Thursday

TNPSC Tamil - திருக்குறள் - கூடா நட்பு

 

திருக்குறள்

கூடா நட்பு (Source TN Textbook)

அதிகாரம்(83)

1. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.

2. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்

ஆகுதல் மாணார்க்கு அரிது.

4. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

5. மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்

சொல்லினால் தேறல்பாற்று அன்று.

6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க  வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.

8. தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லல் பாற்று.

10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.

No comments:

Post a Comment

பசுவய்யா

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....