Monday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)6ம் வகுப்பு பாடப்பகுதி


                 பகுதி அ

                                        இலக்கணம்

1.பொருத்துதல்

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:

6ம் வகுப்பு பாடப்பகுதி

ஆர்வலர் - அன்புடையவர்
என்பு - எலும்பு
வழக்கு - வாழ்க்கைநெறி
ஈனும் - தரும்
ஆர்வம் - விருப்பம்
நண்பு - நட்பு
வையகம் - உலகம்
மறம் - வீரம்
என்பிலது - எலும்பு இல்லாதது
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
வற்றல் மரம் - வாடிய மரம்
புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
அணியர் - நெருங்கி இருப்பவர்
சேய்மை - தொலைவு
செய் - வயல்
தலைசாயுதல் - ஓய்ந்துபடுதல்
வண்மை - கொடை
கோணி - சாக்கு
நடை - சாலையில் செல்லும் வண்டிகள்
பறப்பு - பறக்கும் வானூர்தி
ஞாலம் – உலகம்
மடவார் - பெண்கள்
காதல் புதல்வர் - அன்புமக்கள்
உணர்வு – நல்லெண்ணம்
வானப்புனல் – மழைநீர்
வையத்து அமுது – உலகின் அமுதம்
வையம் – உலகம்
தழை – செடி
தழையா வெப்பம் – பெருகும் வெப்பம்
தழைக்கவும் – குறையவும்
ஆற்றவும் – நிறைவாக
ஆறு – வழி
உணா – உணவு
வெய்யவினை – துன்பம் தரும் செயல்
வேம்பு – கசப்பான சொற்கள்
வீறாப்பு – இறுமாப்பு
கடம் – உடம்பு
ஒன்றோ – தொடரும் சொல்
அவல் – பள்ளம்
மிசை – மேடு
ஆடவர் – ஆண்கள்
ஈரம் – அன்பு
அளைஇ – கலந்து
படிறு – வஞ்சம்
செம்பொருள் – மெய்ப்பொருள்
அகன் – அகம்,உள்ளம்
அமர் – விருப்பம்
அமர்ந்து – விரும்பி
முகன் – முகம்
இன்சொல் – இனியசொல்
துன்புறூஉம் – துன்பம் தரும்
துவ்வாமை – வறுமை
யார்மாட்டும் – எல்லாரிடமும்
இன்புறூஉம் – இன்பம்தரும்
அணி – அழகுக்காக அணியும் நகைகள்
அல்லவை – பாவம்
நாடி – விரும்பி
நன்றி – நன்மை
பயக்கும் – கொடுக்கும்
சிறுமை – துன்பம்
மறுமை – மறுபிறவி
இம்மை – இப்பிறவி
ஈன்றல் – தருதல்,உண்டாக்குதல்
வன்சொல் – கடுஞ்சொல்
கவர்தல் – நுகர்தல்
அற்று – அதுபோன்றது
அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
ஆரைத்தான் – யாரைத்தான்
புவி – உலகம்
குரைகடல் – ஒலிக்கும்கடல்
மந்தி – பெண்குரங்கு
வான்கவிகள் – தேவர்கள்
பரிக்கால் – குதிரைக்கால்
கூனல் – வளைந்த
வேணி – சடை
மின்னார் – பெண்கள்
மருங்கு – இடை
சூள்உளை – கருவைத் தாங்கும் துன்பம்
கோட்டுமரம் – கிளைகளை உடைய மரம்
பீற்றல்குடை – பிய்ந்தகுடை

No comments:

Post a Comment

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....