Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil study material Part-B Thirukkural


           அடக்கமுடைமை

                     அறத்துப்பால்

                       அதிகாரம்(13)

                   அறம்: இல்லறவியல்

1.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்ந்து விடும்.
விளக்கம்: அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும்.அடக்கம்இல்லாதவனை இருள் கொண்ட வாழ்க்கை சூழ்ந்து விடும்.

2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
விளக்கம்: அடக்கத்தை ஒரு செல்வமாக மதித்துக் காக்க வேண்டும்.அடக்கத்தை உயிரினும் மேலாக கருதுவர்.

3.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.
விளக்கம்: அறிய வேண்டியவற்றை அறிந்து நடப்பதே அறிவுடைமை ஆகும்.அவ்வாறு நடந்தால் பாராட்டும்,புகழும் கிடைக்கும்.

4.நிலையிற் றிரியாது தடங்கியான் றோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்: ஐம்புலன்களை தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கி வாழ்பவனுடைய உயர்வு மலையை விடப் பெரியதாகும்.

5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
விளக்கம்: ஒருவன் எல்லாரையும் பணிந்து நடந்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும்.செல்வத்தை விட மிகப் பெரிய செல்வமாக கருதப்படும்.

6.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம்: ஒரு பிறவியில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்ந்தால்,அது அவனுக்கு மறு பிறவியிலும் நல்ல பயன் தரும்.

7.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவன் தன் நாவை அடக்கி காக்க வேண்டும்.அவ்வாறு காக்க விட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்புறுவர்.

8.ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம்: ஒருவன் தீய சொற்களால் பிறரை துன்பப் படுத்தினால்,அது அவனுக்கு வரும் நன்மையும் தீமையாக முடியும்.

9.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
விளக்கம்: தீயினால் சுட்டபுண் உடம்பில் ஆறி விடும்.ஆனால் நாவினால் பேசுவது மனத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.

10.கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
விளக்கம்: யாரிடமும் கோபம் கொள்ளாது அடக்கம் உடையவனாக வாழ்ந்தால்,அறக்கடவுள் காலம் பார்த்துக் காத்திருப்பார்.

TNPSC Tamil study material Part-B Thirukkural


                      அறிவுடைமை

                         பொருட்பால்

                                                             அதிகாரம்(43)

                                                           அறம்- அரசியல்

1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
விளக்கம்: அறிவு என்பது அழிவிலிருந்து நம்மை காக்கும் கருவியாகும்.பகைவர்களால் அழிக்க முடியாத கருவியாகும்.

2.சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்பது தறிவு.
விளக்கம்: மனம் போகும் பாதையில் தானும் போகாமல்,தீமையை விட்டு நன்மையானவற்றை செய்வதே சிறந்த அறிவாகும்.

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: ஏதாவது ஒரு செய்தியை யார் கூறினாலும்,அச்செய்தியின் கருத்தை ஆராய்ந்து அறிவது அறிவு ஆகும்.

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
விளக்கம்: தான் சொல்லும் கருத்தை மற்றவர்கள் எளிதாக புரியவும்,மற்றவர்கள் சொல்லும் கருத்தை புரிந்து கொள்வதும்,அறிவுடையார்களின் செயலாகும்.

5.உலகந் தழீஇயது தொட்பம் மலர்தலுங்
கூம்பலு இல்ல தறிவு.
விளக்கம்: உலகத்தை புரிந்து நடப்பதே சிறந்த அறிவு.தெளிவும்,கலக்கமும் மாறிமாறி வந்தாலும் ஒரே சீராக இருப்பதே அறிவு.

6.எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வது துறைவ தறிவு.
விளக்கம்: உலக்கத்தோடு ஒத்து நடப்பதே அறிவாகும்.எனக்கு எல்லாம் தெரியும் என்று யார் கூறுவதையும் கேட்கமல் இருந்தால் பாவமும் பழியும் வந்து சேரும்.

7.அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
விளக்கம்: அறிவுடையவர்கள்,எதிர்காலத்தில் வர போவதை அறிந்து செயல்படுவர்.அறிவில்லாதவர் பின்விளைவை நோக்காது செயல்படுவர்.

8.அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
விளக்கம்: அஞ்சத்தக்கத்தைக் கண்டு அஞ்சுவது அறிவுடையார்களின் செயலாகும்.அஞ்சாமல் இருப்பது அறிவில்லாதவர்களின் செயலாகும்.

9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு கில்லை
அதிர வருவதோர் நோய்.
விளக்கம்: பின்வர போவதை முன்னே அறிந்து தன்னை காத்து கொள்பவர்கள் அறிவுடையவர்கள்,அவர்களுக்கு எந்த துன்பமோ நோயோ வராது.

10.அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் மிலர்.
விளக்கம்: அறிவுடையவர் எல்லாம் உடையவராக கருதப்படுவர்,அறிவு இல்லாதவரிடம் எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவர்.