BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
நால்வகைச்
சொற்கள்
v தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட
எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருவதை சொல் என்பர்.
v (எ.கா) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.
v இலக்கண அடிப்படையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,
F பெயர்ச்சொல்
F வினைச்சொல்
F இடைச்சொல்
F உரிச்சொல்
பெயர்ச்சொல்
è ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
è (எ.கா) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல்
è ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும். வினை என்னும் சொல்லுக்கு செயல்
என்று பெயர்.
è (எ.கா) வா, போ, எழுது, விளையாடு.
இடைச்சொல்
è பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது
தனித்து இயங்காது.
è (எ.கா) உம் – தந்தையும் தாயும்
மற்று – மற்றொருவர்
ஐ – திருக்குறளை
உரிச்சொல்
è பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல்
ஆகும்.
è (எ.கா) மா – மாநகரம்
சால – சாலச்சிறந்தது
No comments:
Post a Comment