GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக
விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
நாமக்கல்
கவிஞர்
இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை
பெற்றோர் : வெங்கட்ராமன், அம்மணி அம்மாள்
காலம் : 19/10/1888 – 24/8/1972
பிறந்த ஊர் : நாமக்கல் மாவட்டம் மோகனூர்
சிறப்புப்பெயர்கள் : நாமக்கல் கவிஞர், காந்திய கவிஞர், காங்கிரஸ் புலவர்
நூல்கள் : தமிழன் இதயம், சங்கொலி, தமிழ்மணம், தமிழ்த்தேர், அவனும்
அவளும், மாமன் மகள், சரவண சுந்தரம், மலைக்கள்ளன், இசைத்தமிழ், கவிதாஞ்சலி,
பிராத்தனை, இலக்கிய இன்பம், தாயார் கொடுத்ததனம், தேமதுரத் தமிழோசை.
குறிப்பு :
F என் கதை – அவருடைய வாழ்க்கை
வரலாற்று நூல்
F இவருடைய பாடல்கள் சமுதாய மலர் என்ற தலைப்பில் வெளி
வந்துள்ளது.
F இவர் சிறந்த ஓவியர் ஆவார். இவருடைய முதல் ஓவியம்
இராமகிருஷ்ணர்.
F இவருடைய முதல் கவிதை வந்தே மாதரம் ஆகும்.
F இவருடைய இதழ் லோகமித்திரன்
F தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர் ஆவார்.
சிறப்பு :
v பாரதி – பலே பாண்டியா
நீர் ஒரு புலவர் ஐயமில்லை.
v இராசகோபால் – திலகர் விதைத்த
வித்து பாரதியாக முளைத்து காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது.
v வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை பற்றி
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமென்று
வருகுது” என்று பாடினார்.
v “தமிழனென்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று உணர்ச்சி ஊட்டிய கவிஞர் இவர்.
v நடுவணரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது
வழக்கியுள்ளது.
No comments:
Post a Comment