சிறுபஞ்சமூலம்
“கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு.”
ஆசிரியர்-காரியாசன்
பாடல்-97
பொருள்-அறம்
சமயம்-சமணம்
பாடல் விளக்கம்:
கண்ணுக்கு அழகு இரக்கம் காட்டுதல்,காலுக்கு
அழகு பிறரிடம் பொருள்களை வாங்க செல்லாமல் இருத்தல்,ஆராய்ச்சிக்கு அழகு தான்
எடுக்கும் முடிவை பயப்படாமல் துணிவாக சொல்லுதல்,இசைக்கு அழகு அதனை கேட்போர் நன்றாக
இருக்கு என்று புகழ்தல்,அரசனுக்கு அழகு தன் நாட்டு மக்களை எந்த குறையும் இன்றி
காப்பான் என்று பிறர் புகழ்ந்து கூறுதல்.
நூற்குறிப்பு:
சிறுபஞ்சமுலம் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று.இதன் ஆசிரியர் காரியாசன்.இவரும் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரும்
ஒன்றாக படித்தவர்கள். இது தொண்ணூற்றேழு பாடல்களை
கொண்டது.கண்டங்கத்தரி,சிறுவழுதுதுணை,சிறுமல்லி,பெருமல்லி,
நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகை
வேர்களும் உடல் நோயை நீக்கும்.அதுபோல இந்நூலில் உள்ள பாடல்களின் கருத்து மக்களின்
மனநோயை போக்கும்.எனவே இதற்கு சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
No comments:
Post a Comment