BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
பெயர்ச்சொல்
v மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் – பெயர்ச்சொற்கள்
v ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
v பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை,
F
பொருட்பெயர்
F
இடப்பெயர்
F
காலப்பெயர்
F
சினைப்பெயர்
F
பண்புப்பெயர்
F
தொழிற்பெயர்
பொருட்பெயர்
è பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் ஆகும்.
è இது உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
è
(எ.கா) மரம், செடி, மயில், பறவை,
புத்தகம், நாற்காலி.
இடப்பெயர்
è ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் ஆகும்.
è
(எ.கா) சென்னை, பள்ளி, பூங்கா,
தெரு.
காலப்பெயர்
è காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் ஆகும்.
è
(எ.கா) நிமிடம், நாள், வாரம்,
சித்திரை, ஆண்டு.
சினைப்பெயர்
è பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் ஆகும்.
è
(எ.கா) கண், கை, இலை, கிளை.
பண்புப்பெயர்
è பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் ஆகும்.
è
(எ.கா) வட்டம், சதுரம், செம்மை,
நன்மை.
தொழிற்பெயர்
è தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் ஆகும்.
è
(எ.கா) படித்தல், ஆடுதல்,
நடித்தல்.
ஆறுவகை பெயர்ச்சொற்களுக்கான எடுத்துக்காட்டுகள்
Ø காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்
Ø காவியா பள்ளிக்கு சென்றாள் – இடப்பெயர்
Ø காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்
Ø காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்
Ø காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்
Ø காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்
No comments:
Post a Comment