கல்வி
பொருட்பால்
அதிகாரம் (40)
அறம்: அரசியல்
1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்: நூல்களை குற்றமறப்
படிக்க வேண்டும். படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும்.கற்கும்
முறையில் நடக்க வேண்டும்.
2.எண்என்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
விளக்கம்: எண் எனப்படும் கணக்கும்,சொல்லும்
பொருளும் தரும் இலக்கியமும்,மனிதனுக்கு இரு கண் போன்றது.
3.கண்உடையர் என்பவர் கற்றோர்
முகத்திரண்டு
புண்உடையர் கல்லா
தவர்.
விளக்கம்: படித்த அறிவாளிகளே
கண்களை உடையவர்கள்,படிக்காத அறிவிளிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.
4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர்
தொழில்.
விளக்கம்: புலவர்களுடன் பேசும்
போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவரை விட்டு பிரியும் போது இவரை இனி எப்பொழுது
காண்போம் என எண்ணுவதும், புலவர்களின் தொழிலாகும்.
5.உடையார்முன் இல்லார்போல்
ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
விளக்கம்: செல்வர்கள் முன் ஏழைகள்
பணிவாக நடந்து கொள்வது போல கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள
வேண்டும்.கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.
6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும்
அறிவு.
விளக்கம்: மணல் நிறைந்த இடத்தில்
தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும்.அதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.
7.யாதானும் நாடாமால் ஊராமால்
என்னொருவன்
சாந்துணையும் கல்லாத
வாறு.
விளக்கம்: கல்வி கற்றவனுக்கு எந்த
நாடும் தன் நாடாம்,எந்த ஊரும் தன் ஊராம்.அப்பிடியிருக்க,சிலர் சாகும் வரை கல்வி
கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.
8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு
உடைத்து.
விளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கு
படிப்பு,ஏழேழு பிறவிக்கும் உதவும் என்பதே.
9.தாம்இன் புறுவது உலகுஇன்
புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்
தார்.
விளக்கம்: கல்வியால் உலகம் இன்பம்
அடையும்.அதைக் கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.
10.கேடில் விழுச்செல்வம் கல்வி
ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம்: ஒருவனுக்கு அழியாத
செல்வம் கல்வி ஆகும்.மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும்.கல்வியே சிறந்த
செல்வம் ஆகும்.
No comments:
Post a Comment