Showing posts with label TNPSC New Study Material. Show all posts
Showing posts with label TNPSC New Study Material. Show all posts

Wednesday

ஆலந்தூர் மோகனரங்கன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஆலந்தூர் மோகனரங்கன்

இயற்பெயர் :

பிறந்த ஊர் : செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர்

பெற்றோர் : கோபால், மீனாம்பாள்

படைப்புகள் : பள்ளிப் பறவைகள், மோகனரங்கன் கவிதைகள், இமயம் எங்கள் காலடியில், சித்திரப் பந்தல், காலக்கிளி, வைர மூக்குத்தி, மனித நேயம், மனிதனே புனிதனாவாய், புதுமனிதன், யாருக்குப் பொங்கல், கயமையைக் களைவோம், அழகிய தமிழில் எழுதுங்கள், வண்ணத்தமிழ், நினைத்தால் இனிப்பவளே, வாழ்வதற்கு மனிதர்கள் தேவை, இளைய தலைமுறை எழுந்து நிற்கட்டும், இதயமே இல்லாதவர்கள், பொய்யே நீ போய்விடு, கனவுப் பூக்கள், வணக்கத்துக்குரிய வரதராசனார், சவால் சம்பந்தம்.       

குறிப்பு :

Ø  இவர் தொலைக்காட்சி, பாவரங்க மேடை, வானொலி போன்ற ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.

Ø  இவர் நாவல், கவிதை நாடகம், மரபுக்கவிதை, சிறுகதை, இசைப் பாடல்கள் போன்றவற்றில் புலமைப் பெற்றவர்.

Ø  இவர் இளங்கவிஞர்களை உருவாக்க பல போட்டிகளை நடத்தியுள்ளார்.

Ø  இவர் பாட்டரங்கப் பாவலராய்ப் புகழப் பெற்றுள்ளார்.

Ø  இவர் புதிய பாதை என்னும் கையெழுத்து ஏடு நடத்தி வந்துள்ளார்.

Ø  இவர் கவிதை வட்டம் என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள்ளார்.   

Ø  இவரது இமயம் எங்கள் காலடியில், வணக்கத்திற்க்குரிய வரதராசனார் கதை என்ற நூல்களுக்கு தமிழக அரசின் பரிசுப் பெற்றுள்ளார்.

Ø  இவர் வணக்கத்திற்க்குரிய வரதராசனார் கதை என்ற தலைப்பில் மு.வா. அவர்களின் கதையை கூறியுள்ளார். அதுபோல தாத்தாவுக்குத் தாத்தா என்ற தலைப்பில் மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை கதையை கூறியுள்ளார்.

Ø  இவர் குறுந்தொகையின் குழந்தைகள், குறும்பா என்ற இரண்டு ஹைக்கூ கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

Ø  இவருக்கு பொன்னம்மா புதுமைப் பெண் என்ற நாடகத்திற்கு ஏ.வி.எம் தங்கப் பதக்கம் கொடுத்துள்ளது.  

Ø  இவருக்கு கவிவேந்தர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.

Tuesday

சாலினி இளந்திரையன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

சாலினி இளந்திரையன்

இயற்பெயர் : கனகசௌந்திரி 

பிறந்த ஊர் : விருதுநகர்

காலம் :  1933 – 2000

கணவர் : சாலை இளந்திரையன்

பெற்றோர் : சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்

படைப்புகள் : ஏந்திரக் கலப்பை, புதிய தடங்கல், பண்பாட்டின் சிக்கற்றங்கள், குடும்பத்தில் நான், ஆசிரியப் பணியில் நான், பண்பாட்டின் சிகரங்கள், படுகுழி, களத்திலே கடிதங்கள், சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள்.     

குறிப்பு :

Ø  இவர் புதுடில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிப்புரிந்துள்ளார்.

Ø  இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் சிலப்பதிக்காரச் சொல் வலம் என்ற தலைப்பில் ரா.பி.சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Ø  இவர் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.   

Ø  இவர் கொண்டல், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், சு.மகாதேவன் போன்றவர்களிடம் தமிழ் கற்று கொண்டுள்ளார்.

Ø  இவர் சிறந்த சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர், எழுத்தாளர்.

Ø  இவர் சிலம்பின் கதை மாந்தரான சாலினி என்ற பெயரை புனைப்பெயராக வைத்துக் கொண்டார்.

Ø  இவர் 1987 ல் மனித வீறு என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவரது முதல் கட்டுரை வாடா மலர் ஆகும்.

Ø  இவர் ஆனந்த போதினி என்ற இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் போன்ற பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து சாலை இளந்திரையன் நினைவு மலர் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சாலை இளந்திரையன் படைப்புகளிலிருந்து சாலையாரின் பிளிறல்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

Ø  சங்கத் தமிழரின் மனித நேய மணி நெறிகள் என்னும் தலைப்பில் இவரது சொற்பொழிவுகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.

Ø  இவர் வீரநடை அறிவியக்கம் என்ற இதழுக்கு இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார்.  

Ø  இவர் தந்தை பெரியாரை தனது வழிக்காட்டியாக கொண்டு வாழ்ந்துள்ளார்.

Ø  சாலை இளந்திரையனுடன் சேர்ந்து இரண்டு குரல்கள், தமிழ்க் கனிகள், தமிழனே தலைமகன், தமிழ் தந்த பெண்கள் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

Sunday

தேவதேவன்

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், தேவதேவன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

தேவதேவன்

இயற்பெயர் : பிச்சுமணி  

பிறந்த ஊர் : தூத்துக்குடி

காலம் :  1948

படைப்புகள் : புல்வெளியில் ஒருகல், விண்ணளவு பூமி, விரும்பியதெல்லாம், விடிந்தும் விடியாத பொழுது, ஒரு மரத்தையும் கூட காணவில்லை, மின்னற்பொழுதே தூரம், பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள், மார்கழி, குளித்தும் கரையேறாத கோபியர்கள்,நுழைவாசலிலே நின்றிவிட்டு கோலம், நார்சிஸஸ்வனம், மாற்றப்படாத வீடு, பூமியை உதறி எழுந்த மேகங்கள், சின்னஞ் சிறிய சோகம், நட்சத்திரமீன், அந்தரத்திலே ஓர் இருக்கை.      

குறிப்பு :

Ø  இவர் ஆசிரியராகப் பணிச் செய்துள்ளார்.

Ø  இவர் ஈ.வே.ராமசாமியால் கைவல்யம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசு விருது, விளக்கு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது   ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Ø  இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக விருதையும் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2012 ல் விஷ்ணுபுரம் விருதைப் பெற்றுள்ளார்.

Ø  இவர் 2005 ல் தேவ தேவன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றுள்ளார்.    

மேற்கோள் :

v  பொருளையே தேடுபவர்கள்………………………….

Thursday

கல்யாண்ஜி

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

கல்யாண்ஜி

இயற்பெயர் : எஸ். கல்யாணசுந்தரம்  

புனைபெயர் : வண்ணதாசன், கல்யாண்ஜி   

பிறந்த ஊர் : திருநெல்வேலி

காலம் : 1946

படைப்புகள் : தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள், அந்நியமற்ற நிதி, ஆதி, புலரி, இன்று ஒன்று நன்று, சின்னு முதல் சின்னு வரை, கல்யாண்ஜி கவிதைகள்,மணலுள்ள ஆறு, முன்பின், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, நடுகை, கனிவு, ஒளியிலே தெரிவது, அணில்நிறம், கனியான பின்னும் நுனியில் பூ, பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும், சிநேகிதங்கள், கிருஷ்ணன் வைத்த வீடு, உயரப் பறத்தல்.  

குறிப்பு :

Ø  இவர் வண்ணதாசன் என்ற புனைப் பெயரை சிறுகதைகளுக்கும் கல்யாண்ஜி என்ற புனைப் பெயரை கவிதைகளுக்கும் பெற்றார்.

Ø  இவர் தீபம் என்ற இதழை நடத்தியுள்ளார்.

Ø  இவருடைய தந்தை தி.க.சிவசங்கரன் சாகித்திய அகாடமி விருதுப் பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார்.

Ø  இவர் அகம் புறம் என்ற கவிதை தொகுப்பு ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது.

Ø  இவர் வண்ணதாசன் கடிதங்கள் என்ற கடித இலக்கியத்தையும் படைத்துள்ளார்.

Ø  இவர் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

Ø  இவருக்கு 2016 ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

Ø  இவருடைய ஒரு சிறு இசை என்ற நூலுக்கு 2016 ல் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது.      

மேற்கோள் :

v  உன் பாடல்களை நீயே எழுது………………………….

Tuesday

அப்துல்ரகுமான்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

அப்துல்ரகுமான்

இயற்பெயர் : அருள்வண்ணன்

பெற்றோர் : மஹி, ஜைனத் பேகம்

பிறந்த ஊர் : மதுரை

காலம் : 1937

படைப்புகள் : சிலந்தியின் வீடு, தீபங்கள் எரியட்டும், பறவைகளின் பாதை, பால்வீதி, கரைகளே நதியாவதில்லை, சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், நேயர் விருப்பம், முட்டைவாசிகள், பித்தன், மரணம் முற்றுப்புள்ளி அல்ல, ஆலாபனை, சொந்தச் சிறைகள், இல்லையிலும் இருக்கிறான், எம்மொழி செம்மொழி, தேவகானம், சலவை மொட்டு, தீக்குச்சி, ஆல்போல் விழுந்தவன், விலங்குகள் இல்லாத கவிதை, உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், குணங்குடியார் பாடற் கோவை.   

குறிப்பு :

Ø  இவர் தமிழ் அன்னை விருது மற்றும் பாரதி தாசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Ø  இவருடைய ஆலாபனை என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது.

Ø  இவர் கவிக்கோ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Ø  இவரை மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று போற்றுகின்றனர்.

Ø  இவர் ஹைக்கூ, கஜல் போன்ற கவிதைகளை தமிழில் வழங்கியுள்ளார்.

மேற்கோள் :

v  இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள்…………………..

v  வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக…………………………….

v  தீப மரத்தின் தீக்கனி உண்ண விட்டில் வந்தது…………………………………….

Friday

ஈரோடு தமிழன்பன்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

ஈரோடு தமிழன்பன்

இயற்பெயர் : ஜெகதீசன்

பெற்றோர் : நடராஜா, வள்ளியம்மாள்

பிறந்த ஊர் : கோவை மாவட்டம் சென்னிமலை

காலம் : 1940

புனைபெயர்கள் : விடிவெள்ளி, ஈரோடு தமிழன்பன்

படைப்புகள் : தீவுகள் கரையேறுகின்றன, காலத்திற்கு ஒரு நாள் முந்தி,தோனி வருகிறது, விடியல் பொழுதுகள், சூரியப் பறவைகள், நந்தணை எரிந்த நெருப்பின் மிச்சம், தமிழன்பன் கவிதைகள், நிலா வரும் நேரம், சிலிர்ப்புகள், வணக்கம் வள்ளுவ, சூரியப் பிறை, ஒருவண்டி சென்ரியு, ஊமை வெயில்,மின்மினிக்காடு, சிறகுகள், பொது உடைமைப் பூபாளம், குடை ராட்டினம்.    

குறிப்பு :

Ø  இவர் பாரதிதாசனின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

Ø  இவர் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரங்கங்களை கனடா கவிஞர் ஆவார்.

Ø  இவருடைய தமிழன்பன் கவிதைகள் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசுப் பெற்றார்.

Ø  இவருடைய வணக்கம் வள்ளுவ என்ற புதுக்கவிதை 2004 ல்  சாகித்திய அகாதமி விருதுப் பெற்றது இதுவே சாகித்திய அகாதமி விருதுப் பெற்ற முதல் நூல் ஆகும்.

Ø  இவர் அரசு தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பவராக பணி செய்துள்ளார்.

Ø  அரிமா நோக்கு என்ற இதழின் ஆசிரியராக பணிப்புரிந்தார்.

Ø  ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே.      

மேற்கோள் :

v  சிலம்பை உடைத்து என்னபயன்…………………….

v  வாழக்கை அந்நிய மொழியில்…………………….  

v  இலையுதிர் காலம் இல்லாமலே…………………….   

v  பூவின் மலர்ச்சியையும் குழந்தையின்…………………….     

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....