Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil study material part-B Aranoolgal Muthumozhi kaanchi(அறநூல்கள்,முதுமொழிக்காஞ்சி)


            முதுமொழிக் காஞ்சி

               “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
               ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை
               காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
               மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
               வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை
               இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
               நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
              குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
              கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
             செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
            முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.”


ஆசிரியர்-மதுரைக் கூடலூர் கிழார்
பாடல்-100
பொருள்-அறம்
காலம்- சங்க காலத்திற்கு பின்

பாடல் விளக்கம்:

உலக மக்களுக்கு கல்வியை விட ஒழுக்கமே சிறந்தது.பிறரிடத்தில் அன்பு காட்டுவதை விட சிறந்தது அவர்கள் நம்மை போற்றும் படி நடப்பதே ஆகும். அறிவின் சிறப்பு நாம் கற்றதை மறவாமல் இருப்பதே ஆகும்.செல்வம் உடையவராக இருப்பதை விட உண்மையுள்ளாவராக இருப்பதே சிறந்தது.இளமையில் நோயில்லாமல் வாழ்வதே சிறந்தது.அழகு உள்ளவராக இருப்பதை விட பயமில்லாதவராக இருப்பதே சிறந்தது. பெருமைமிக்கவராக இருப்பதை விட ஒழுக்கமுடையவராக இருப்பதே சிறந்தது.சிறந்த நூல்களை கற்பதை விட பெரியோர்களை மதித்து நடப்பதே சிறந்தது.நமக்கு தீங்கு செய்தவரை தண்டிக்காது அவருக்கு நன்மை செய்வதே சிறந்தது.முற்காலத்தில் சேர்த்த செல்வத்தை பின்னர் குறைவு படாமல் காத்தலே சிறந்தது.

நூற்குறிப்பு:

முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.இதனை அறவுரைக்கோவை என்றும் அழைப்பர். இதில் பத்து அதிகாரங்கள் வீதம் பத்து பாடல்கள் உள்ளன.மொத்தம் நூறு பாடல்களை கொண்டது.கற்போரின் குற்றம் நீக்கி அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடையும் வழிமுறையை கூறும் நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும்.இந்நூலை நச்சினார்க்கினியர் போன்ற நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாகக் கையாண்டுள்ளனர்.


No comments:

Post a Comment