Friday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)9ம் வகுப்பு பாடப்பகுதி


9ம் வகுப்பு பாடப்பகுதி

உளவாக்கல் – உண்டாக்குதல்,படைத்தல்
நிலைபெறுத்தல் – காத்தல்
நீக்கல் – அழித்தல்
நீங்கலா – இடைவிடாது
அலகிலா – அளவற்ற
அன்னவர் – அத்தகைய இறைவர்
தலைவர் – இறைவர்
சரண் – அடைக்கலம்
அகழ்வாரை – தோண்டுபவரை
இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
தலை – சிறந்தபண்பு
பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை மறத்தல்
இன்மை – வறுமை
ஒரால் – தவிர்த்தல்
மடவார் – அறிவற்றார்
நிறை – சால்பு
ஒறுத்தாரை – தண்டித்தவரை
ஒன்றாக – ஒரு பொருட்டாக
பொன்றும் துணையும் – உலகம் உள்ளவரை
திறனல்ல –செய்யத்தகாத
நோநொந்து – துன்பத்துக்கு வருந்தி
மிகுதியான் – மனச்செருக்கால்
மிக்கவை – தீமை
தகுதியான் – பொறுமையால்
துறந்தார் – பற்றினைவிட்டவர்
இறந்தார் – வரம்புகடந்தவர்
இன்னா – தீய
நோற்கிற்பவர் – பொறுப்பவர்
நோற்பார் – நோன்பு மேற்கொள்பவர்
இன்னாச்சொல் – தீயசொல்
கண்ணோட்டம் – இரக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு – ஆராய்ச்சிக்கு அழகு
வனப்பு – அழகு
கிளர்வேந்தன் – புகழுக்கு உரிய அரசன்
வாட்டான் – வருத்தமாட்டான்
எம்பி – என்தம்பி
மடப்பிடி – பாஞ்சாலி
களிக்க – மகிழ
கோமான் – அரசன்,திருதராட்டிரன்
நுந்தை – நும் தந்தை
அடவி – காடு
தடந்தோள் – வலியதோள்
மணிநகர் – அழகிய நகரம்
மருங்கு – பக்கம்
கோலமுறு – அழகுமிக்க
செறிந்து – அடர்ந்து
கா – காடு
குலவு – விளங்கும்
ஞாலம் – உலகம்
பண்ணவர் – தேவர்
அரம்பையர் – தேவமகளிர்
ஞானம் – அறிவு
புன்மை – நெறி பிறழ்ந்த செயல்கள்
வீறு – வலிமை
சதுரங்கச் சேனை – நால்வகைப் படை
மதுரமொழி – இனியமொழி
வையை நாடவன் – பாண்டியன்
உய்ய – பிழைக்க
இன்னல் – துன்பம்
நல்கினார் – அளித்தார்
இறைஞ்சி – பணிந்து
விபுதர் – புலவர்
தூங்கிய – தொங்கிய
பொற்கிழி – பொன்முடிப்பு
நம்பி – தருமி
புறம்பு – வெளியில்
பையுள் – வருத்தம்
பனவன் – அந்தணன்
கண்டம் – கழுத்து
வழுவுபாடல் – குற்றமுள்ளபாடல்
ஏத்தும் – வணங்கும்
அரவுநீர்ச்சடையார் – சிவபெருமான்
ஞானப்பூங்கோதை – உமையம்மை
வெருவிலான் – அச்சமற்ற நக்கீரன்
சலம் – மனஉறுதி
ஆர்அவை – புலவர்கள் நிறைந்த அவை
கிளத்தினேன் – சொன்னேன்
சீரணி – புகழ்வாய்ந்த
வேணி – செஞ்சடை
ஓரான் – உணரான்
அற்குற்ற – இருளையொத்த
நாற்றம் – நறுமணம்
குழல் – கூந்தல்
அல்கு – இரவு
கற்றைவார்சடையான் – சிவபெருமான்
உம்பரார்பதி – தேவர்தலைவன்,இந்திரன்
நுதல்விழி – நெற்றிக்கண்
பொற்பங்கயத்தடம் – பொற்றாமரைக்குளம்
நாவலன் – புலவர்
கரந்தான் – மறைந்தான்
செவிச்செல்வம் – கேள்விச்செல்வம்
தலை – முதன்மை
போழ்து – பொழுது
ஈயப்படும் – அளிக்கப்படும்
ஒப்பர் – ஒப்பாவர்
ஒற்கம் – தளர்ச்சி
ஊற்றுக்கோல் – ஊன்றுகோல்
அற்றே – போன்றதே
எனைத்தானும் – எவ்வளவு சிறிதாயினும்
அனைத்தானும் – கேட்ட அளவிற்கு
ஆன்ற – நிறைந்த
பேதைமை – அறியாமையின் பாற்பட்ட தீயசொற்கள்
இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
ஈண்டிய – ஆய்ந்தறிந்த
தகையவே – தன்மையதே
தோட்கப்படாத – துளைக்கப்படாத
நுணங்கிய – நுட்பமாகிய
வணங்கிய – பணிவான
அவியினும் – இறந்தாலும்
இசைபட – புகழுடன்
கயவர் – கீழக்குணமுடையோர்
உய்ம்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்
மல்லல் – வளமை
வள் – நெருக்கம்
விசும்பு – வானம்
புறவு – புறா
நிறை – எடை
ஈர்த்து – அறுத்து
துலை – துலாக்கோல்,தராசு
நிறை – ஒழுக்கம்
வன்கண் – வீரத்தன்மை
மேனி – உடல்
மருப்பு – தந்தம்
ஊசி – எழுத்தாணி
மறம் – வீரம்
கனல் – நெருப்பு
திருத்தக்க – செல்வம் நிலைத்த
வையகம் – உலகம்
மொய்யிலை – நெருங்கியமைந்த இலை
மாறன் – பாண்டிய மன்னன்
 களிறு – ஆண் யானை
தீயின் வாய் – நெருப்பில்
சிந்தை – எண்ணம்
கூர – மிக
நவ்வி – மான்
முகில் – மேகம்
மதி – நிலவு
உகு – சொரிந்த,பொழிந்த
புனல் – நீர்
பகர்வது – சொல்வது
தெளிவீரே – தெளியுங்கள்
துவ்வா – நுகராத
அகன்று – விலகி
ஆழி – கடல்
ஆயம் – தோழியர் கூட்டம்
ஆசனம் – இருக்கை
யாக்கை – உடம்பு
பிணிநோய் – நீங்காநோய்
பேதைமை – அறியாமை
செய்கை – இருவினை
உணர்வு – அறிவியல்சிந்தனை
அரு – உருவமற்றது
உரு – வடிவம்
வாயில் – ஐம்பொறிகள்
ஊறு – புலன்களின் இயல்பு
நுகர்வு – இன்பதுன்ப நுகர்ச்சி
வேட்கை – விருப்பம்
பவம் – பயன் நோக்கிய செயல்
தோற்றம் – பிறப்பு
பெரும்பேறு – வீடுபேறு
கோடு – கொம்பு
அலகில – அளவற்ற
தொக்கவிலங்கு – விலங்குத்தொகுதி
களவு – திருட்டு
குறளை – புறம் பேசுதல்
வெஃகல் – பெருவிருப்பம்
வெகுளல் – கடுஞ்சினம் கொள்ளுதல்
பொல்லாக்காட்சி – மாயத் தோற்றம்
சீலம் – ஒழுக்கம்
தானம் – கொடை
புரைதீர் – குற்றம் நீங்கிய
கேண்மின் – கேளுங்கள்
முத்தேர்நகை – முத்துச்சிரிப்பு
உய்ம்மின் – போற்றுங்கள்,நற்கதியடைங்கள்
உறைதல் – தங்குதல்
கூற்று – எமன்
மாசில் – குற்றமற்ற
தொழுது – வணங்கி
புக்கு – புகுந்து
இடர் – இன்னல்
கடன் – கடமை
சான்றோர் – நல்ல குணங்கள் நிறைந்தவர்
நாண் – நாணம்
ஒப்புரவு – உதவுதல்
வாய்மை – உண்மை
சால்பு – சான்றாண்மை
ஆற்றுவார் – செயல் செய்பவர்
ஆற்றல் – வலிமை
மாற்றார் – பகைவர்
துலையல்லார் – ஆற்றலில்குறைந்தவர்
கட்டளை – உரைகல்
இன்னா – தீங்கு
இனிய – நன்மை
செய்யாக்கால் – செய்யாவிடத்து
இன்மை – வறுமை
இளிவன்று - இழிவானதன்று
திண்மை – வலிமை
ஊழி – உலகம்
ஆழி – கடல்
இருநிலம் – பெரியநிலம்
பொறை – சுமை
உறுதி – உளஉறுதி
சகிப்புத்தன்மை – பொறுத்துக்கொள்ளுதல்
சொரூபம் – வடிவம்
தரணி – உலகம்
தாரம் – மனையாள்
சேவை – தொண்டு
அயலார் – உறவல்லாதோர்
ஈண்டு – இவ்விடம்
புகல்வது – சொல்வது
காண்டகு – காணத்தக்க
இருப்பாணி – இரும்புஆணி
கடாவினார் – அடித்தார்
கீண்டு – தோண்டி
செற்றம் – சினம்
குருசு – சிலுவை
சொற்ற – சொன்ன
துளக்கம் – விளக்கம்
சுருதிமுதல் – மறை முதல்வராகிய இயேசுநாதர்
சதைப்புண்டு – சிதைக்கப்பட்டு
பன்னரிய – சொல்லுதற்கரிய
பலபாடு – பலதுன்பம்
இரும்பொறை – பெரும்பொறுமை
வித்தகன் – ஆண்டவன்
தொழும்பர் – அடியார்
இசைபெறுதல் – புகழ்பெறுதல்
துஞ்சினவர் – உறங்கியவர்
கீண்டு – பிளந்து
இருப்புமுனை – ஆணியின் நுனி
வதைப்புண்டு – துன்பமடைந்து
இரட்சகர் – காப்பவர்
மன்றாடும் – மிகவேண்டுதல்
ஆகடியம் – ஏளனம்
நிழற்றிய – நிழல்செய்த
நடுநாள் யாமம் – நள்ளிரவு
துஞ்சான் – துயிலான்
மா – விலங்கு
கல்லா – கல்வியறிவில்லாத
நாழி – அளவுப்பெயர்
ஈதல் – கொடுத்தல்
துய்ப்பேம் – நுகர்வோம்
தப்புந – இழக்க
நீர் – கடல்
கருங்கோல் – கருமை நிறமுடைய கொம்பு
உயர்ந்தன்று – உயர்ந்தது
அளவின்று – அளவினையுடையது

No comments:

Post a Comment

ந.பிச்சமூர்த்தி

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...