14. தமிழகம்ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ் பணியும்.

16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.

17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18. தமிழர் வணிகம்தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்.

19. உணவே மருந்து நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.

21. நூலகம் பற்றிய செய்திகள். 

Monday

TNPSC Tamil New Syllabus 2024 - Part II

 TNPSC Tamil New Syllabus

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

கட்டாயத் தமிழ்  மொழி தகுதித் தேர்விற்கான திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறி வகை)

 

குறிப்பு:-

தொகுதி-VI

(வனத் தொழில் பழகுநர்)

தொகுதி-VIIA

(செயல் அலுவலர், நிலை-I, இந்துசமய அறநிலையத் துறை)

மற்றும் இதர ஒரு நிலை கொண்ட போட்டித் தேர்வுகள்


கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்

(கொள்குறி வினாவிற்கான தலைப்புகள்)


           பத்தாம் வகுப்பு தரம்

 

1. பிரித்தெழுதுதல் / சேர்த்தெழுதுதல்.

2. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

4. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) மரபுப் பிழைகள்,

வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.

5. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்.

7. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

8. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

9. வேர்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையச்சம்,

வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்.

10. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.

11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்.

12. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்.

(.கா.) குவிந்து-குவித்து

13. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

14. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை,

பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்

கண்டெழுதுதல்.

15. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்

தேர்ந்தெழுதுதல்

16. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்)

17. விடை வகைகள்.

18. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல் (.கா.) கோல்டு பிஸ்கட்தங்கக் கட்டி.

19. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (.கா.) தஞ்சாவூர்தஞ்சை

20. நிறுத்தற்குறிகளை அறிதல்.

21. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு (வாரான்வருகிறான்).

22. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

23. பொருத்தமான காலம் அமைத்தல்

(இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்).

24. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

25. சரியான இணைப்புச் சொல்

(எனவே, ஏனெனில், ஆகையால், அதனால், அதுபோல).

26. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

27. இருபொருள் தருக.

28. குறில்நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு.

29. கூற்று, காரணம்சரியா? தவறா?

30. கலைச் சொற்களை அறிதல் :-

.கா. – Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு

Super Computer - மீத்திறன் கணினி

31. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

32. சொற்களின் கூட்டுப் பெயர்கள் (.கா.) புல் புற்கள்

33. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்தல்

34. பிழை திருத்துதல் (ஒரு-ஓர்)

35. சொல்பொருள்பொருத்துக

36. ஒருமை - பன்மை பிழை

37. பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....