Tuesday

சுரதா

 GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

சுரதா

இயற்பெயர் : இராசகோபாலன்   

பெற்றோர் : திருவேங்கடம், செண்பகம்

பிறந்த ஊர் : திருவாரூர் மாவட்டம் பழையனூர்

சிறப்புப்பெயர்கள் : கவிஞர் திலகம், கவிமாமன்னர், உவமைக் கவிஞர், தன்மானக்கவிஞர், புதுமைக்கவிஞர்.   

நூல்கள் : துறைமுகம், முன்னும் பின்னும், எச்சில் இரவு, தேன்மழை, சுவரும் சுண்ணாம்பும்,சுரதாவின் கவிதைகள், பட்டத்தரசி, சாவின் முத்தம், வார்த்தை வாசல், உதட்டில் உதடு, வெட்ட வெளிச்சம், மங்கையர்க்கரசி, பாவேந்தரின் காளமேகம், சொன்னார்கன், எப்போதும் இடுப்பளர்கள்.      

குறிப்பு :

Ø  உவமைக் கவிஞர் என்று இவரை முதன்முதலில் சிறப்பித்தவர் ஜெகசிற்பியன்.

Ø  இவர் பாரதிதாசன் மீது கொண்ட அன்பினால் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். பிறகு அதனை சுரதா என மாற்றிக்கொண்டார்.

Ø  இவர் காவியம் என்ற வார இதழையும், இலக்கியம்,சுரதா, ஊர்வலம் போன்ற மாத இதழ்களையும் நடத்தியுள்ளார்.

Ø  தேன்மழை என்ற நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியது.

Ø  தேன்மழை என்ற நூலுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகம் இவருக்கு இராச இராச விருதை வழங்கியது.  

Ø  இவருக்கு தமிழக இயலிசை நாடக மன்றத்தில் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.

Ø  தமிழக அரசால் பாவேந்தர் விருதை பெற்ற முதற்பாவலர் இவரே.    

Ø  இவருடைய முதல் கவிதை சிரிப்பின் நிழல் ஆகும்.  

Ø  குன்றக்குடி அடிகள் இவருக்கு கவியரசர் என்ற பட்டத்தை வழங்கினார்.

Ø  கேரளா அரசு இவருக்கு 1990 ல் மகாகவி குமரன் விருது வழங்கியது.   

மேற்கோள் :

v  உரைநடையின் சிக்கனம் தான் கவிதை............

v  படுத்திருக்கும் வினாக்குறி போல் மீசை வைத்த பாண்டியர்கள்............

v  வீரத்தாய் நாடே உன்னைக் காக்க சாகவும் அஞ்சமாட்டேன்...........

v  தமிழெனறால்  தவிட்டையும் உண்பேன்................

v  வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை……………

தடை நடையே அவர் எழுத்தில் இல்லை…………..

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....