Showing posts with label TNPSC Tamil Notes 2024.. Show all posts
Showing posts with label TNPSC Tamil Notes 2024.. Show all posts

Thursday

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இயற்பெயர் : கல்யாணசுந்தரம்  

பெற்றோர் : அருணாச்சலம், விசாலாட்சி

பிறந்த ஊர் : பட்டுக்கோட்டை அருகே உள்ள சொக்கப்படுத்தான் காடு  

காலம் : 13/04/1930 – 8/10/1959

சிறப்புப்பெயர்கள் : பாடல் மேதை, பாட்டாளி கவிஞர், மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், திரையிசை திருவள்ளுவர்.                

குறிப்பு : 

Ø  இவர் கண்ணதாசனைப் போல பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

Ø  இவருடைய முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா” என்பது ஆகும். இது படித்த பெண் என்ற படத்தில் வந்துள்ளது.  

Ø  இவரின் கவிதைகள் ஜனசக்தி என்ற இதழில் வந்தது.

Ø  பாரதிதாசன் இவரை எனது வலதுகை என்று புகழ்ந்துள்ளார்.

Ø  பொதுவுடைமை கருத்துக்களை திரைப்பட பாடல்களில் கொன்டுவந்தவர்.

Ø  நீ மீண்டும் தோன்றிய பாரதியாட என்று ஜீவானந்தம் என்று இவரை கூறினார்.

Ø  இவர் சினிமா துறையில் ஒன்பது ஆண்டுகள் இருந்துள்ளார் அதில் இவர் 106 பாடல்களை எழுதியுள்ளார்.  

Ø  மக்கள் எழுச்சியும் சமுதாய முன்னேற்றமும் இவருடைய இரு கண்கள் என கருதினார்.

Ø  இவர் ஒரு விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி போன்ற 17 தொழில்க்களை செய்துள்ளார்.

Ø  இவருடைய முத்திரை வினா

*      சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்     

மேற்கோள் :

v  தூங்காதே தம்பி தூங்காதே………..

v  ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – மனிதன்………….

v  உச்சி மலையிலே ஊரும் அருவிகள்………….

v  எளிய தமிழில் சீர்திருத்த கருத்துகளையும்…………

v  திருடாதே பாப்பா திருடாதே……………

v  காடு வௌஞ்சென்ன மச்சான்…………..    

Wednesday

உடுமலை நாராயண கவி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

உடுமலை நாராயண கவி

இயற்பெயர் : நாராயணசாமி  

பெற்றோர் : கிருஷ்ணசாமிசெட்டியார், முத்தம்மாள்    

பிறந்த ஊர் : கோயம்புத்தூரில் உள்ள உடுமலைப்பேட்டை

காலம் : 25/9/1899 - 23/5/1981

சிறப்புப்பெயர்கள் : பகுத்தறிவு கவிராயர், கலைமாமணி, கவிவாணர், பெரியார் பெருந்தொண்டர்.              

குறிப்பு :

Ø  நாட்டுப்புறப் பாடல் மொட்டுகளைத் திரைபடத்திற்கு அறிமுகம் செய்தவர்.

Ø  கலைவாணர் என. எஸ். கிருஷ்ணவால் திரை உலகத்திற்கு வந்தார்.

Ø  இவர் நாடகங்கள் உரையாடல்கள் பாடல்கள் என பல  எழுதியுள்ளார்.

Ø  இவர் திரைப்பட ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.

Ø  கிராமியக் கலைகளிலும் நாடகக் கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Ø  சுதந்திரப் போராட்டம் இவரை தேசப்பற்று பாடல்களை எழுத தூண்டியது.

Ø  இவருடைய 25 வது வயதில் கதர்க்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதனை ஊர் ஊர்ராக எடுத்துச் சென்று விற்றார்.

Ø  இவர் தனது ஊரை விட்டு வாணிகத்திற்காக மதுரைக்குச் சென்றார். அங்கு சுவாமி சங்கரதாஸ் என்பவரிடம் யாப்பிலக்கணம் கற்றார்.

Ø  இவர் எழுதிய திரைப்பாடல்கள் ஓர்இரவு, வேலைக்காரி, பராசக்தி, மனோகரா, பிரபாவதி, ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்றவை.

Ø  இவர் கலைமாமணி பட்டமும் இராசராண் விருதும் பெற்றார்.

Ø  இவர் சீர்திருத்த கருத்துக்களை முதன்முதலில் திரைப்படத்தில் கொண்டு வந்தார்.

Ø  திருக்குறள் கருத்துக்களையும் மிகுதியாக பயன்படுத்தியுள்ளார்.

Ø  இவரது பாடல்கள் ஜனசக்தி என்ற பத்திரிக்கையில் வெளிவத்துள்ளது.

Ø  எனது வலதுகை என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

Ø  இவருடைய பாடல்கள்

*      பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே – தூக்குத் தூக்கி

*      குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது – இரத்தக் கண்ணீர்

*      போகாதே போகாதே என்கணவா பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன் – மாயாஜோதி (கட்டபொம்மு கூத்து)   

*      பக்தி முக்கியம் அந்தகாலம் படிப்பு முக்கியம் இந்தகாலம்.  

மேற்கோள் :

v  தடை நடையே அவர் எழுத்தில் இல்லை………….

v  வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை…………..  

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....