Wednesday

கண்ணதாசன்

 

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

கண்ணதாசன்

இயற்பெயர் : முத்தையா    

பெற்றோர் : சாத்தப்பன், விசாலாட்சி  

பிறந்த ஊர் : சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி  

காலம் : 24/6/1927 – 17/10/1981

சிறப்புப்பெயர்கள் : காமப்பிரியன், காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, ஆரோக்கியசாமி, பார்வதிநாதன்,தமிழ்மன்னன்.        

நூல்கள் : ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், கல்லக்குடி காவியம், புஷ்பமாலிகா, ஸ்ரீ கிருஷ்ண கவசம், பகவத்கீதை விளக்கவுரை, சேரமான் காதலி, மாங்கனி, வேலங்குடி திருவிழா, அர்த்தமுள்ள இந்து மதம், தெய்வ தரிசனம், ஆயிரம் தீவு, அங்கயற்கண்ணி.     

குறிப்பு :

Ø  இவர் தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞனாராக இருந்தார்.

Ø  இவர் எழுதிய இராசதண்டனை என்பது கம்பர் – அம்பிகாபதி பற்றிய வரலாற்று நூல் ஆகும்.

Ø  இவர் 5000 க்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் எழுதியுள்ளார்.

Ø  தென்றல், முல்லை, கடிதம், தமிழ்மலர், கண்ணதாசன், கண்டமாருதம், தென்றல்திரை, திருமகள்  போன்ற இதழ்களை நடத்தியுள்ளார்.

Ø  அர்த்தமுள்ள இந்துமதம், கிருஷ்ணகவசம் ஆகியவை இவரது பக்தி நூல்கள் ஆகும்.

Ø  அனார்கலி, சிவகங்கைச் சீமை, ரஜா தண்டனை போன்றவை இவர் இயற்றிய நாடகங்கள் ஆகும்.

Ø  பகவத்கீதை, சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, கூழப்ப நாயக்கன் காதல், அபிராமி அந்தாதி, திருக்குறள் காமத்துப்பால் போன்றவை இவரது உரைநடை நூல்கள்.      

Ø  கவியரசு, கவிச்சக்கரவர்த்தி, போன்ற பட்டங்களைப் பெற்றார்.

Ø  இவருடைய சேரமான் காதலி என்னும் புதினம் சாகித்திய அகாடெமி விருதைப் பெற்றது.

Ø  தாம் உயிரோடு இருக்கும் போதே தமக்கு தாமே இரங்கற்பா பாடிய கவிஞர்.  

Ø  இவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் வனவாசம், மனவாசம், எனது வசந்த காலங்கள் போன்றவை ஆகும்.

Ø  கலங்காதிரு மனமே – இவரது முதல் பாடல்

Ø  கண்ணே கலைமானே – இவரது கடைசி பாடல்  

Ø  மாங்கனி – இவரது முதல் காவியம்

Ø  இயேசு காவியம் – இவரது கடைசி காவியம்

Ø  இவருக்கு சிறந்த கவிஞருக்கான அண்ணாமலை நினைவு பரிசு வழங்கப்பட்டது.        

மேற்கோள் :

v காளை மணியோசை களத்துமணி நெல்லோசை…………

v  ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு………….

v  நினைக்கத் தெரிந்த மனமே……………..

v  கோப்பையிலே என் குடியிருப்பு………….

v  அன்னைத் தமிழே அழகு பெருநிலவே…………..

v  எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்……………..

v  நான் நிரந்தரமானவன் அழிவதில்லை……………….

v  போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்…………….   

*      மழைக்கூட ஒருநாளில் தேனாகலாம்…………... – 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப் பட்ட பாடல்.

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....