Thursday

முடியரசன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

முடியரசன்

இயற்பெயர் : துரைராசு

பெற்றோர் : சுப்பராயலு, சீதாலட்சுமி

பிறந்த ஊர் : தேனி மாவட்டம் பெரியகுளம்

காலம் : 7/10/1920 – 3/12/1998

சிறப்புப்பெயர்கள் : திராவிட இயக்கக் கவிஞர்

நூல்கள் : வீரகாவியம், பூங்கொடி காவியம், காவியப்பாவை, பாடும் குயில், சுவரும் சுண்ணாம்பும், முடியரசன் கவிதைகள், ஞாயிறும்  திங்களும், மனிதனை தேடுகிறேன், நெஞ்சம் பொறுக்குதில்லையே.

குறிப்பு :

F காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

F இவருடைய பூங்கொடி என்ற காவியத்திற்கு 1966 ல் தமிழக அரசு பரிசு வழங்கியது. மற்றும் இந்த காவியம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது.

F முடியரசன் கவிதைகள் என்ற நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

F பிரம்பு மலையில் நடத்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கியது.

F இவருடைய கவிதைகளைச் சாகித்திய அகாடெமி அமைப்பு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ந்துள்ளது.

F இவர் சடங்குகளை மறுப்பவர், நான் இறந்தாலும் எந்த செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.

F இவரது கவிதைகள் போர்வாள், குயில், கதிரவன் போன்ற இதழ்களில் வெளியானது.

F இவருடைய கவிதைகள் பொன்னி இதழில் வெளிவந்தால் இவரைப் பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்தனர். ஏனென்றால் இவர் பாரதிதாசனின் பரம்பரை கவிஞர்களில் மூத்தவர் ஆவார்.

F இவர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாரைப் பற்றி ஊன்றுகோல் என்ற நாடகத்தை இயற்றியுள்ளார்.

F தமிழ்நாட்டின் வானம்பாடி என்று அறிஞர் அண்ணா புகழுந்துள்ளார்.

F இவர் தமிழ் என் தாய், தமிழ் என் தெய்வம், தமிழ் என் தந்தை, தமிழ் என் காதலி, தமிழ் என் மகன் என்று பல்வேறு தலைப்புகளில் தமிழைப் பற்றி எழுதி உள்ளார்.

F சுயசரிதை – பாட்டு பறவையின் வாழ்க்கை பயணம்.

மேற்கோள் :

è வயலுக்கு வரப்பொன்றும் வேண்டாம் என்றால்.........

è இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை..........

è காட்சிக்கு புலியாகி கொடுமை மாலி..........

è ஆங்கிலமோ பிற மொழியோ பயின்று விட்டால்..........

è மணவினையில் தமிழுண்டோ பயின்றார்.........

è ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் ஆள்க...........

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....