GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்
எழுதிய நூல்கள்.
பசுவய்யா
இயற்பெயர் : சுந்தர ராமசாமி
பிறந்த
ஊர் :
நாகர்கோவிலில் உள்ள மகாதேவர் கோவில்
காலம்
: 30/5/1931 – 14/10/2005
படைப்புகள்
: நடுநிசி
நாய்கள், ஜே.ஜே. சில குறிப்புகள், காற்றில் கரைந்த பேரோசை, யாரோ ஒருவனுக்காக, ஒரு புளியமரத்தின்
கதை, அக்கரைச் சீமையில், பிரசாதம், வாழ்க சந்தேகங்கள், மூன்று நாடகங்கள், வானமே இளவெயிலே
மரச்செறிவே, இறந்தகாலம் பெற்ற உயிர், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், தண்ணீர் அடைக்கலம்,
அகம், ஆளுமைகள், மதிப்பீடுகள், அந்த ஐந்து நிமிடங்கள்,லல்வு, கைக்குழந்தை, செங்கமலமும்
ஒரு சோப்பும், கிடாரி, பக்த துளசி, ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு,
ஸ்டாம்பு ஆல்பம், லீலை, தயக்கம், பள்ளம், டால்டாய்ஸ் தாத்தாவின் கதை.
குறிப்பு :
Ø இவர் சாந்தி, சதங்கை, ஞானரதம், தீபம், இலக்கியவட்டம்,
கசடதபற, போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
Ø தகழி சிவசங்கரன் பிள்ளையின்
செம்மீன், தோட்டியின் மகன் என்ற இரண்டு புதினங்களையும் மலையாளத்திலிருந்து மொழி பெயர்ந்துள்ளார்.
Ø இவருக்கு குமரன் ஆசான் நினைவு
விருது வழங்கப்பட்டுள்ளது.
Ø தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருதினையும் 2001 ல் இவர் பெற்றுள்ளார்.
Ø இவருக்கு 2004 ல் கதா சூடாமணி விருது வழங்கப்பட்டது.
Ø இவரை புதுக்கவிதையின் துருவ
நட்சத்திரம் என்றும் அழைத்தனர்.
Ø இவருக்கு சுந்தரராமசாமி என்ற
பெயரில் தமிழ் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Ø இவர் காலச்சுவடு என்ற பத்திரிக்கையை
1988 ல் நடத்தியுள்ளார்.
Ø தொலைவிலிருந்து கவிதைகள் இவரது
மொழி பெயர்ப்பு நூல் ஆகும்.
Ø இவர்
மலையாளம், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் நூல்களை மொழி பெயர்ந்துள்ளார்.
Ø இவர்
நினைவோடைகள் என்ற தலைப்பில் நாகராஜன், க.நா.சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், பிரமிள்,
ஜீவா, கிருஷ்ணன்நம்பி, சி.த.செல்லப்பா ஆகியோரைப் பற்றி எழுதியுள்ளார்.
மேற்கோள் :
v நகத்தை வெட்டியெறி………………..
No comments:
Post a Comment