Monday

TNPSC Tamil study material part-B Thirukkural


                   வினைத்திட்பம்

                  பொருட்பால்

                     அதிகாரம்(67)

                     பொருள்-அமைச்சியல்

1.வினைத்திட்பம் என்பது தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
விளக்கம்: மனஉறுதி என்பது ஒரு தொழிலை செய்யும் உறுதி ஆகும்.வேறு எந்த உறுதியும் சிறந்தது இல்லை.

2.ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்: வருமுன் காத்தல்,வந்த பின் தளராமை ஆகிய இரண்டும் வினைத்திட்பம் பற்றி அறிந்தவர்களின் செயல் ஆகும்.

3.கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.
விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வரை வெளியில் தெரியாமல் செய்வது திறமை ஆகும்.வெளிப்பட்டால் துன்பத்தை தரும்.

4.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்: ஒரு செயலை இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று சொல்வது எளிதாகும்.அதை போல் செய்து முடிப்பது அரியதாகும்.

5.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம்:ஒரு செயலை செய்து பெருமை பெற்றவரின் வினைத்திட்பமானது உலகத்தால் நன்கு மதிக்கபடும்.

6.எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்: ஒரு பொருளை பெற எண்ணியவர் அவற்றை பெற முயற்சி செய்தால் அவர் எண்ணியவற்றை பெற முடியும்.

7.உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
விளக்கம்: பெரிய தேரினை இயக்க உதவும் சிறிய அச்சாணி போல சிறுஉடம்பினர்கள் இவ்வுலகத்தில் உண்டு.அவர்களை நாம் இகழ கூடாது.

8.கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
விளக்கம்: மனதில் எண்ணிய செயலை மனம் தளராமலும் காலம் தாழ்த்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.

9.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
விளக்கம்: ஒரு செயலை செய்யும் போது பல துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது செய்து முடிந்தால் அச்செயல் முடிவில் இன்பத்தை தரும்.

10.எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
விளக்கம்: வேறு எந்த உறுதி இருந்தும் செய்யும் செயலில் உறுதி இல்லாதவரை இவ்வுலகம் மதிக்காது.

Sunday

TNPSC Tamil study material part-B Thirukkural


                 பொருள் செயல்வகை

     (பொருளை ஆக்குவதற்கும் காப்பதற்குமான செயல்முறைகள்)

                          பொருட்பால்

                          அதிகாரம்(76) 
  
                  பொருள்-கூழியல்

1.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
விளக்கம்: எந்த தகுதியும் இல்லாதவரை மதிக்க செய்வது பொருள் என்னும் செல்வமாகும்.

2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்: செல்வம் இல்லாதவரை உலகம் இகழும்,செல்வம் உடையவரை புகழ்ந்து பேசும்.

3.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கு
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்: செல்வம் என்பது அணையா விளக்கு அது எந்த இடத்திற்கு சென்றாலும் பகைமை என்னும் இருளை போக்கும்.

4.அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்: பிறருக்கு தீங்கு செய்யாமல் நல்ல வழியில் சேர்த்த செல்வம் அறத்தினையும்,இன்பத்தினையும் தரும்.

5.அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம்: தவறான வழியில் வந்த செல்வத்தை அனுபவிக்காமல் அழிய விட வேண்டும்.

6.உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்: மக்கள் வரி பொருளும்,அரசுரிமையால் வந்த பொருளும்,பகைவரை வென்று கொண்ட பொருளும் அரசனுக்குரிய பொருள் ஆகும்.

7.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்: அன்பு என்னும் தாய் ஈற்ற அருள் என்னும் குழந்தை,பொருள் என்னும் வளர்ப்புத்தாயால் வளர்க்கப்படும்.

8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்: தன் கையில் பொருளை வைத்து கொண்டு ஒரு செயலை செய்வது,மலையின் மேல் ஏறி யானைப் போரை பார்ப்பது போன்றதாகும்.

9.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்: எதிரியை அழிக்கும் கூர்மையான கருவி செல்வமாகும்.அச்செல்வத்தை தேடி சேர்க்க வேண்டும்.

10.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு.
விளக்கம்: நல்ல வழியில் பொருளை சேர்ந்தவருக்கு அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாகக் கிடைக்கும்.

Thursday

TNPSC Tamil study material part-B Thirukkural


        பெரியாரைத் துணைக்கோடல்

           (நன்னெறியில் செலுத்தும்   பேரறிவுடையாரைத் துணையாகக் கொள்ளுதல்)

                       பொருட்பால்

                  அதிகாரம்(45)

                அறம்-அரசியல்

1.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
விளக்கம்: அறிவிலும்,ஒழுக்கத்திலும்,வயதிலும் பெரியவர்களின் நட்பை ஏற்று கொள்ள வேண்டும்.

2.உற்றுநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
விளக்கம்: தமக்கு வந்த துன்பத்தை நீக்கி துன்பம் வராதவாறு காக்கும் திறமையுடையவரை நட்பாக்கி கொள்ள வேண்டும்.

3.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
விளக்கம்: அறிவுமிக்க பெரியோர்களை உறவாக கொள்ள வேண்டும்.அதுவே ஒருவன் பெற வேண்டிய பேறுகளுள் அரிய பேறு ஆகும்.

4.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
விளக்கம்: நம்மை விட பெரியவர்களை நட்பாக்கி கொள்ள வேண்டும்.அதுவே சிறந்த வலிமையாகும்.

5.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழந்து கொளல்.
விளக்கம்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் பெரியயோர்களை கண்ணாக கொண்டு நடப்பதால் மன்னனுக்கு அரசபாரம் எளிதாக தோன்றும்.

6.தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
விளக்கம்: பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களுக்கு பகைவர்களால் எந்த தீங்கும் வராது.

7.இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
விளக்கம்: தவறுகளை சுட்டிகாட்டும் பெரியவர்களைத் துணையாகக் கொண்டு வாழ்பவர்களை அழிக்க எவருமிலர்.

8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
விளக்கம்: தவறுகளை சுட்டி காட்டும் பெரியவர்களின் துணையை மதிக்காதவன் பகைவர் இல்லை என்றாலும் தானே அழித்து விடுவான்.

9.முதலிலார்க்(கு) ஊதிய மில்லை மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை.
விளக்கம்: முதலீடு இல்லாத வணிகருக்கு எந்த ஊதியமும் இல்லை,அதுபோல பெரியோர் துணையில்லாதவர்க்கு எந்த நன்மையும் இல்லை.

10.பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
விளக்கம்: பெரியோர்களின் நட்பை கைவிடுவது பலரை பகைத்து கொள்வதை விட பலமடங்கு தீமை உடையது ஆகும்.

Monday

TNPSC Tamil study material part-B Thirukkural


              சான்றாண்மை
             (பண்புகளால் நிறைந்து நிற்றல்)

                         பொருட்பால்

                            அதிகாரம்(99)

                       பொருள்-குடியியல்

1.கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு.
விளக்கம்: நல்ல குணம் கொண்டவர்கள் நல்ல செயல்களை எல்லாம் தமது கடமை என நினைத்து வாழ்வர்.

2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
விளக்கம்: நல்ல குணங்களை கொண்டு இருந்தாலே எல்லா சிறப்பும் வந்து சேரும்.வேறு எந்த நலன்களும் சிறப்பை தராது.

3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.
விளக்கம்: அன்புடைமை,நாணம்,உதவி செய்தல்,இரக்கம் கட்டுதல்,உண்மை பேசுதல் போன்ற ஐந்து குணங்களை சான்றாண்மையின் தூண்களாகும்.

4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
விளக்கம்: தவம் என்பது பிற உயிர்களை கொல்லாமை,பிறர் குறைகளை சொல்லாமை சான்றாண்மை எனப்படும்.

5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
விளக்கம்: ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிக்க ஆற்றலும் பணிவாக நடத்தலும் வேண்டும்.அதுவே பகைவரை நண்பராக்க உதவும்.

6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
விளக்கம்: தம்மை விட ஆற்றல் குறைந்தவரிடத்தில் தோல்வி அடைத்தால் அதை ஏற்று கொள்ள வேண்டும்.அதுவே ஒருவரின் சான்றாண்மையை அறிய உதவும் உரைகல் ஆகும்.

7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
விளக்கம்: நமக்கு தீங்கு செய்தவருக்கு நன்மை செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் சான்றாண்மை பண்பு இருந்தும் எந்த பயனும் இல்லை.

8.இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
விளக்கம்: சான்றாண்மை என்னும் பண்பு ஒருவருக்கு இருந்தால் வறுமை அவருக்கு ஒரு குறையாக இருக்காது.

9.ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
விளக்கம்: சான்றாண்மை பண்பு கொண்டவர்களை கடல் என்று புகழ்வர்.உலகம் அழியும் காலம் வந்தாலும் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள்.

10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
விளக்கம்: சான்றாண்மை பண்பில் குறைவு ஏற்பட்டவர்களின் பாரத்தை பூமி தாங்காது.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....