Friday

TNPSC Tamil study material part-b Thirukkural


                    பண்புடைமை

                                பொருட்பால்

                                       அதிகாரம்(100)

                           பொருள்: குடியியல்

1.எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்: எல்லாரிடமும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைவது எளிது.

2.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
விளக்கம்: அன்புடைமையும் நல்இலக்கணமும் உடைய குடியில் பிறந்தவர்கள் பண்புடையவர்களாவர்.

3.உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
விளக்கம்: உயிரோடு பொருந்திய பண்பினை கொண்டிருப்பது உண்மையான ஒப்பாகும்.

4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
விளக்கம்: நேர்மையையும் நன்மையையும் கொண்டு பிறர்க்கு உதவும் பண்பை உலகம் விரும்பி போற்றும்.

5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளக்கம்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தை தரும்.பிறர் துன்பத்தை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.

6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
விளக்கம்: உலகம் பண்புடையவர்களாலே இயங்கி வருகிறது.அஃது இல்லையெனில் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகும்.

7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்.
விளக்கம்: அரம்போன்ற அறிவுடையாராயினும் மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் ஓரறிவு கொண்ட மரத்தை போன்றவர் ஆவர்.

8.நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
விளக்கம்: தம்மோடு நட்புக் கொள்ளாது தீமை செய்பவரிடத்திலும் பண்புடையவராய் நடந்து கொள்ளாமை மிகவும் இழிவான செயலாகும்.

9.நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
விளக்கம்: யாரிடமும் பழகிச் பேச இயலாதவருக்கு இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பாதாகவே தோன்றும்.

10.பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாலதிரிந் தற்று.
விளக்கம்: பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் யாருக்கும் பயன்படாது போனால்,நல்ல பால் கலத்தின் குற்றத்தால் திரிவது போன்றது.

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....