Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil - திருக்குறள் - இன்னாசெய்யாமை

 

திருக்குறள்

இன்னாசெய்யாமை (Source TN Textbook)

அதிகாரம்(32)

1) சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள்.

2) கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள்.

3) செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.

4) இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

5) அறிவினான்ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.

6) இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.

7) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

8) தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.

9) பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

10) நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

No comments:

Post a Comment