Tuesday

TNPSC Tamil - திருக்குறள் - கேள்வி

திருக்குறள்

 கேள்வி    (சான்றோர் உரைகளைக் கேட்டல்) (Source TN Textbook)

     பொருட்பால்

    அதிகாரம்(42)

  அறம்: அரசியல்

 1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

விளக்கம்: செல்வங்களுள் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும்.அதுவே எல்லா செல்வத்தை விடவும் சிறந்த செல்வமாகும்.

 

2.செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

விளக்கம்: வயிற்று பசியை போக்க உணவு தேவை.அதுபோல அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை.

 

3.செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

விளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால்,அவரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்.

 

4.கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

விளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும் போது சிறந்த துணையாக இருக்கும்.

 

5.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கல் உடைய நிலத்தில் நடப்போர்க்கு உன்றுகோல் போல உதவி புரியும்.

 

6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

விளக்கம்: நல்லோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும்,அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.

 

 

7.பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்(து)

ஈண்டிய கேள்வி யவர்.

விளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒற்றை தவறாக உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.

 

8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

விளக்கம்: கேள்வியால் துளையிடப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டுத் தன்மைக் கொண்ட காதாகக் கருதப்படும்.

 

9.நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.

விளக்கம்: நுட்பமான கருத்துக்களைக் கேட்டு அறியாதவர் நல்ல சொற்களைப் பேசுதல் அரிது.

 

10.செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

விளக்கம்: செவியால் உணரகூடிய சுவையை உணராது,வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள்,மாக்கள் என்றே கருதுவர்.  

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...