Monday

TNPSC Tamil study material part-B Thirukkural


                   வினைத்திட்பம்

                  பொருட்பால்

                     அதிகாரம்(67)

                     பொருள்-அமைச்சியல்

1.வினைத்திட்பம் என்பது தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
விளக்கம்: மனஉறுதி என்பது ஒரு தொழிலை செய்யும் உறுதி ஆகும்.வேறு எந்த உறுதியும் சிறந்தது இல்லை.

2.ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்: வருமுன் காத்தல்,வந்த பின் தளராமை ஆகிய இரண்டும் வினைத்திட்பம் பற்றி அறிந்தவர்களின் செயல் ஆகும்.

3.கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.
விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வரை வெளியில் தெரியாமல் செய்வது திறமை ஆகும்.வெளிப்பட்டால் துன்பத்தை தரும்.

4.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்: ஒரு செயலை இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று சொல்வது எளிதாகும்.அதை போல் செய்து முடிப்பது அரியதாகும்.

5.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம்:ஒரு செயலை செய்து பெருமை பெற்றவரின் வினைத்திட்பமானது உலகத்தால் நன்கு மதிக்கபடும்.

6.எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்: ஒரு பொருளை பெற எண்ணியவர் அவற்றை பெற முயற்சி செய்தால் அவர் எண்ணியவற்றை பெற முடியும்.

7.உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
விளக்கம்: பெரிய தேரினை இயக்க உதவும் சிறிய அச்சாணி போல சிறுஉடம்பினர்கள் இவ்வுலகத்தில் உண்டு.அவர்களை நாம் இகழ கூடாது.

8.கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
விளக்கம்: மனதில் எண்ணிய செயலை மனம் தளராமலும் காலம் தாழ்த்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.

9.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
விளக்கம்: ஒரு செயலை செய்யும் போது பல துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது செய்து முடிந்தால் அச்செயல் முடிவில் இன்பத்தை தரும்.

10.எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
விளக்கம்: வேறு எந்த உறுதி இருந்தும் செய்யும் செயலில் உறுதி இல்லாதவரை இவ்வுலகம் மதிக்காது.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...