Thursday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)10ம் வகுப்பு பாடப்பகுதி


10ம் வகுப்பு பாடப்பகுதி

மெய் – உடல்
விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
விரை – மணம்
நெகிழ – தளர
ததும்பி – பெருகி
சயசய – வெல்கவெல்க
விழுப்பம் – சிறப்பு
ஓம்பப்படும் – காத்தல்வேண்டும்
பரிந்து – விரும்பி
தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
குடிமை – உயர்குடி
இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
அழுக்காறு – பொறாமை
ஆக்கம் – செல்வம்
ஒல்கார் – விலகமாட்டார்
உரவோர் – மனவலிமையுடையோர்
ஏதம் – குற்றம்
எய்துவர் – அடைவர்
இடும்பை – துன்பம்
வித்து – விதை
ஒல்லாவே – இயலாவே
உலகம் – உயர்ந்தோர்
ஓட்ட – பொருந்த
ஒழுகல் – நடத்தல்,வாழ்தல்
கூகைகோட்டான்
இகல் – பகை
திரு – செல்வம்
தீராமை – நீங்காமை
அருவினை – செய்தற்கரிய செயல்
ஞாலம் – உலகம்
ஒடுக்கம் – அடங்கியிருப்பது
பொருதகர் – ஆட்டுக்கடா
பொள்ளென  - உடனே
புறம்வேரார் – வெளிப்படுத்தமாட்டார்
ஒள்ளியவர் – அறிவுடையார்
செறுநர் – பகைவர்
சுமக்க – பணிக
இறுவரை – முடிவுக்காலம்
கிழக்காந்தலை – தலைகீழ்,மாற்றம்
எய்தற்கு – கிடைத்தற்கு
இயைந்தக்கால் – கிடைத்தபொழுது
கூம்பும் – வாய்ப்பற்ற
சீர்த்தஇடம் – உரியகாலம்
வணங்கி – பணிந்து
பசுந்துணி – பசியதுன்பம்
தடக்கை – நீண்டகைகள்
சூருடை கானகம் – அச்சம் தரும் காடு
உகந்த – விரும்பிய
தாருகன் – அரக்கன்
செற்றம் – கறுவு
செயிர்த்தனள் – சினமுற்றவள்
தேரா – ஆராயாத
எள்ளறு – இகழ்ச்சி இல்லாத
இமையவர் – தேவர்
புள் – பறவை,புறா
புன்கண் – துன்பம்
கடைமணி – அரண்மனை வாயில் மணி
ஆழி – தேர்ச்சக்கரம்
ஏசா – பழியில்லா
கோறல் – கொல்லுதல்
கொற்றம் – அரச நீதி
நற்றிறம் – அறநெறி
படரா – செல்லாத
சுவடி – நூல்
எளிமை – வறுமை
சாய்க்காமை – அழிக்காமை
நூற்கழகங்கள் – நூலகங்கள்
களைந்தோம் – நீக்கினோம்
தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
ஆயகாலை – அந்தநேரத்தில்
அம்பி – படகு
நாயகன் – தலைவன்
நாமம் – பெயர்
துறை – தோணித்துறை
தொன்மை – தொன்றுதொட்டு
கல் – மலை
திரள் – திரட்சி
துடி – பறை
அல் – இருள்
திரை – அலை
மருங்கு – பக்கம்
குறுகி – நெருங்கி
இறைஞ்சி – வணங்கி
சேவிக்க – வணங்க
நாவாய் – படகு
குறுகினன் – வந்துள்ளான்
இறை – தலைவன்
பரிவு – இரக்கம்
குஞ்சி – தலைமுடி
மேனி – உடல்
அருத்தியன் – அன்பு உடையவன்
மாதவர் – முனிவர்
முறுவல் – புன்னகை
விளம்பல் – கூறுதல்
சீர்த்த – சிறந்த
பவித்தரம் – தூய்மையானது
இனிதின் – இனிமையானது
தழீஇய – கலந்த
கார்குலாம் – மேகக்கூட்டம்
பார்குலாம் – உலகம் முழுதும்
இன்னல் – துன்பம்
ஈர்கிலா – எடுக்க இயலாத
தீர்கிலேன் – நிக்கமாட்டேன்
அடிமை செய்குவேன் – பணி செய்வேன்
குரிசில் – தலைவன்
இருத்தி – இருப்பாயாக
நயனம் – கண்கள்
இந்து – நிலவு
நுதல் – நெற்றி
கடிது – விரைவாக
முடுகினன் – செலுத்தினன்
முரிதிரை – மடங்கிவிழும் அலை
இடர் – துன்பம்
அமலன் – குற்றமற்றவன்
இளவல் – தம்பி
துன்பு – துன்பம்
உன்னேல் – நினைக்காதே
அரி – நெற்கதிர்
செறு – வயல்
யாணர் – புதுவருவாய்
வட்டி – பனையோலைப் பெட்டி
துகிர் – பவளம்
மன்னிய – நிலைபெற்ற
சேய – தொலைவு
தொடை – மாலை
கலம் – அணி
காய்ந்தார் – நீக்கினார்
மனை – வீடு
ஆ – பசு
மேதி – எருமை
தண்ணளித்தாய் – குளிர்ச்சி நிறைந்த
தடம் – தடாகம்
சந்தம் – அழகு
ஈறு – எல்லை
கல்மிதப்பு – கல்லாகியதெப்பம்
புவனம் – உலகம்
சூலை – கொடிய வயிற்றுநோய்
தெருளும் – தெளிவில்லாத
கரம் – கை
கமலம் – தாமரை
மிசை – மேல்
நேர்ந்தார் – இசைந்தார்
தங்கள் சேயவர் – தங்களின் குழந்தைகள்
பொற்குருத்து – மிக இளமையான வாழைக்குருத்து
ஒல்லை – விரைவு
மல்லல் – வளமான
அம் – அழகிய
வாள் – கூரிய
அரா – பாம்பு
அல்லல் – துன்பம்
அழுங்கி – மிக வருந்தி
அங்கை – உள்ளங்கை
உதிரம் – குருதி
மேனி – உடல்
வீந்தான் – இறந்தான்
மறைநூல் – நான்மறை
சேய் – குழந்தை
பூதி – திருநீறு
பொறாது – ஏற்காது
மெய் - உண்மை
பணிவிடம் – பாம்பின் நஞ்சு
சவம் – பிணம்
பாற்றுவித்தார் – போக்குவித்தார்
அரியாசனம் – சிங்காதனம்
வரம்பு – வரப்பு
ஏர் – அழகு
கோட்டிகொளும் – கூட்டமாகக் கூடும்
நாளிகேரம் – தென்னை
மூத்த – முதிர்ந்த
கேண்மை – நட்பு
தேர்ந்து – ஆராய்ந்து
நோய் – துன்பம்
உறாஅமை – துன்பம் வராமல்
பெற்றியார் – பெருமையுடையார்
பேணி – போற்றி
தமர் – உறவினர்
வன்மை – வலிமை
ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
தலை – சிறப்பு
சூழ்வார் – அறிவுடையார்
சூழ்ந்து கொளல் – நட்பாக்கிக் கொள்ளுதல்
தக்கார் – தகுதியுடைய பெரியோர்
செற்றார் – பகைவர்
இல் – இல்லை
இடிக்கும் – கடிந்துரைக்கும்
தகைமை – தன்மை
ஏமரா – பாதுகாவல் இல்லாத
மதலை – துணை
பத்தடுத்த – பத்து மடங்கு
பொருளல்லவர் – தகுதியற்றவர்
பொருள் – செல்வம்
எள்ளுவர் – இகழ்வர்
பொய்யாவிளக்கம் – அணையா விளக்கு
இருள் – பகை
ஈனும் – தரும்
தீதின்றி – தீங்கின்றி
புல்லார் – பற்றார்
உறுபொருள் – அரசு உரிமையால் வரும் பொருள்
உல்குபொருள் – வரியாக வரும் பொருள்
தெறு – பகை
குழவி – குழந்தை
செவிலி – வளர்ப்புத்தாய்
குன்று – மலை
கைத்தொன்று – கைப்பொருள்
செருக்கு – இருமாப்பு
எஃகு – உறுதியான படைக்கலம்
ஒண்பொருள் – சிறந்த பொருள்
எண்பொருள் – இயல்பாய்க் கிடைக்கும் பொருள்
இடா – துன்பம்
ஏமாப்பு – பாதுகாப்பு
பிணி – நோய்
நடலை – துன்பம்
நமன் – எமன்
தெண்புரை – தெளிந்த அலைகள்
கான் – காடு
தடக்கரி – பெரிய யானை
திரன் – கூட்டம்
அறைகுவன் – சொல்லுவான்
தாரை – வழி
அணித்தாய் – அண்மையில்
அடவி – காடு
உழுவை – புலி
கூண்ட – சேர்ந்த
கனல் – நெருப்பு
வெள்ளையிறு – வெண்ணிறப் பற்கள்
புலால் – இறைச்சி
வனம் – காடு
வள்ளுகிர் – கூர்மையான நகம்
மடங்கல் – சிங்கம்
நிணம் – கொழுப்பு,இறைச்சி
மதகரி – மதம் பொருத்திய யானை
கோடு – தந்தம்
கிரி – மலை
இரும்பனை – பெரியபனை
உரும் – இடி
அலறும் – முழங்கும்
தொனி – ஓசை
மேதி – எருமை
கவை – பிளந்த
கேழல் – பன்றி
எண்கு – கரடி
மரை – மான்
எழில் – அழகு
புயம் – தோள்
முறுவல் – புன்சிரிப்பு
இடர் – துன்பம்
வேங்கை – புலி
வென்றி – வெற்றி
அணித்து – அருகில்
விளம்பினான் – சொன்னான்
மாதிரம் – மலை
கேசரி – சிங்கம்
புளகிதம் – மகிழ்ச்சி
காது – கொல்லுதல்
கவின் – அழகு
பூதரம் – மலை
பெருஞ்சிரம் – பெரியதலை
தெண்டனிட்டது – வணங்கியது
தெரிசனம் – காட்சி
சலாம் – வணக்கம்
திண்திறல் – உறுதியான வலிமை
புந்தி – அறிவு
சந்தம் – அழகிய
சிரம் – தலை
செகுத்திடுவது – உயிர்வதை செய்வது
அறைந்த – சொன்ன
அதிசயம் – வியப்பு
உன்னி – நினைத்து
தெளிந்தார் – தெளிவு பெற்றார்
கிளை – சுற்றம்
நோன்றல் – பொறுத்தல்
புயல் – மேகம்
பணை – மூங்கில்
பகரா – கொடுத்து
பொருது – மோதி
நிதி – செல்வம்
புனல் – நீர்
கவிகை – குடை
வானகம் – தேவருலகம்
என்பால் – என்னிடம்
தார்வேந்தன் – மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
செத்தை – குப்பைகூளம்
இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்  

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...