Showing posts with label tnpsc study material. Show all posts
Showing posts with label tnpsc study material. Show all posts

Sunday

தேவதேவன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தேவதேவன்

இயற்பெயர் : பிச்சுமணி  

பிறந்த ஊர் : தூத்துக்குடி

காலம் :  1948

படைப்புகள் : புல்வெளியில் ஒருகல், விண்ணளவு பூமி, விரும்பியதெல்லாம், விடிந்தும் விடியாத பொழுது, ஒரு மரத்தையும் கூட காணவில்லை, மின்னற்பொழுதே தூரம், பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள், மார்கழி, குளித்தும் கரையேறாத கோபியர்கள்,நுழைவாசலிலே நின்றிவிட்டு கோலம், நார்சிஸஸ்வனம், மாற்றப்படாத வீடு, பூமியை உதறி எழுந்த மேகங்கள், சின்னஞ் சிறிய சோகம், நட்சத்திரமீன், அந்தரத்திலே ஓர் இருக்கை.      

குறிப்பு :

Ø  இவர் ஆசிரியராகப் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் ஈ.வே.ராமசாமியால் கைவல்யம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசு விருது, விளக்கு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது   ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக விருதையும் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2012 ல் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2005 ல் தேவ தேவன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றுள்ளார்.    

மேற்கோள் :

v  பொருளையே தேடுபவர்கள்………………………….

Thursday

கல்யாண்ஜி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கல்யாண்ஜி

இயற்பெயர் : எஸ். கல்யாணசுந்தரம்  

புனைபெயர் : வண்ணதாசன், கல்யாண்ஜி   

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1946

படைப்புகள் : தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், அந்நியமற்ற நிதி, ஆதி, புலரி, இன்று ஒன்று நன்று, சின்னு முதல் சின்னு வரை, கல்யாண்ஜி கவிதைகள்,மணலுள்ள ஆறு, முன்பின், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, நடுகை, கனிவு, ஒளியிலே தெரிவது, அணில்நிறம், கனியான பின்னும் நுனியில் பூ, பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும், சிநேகிதங்கள், கிருஷ்ணன் வைத்த வீடு, உயரப் பறத்தல்.  

குறிப்பு :

Ø  இவர் வண்ணதாசன் என்ற புனைப் பெயரை சிறுகதைகளுக்கும் கல்யாண்ஜி என்ற புனைப் பெயரை கவிதைகளுக்கும் பெற்றார்.

Ø  இவர் தீபம் என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய தந்தை தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.

Ø  இவர் அகம் புறம் என்ற கவிதை தொகுப்பு ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது.

Ø  இவர் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடித இலக்கியத்தையும் படைத்துள்ளார்.

Ø  இவர் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2016 ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

Ø  இவருடைய ஒரு சிறு இசை என்ற நூலுக்கு 2016 ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.      

மேற்கோள் :

v  உன் பாடல்களை நீயே எழுது………………………….

Wednesday

மு.மேத்தா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

மு.மேத்தா

இயற்பெயர் : முகமது மேத்தா 

பிறந்த ஊர் : பெரியகுளம்

காலம் : 1954

படைப்புகள் : ஊர்வலம், கண்ணீர்ப்பூக்கள், அவர்கள் வருகிறார்கள், நடந்த நாடகங்கள், மனச்சிறகு, நந்தவன நாட்கள், முகத்துக்கு முகம், காத்திருந்த காற்று, திருவிழாவில் ஒரு தெருப்பாடகன், ஒரு வானம் இரு சிறகு, இதயத்தில் நாற்காலி, வெளிச்சம் வெளியே இல்லை, அவளும் நட்சத்திரம்தான், சோழ நிலா, மகுட நிலா, நானும் என் கவிதையும், ஆங்காங்கே அம்புகள், மேத்தாவின் முன்னுரைகள், நினைத்தது நெகிழ்ந்தது.     

குறிப்பு :

v  இவர் கல்லூரி பேராசிரியராகவும், திரைப்பட பாடல் ஆசிரியராகவும் பணி செய்துள்ளார்.

v  இவர் புதுக்கவிதைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததில் இவருடைய பங்கு மிகுதி.  

v  இவருடைய ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்ற நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பெற்றது.

v  இவரின் ஊர்வலம் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள் :

Ø  நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்……………

Ø  இதயத்தை தொட்டு விடும் இசை……………

Ø  என்னுடைய சம்பள நாளில்……………

Ø  பூக்களிலே நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன்……………

Monday

சிற்பி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சிற்பி

இயற்பெயர் : பாலசுப்பிரமணியன்

பெற்றோர் : பொன்னுசாமிக் கவுண்டர், கவுண்டியம்மாள் 

பிறந்த ஊர் : பொள்ளாச்சி

காலம் : 1936

படைப்புகள் : சூரிய நிழல், நிலவுப்பூ, சிரித்த முத்துக்கள்,மௌன மயக்கங்கள், ஒளிப்பறவை, சரப்பயாகம், புன்னகை பூக்கும் பூனைகள், கிராமத்து நதி, தமிழ் இலக்கிய வரலாறு, அக்னி சாட்சி, ஒரு சங்கீதம் போல, வாரணாசி, ஆதிரை, வண்ணப்பூக்கள், புதிர் எதிர்காலம், மகாகவி, மகாத்மா, நீலக்குருவி, தேவயானி, மின்னல் கீற்று, இல்லறமே நல்லறம், சிற்பி தரும் ஆத்திச்சூடி, மூடுபனி, மார்கழிப்பாவை, பாரதி கைதி எண் 203, பூஜ்ஜியங்களின் சங்கிலி, இராமலிங்க வள்ளலாரின் அருட்பா.          

குறிப்பு :

Ø  இவரை வானம்பாடி கவிஞர் என்றும் படிமக் கவிஞர் என்றும் இதழ்க் கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார்.

Ø  இவர்தான் வானம்பாடி இதழின் பொறுப்பு ஆசிரியராக பணிப்புரிந்துள்ளார். 

Ø  இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மாரத்தி மொழிக்களில் வெளிவந்துள்ளது.

Ø  பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் நடராச பால சுப்பிரமணிய சேது ராமசாமி.

Ø  கிராமத்து நதி, அக்னி சாட்சி என்ற இரு நூல்களுக்கும் சாகித்திய அகாடமி பரிசுப் பெற்றுள்ளது.

Ø  இவர் தமிழக அரசு விருது, பாவேந்தர் விருது, பாஸ்கர சேதுபதி விருது, ராணா விருது, கபிலர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.     

மேற்கோள் :

v  கையில்லாதவன் கண்ணில் வழியும்……………..

v  நானோ தலையில் சிக்கிய கோழை……………..


Thursday

சி.மணி

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சி.மணி

இயற்பெயர் : பழனிச்சாமி

புனைபெயர் : சி.மணி, வே.மாலி   

காலம் : 1936 -2009

படைப்புகள் : ஒளிச்சேர்க்கை, வரும் போகும், இதுவரை, நகரம், யாப்பும் கவிதையும், தாவோ தேஜிங், தோண்டு கிணறும் அமைப்பும், டேனியா செயல்முறைத் திட்டம்

குறிப்பு :

Ø  இவர் எழுத்து என்ற இதழில் கவிஞராக பணியாற்றியுள்ளார்.  

Ø  இவர் தமிழில் நவீன கவிதைகளை அறிமுகம் செய்தவர்.

Ø  இவர் கவிஞர் சிற்பி விருது, இலக்கிய விருது, ஆசான் கவிதை விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தஞ்சை தமிழ் பல்கலைகழக விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 

Ø  இவர் டி.எஸ்.இலியட் எழுதிய பாழ்நிலம் என்ற கவிதையை மொழிபெயர்ந்துள்ளார்.

மேற்கோள் :

v  என்ன செய்வதிந்த கையை என்றேன்……………….

Saturday

பசுவய்யா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

பசுவய்யா

இயற்பெயர் : சுந்தர ராமசாமி

பிறந்த ஊர் : நாகர்கோவிலில் உள்ள மகாதேவர் கோவில்   

காலம் : 30/5/1931 – 14/10/2005  

படைப்புகள் : நடுநிசி நாய்கள், ஜே.ஜே. சில குறிப்புகள், காற்றில் கரைந்த பேரோசை, யாரோ ஒருவனுக்காக, ஒரு புளியமரத்தின் கதை, அக்கரைச் சீமையில், பிரசாதம், வாழ்க சந்தேகங்கள், மூன்று நாடகங்கள், வானமே இளவெயிலே மரச்செறிவே, இறந்தகாலம் பெற்ற உயிர், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், தண்ணீர் அடைக்கலம், அகம், ஆளுமைகள், மதிப்பீடுகள், அந்த ஐந்து நிமிடங்கள்,லல்வு, கைக்குழந்தை, செங்கமலமும் ஒரு சோப்பும், கிடாரி, பக்த துளசி, ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு, ஸ்டாம்பு ஆல்பம், லீலை, தயக்கம், பள்ளம், டால்டாய்ஸ் தாத்தாவின் கதை.          

குறிப்பு :

Ø  இவர் சாந்தி, சதங்கை, ஞானரதம், தீபம், இலக்கியவட்டம், கசடதபற, போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

Ø  தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் என்ற இரண்டு புதினங்களையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவருக்கு குமரன் ஆசான் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினையும் 2001 ல் இவர் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2004 ல் கதா சூடாமணி விருது வழங்கப்பட்டது.  

Ø  இவரை புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம் என்றும் அழைத்தனர்.

Ø  இவருக்கு சுந்தரராமசாமி என்ற பெயரில் தமிழ் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Ø  இவர் காலச்சுவடு என்ற பத்திரிக்கையை 1988 ல் நடத்தியுள்ளார்.    

Ø  தொலைவிலிருந்து கவிதைகள் இவரது மொழி பெயர்ப்பு நூல் ஆகும்.

Ø  இவர் மலையாளம், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் நூல்களை மொழி பெயர்ந்துள்ளார்.

Ø  இவர் நினைவோடைகள் என்ற தலைப்பில் நாகராஜன், க.நா.சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், பிரமிள், ஜீவா, கிருஷ்ணன்நம்பி, சி.த.செல்லப்பா ஆகியோரைப் பற்றி எழுதியுள்ளார்.

மேற்கோள் :

v  நகத்தை வெட்டியெறி………………..

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....