Latest Government Jobs and updates

Tuesday

TNPSC Tamil - திருக்குறள் - கல்வி

 

திருக்குறள்

    கல்வி (Source TN Textbook)

 

                 பொருட்பால்

 

                      அதிகாரம் (40)

 

                                அறம்: அரசியல்

 

1.கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

விளக்கம்: நூல்களை குற்றமறப் படிக்க வேண்டும். படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும்.கற்கும் முறையில் நடக்க வேண்டும்.

 

2.எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப  வாழும் உயிர்க்கு

விளக்கம்: எண் எனப்படும் கணக்கும்,சொல்லும் பொருளும் தரும் இலக்கியமும்,மனிதனுக்கு இரு கண் போன்றது.

 

3.கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்உடையர் கல்லா தவர்.

விளக்கம்: படித்த அறிவாளிகளே கண்களை உடையவர்கள்,படிக்காத அறிவிளிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.

 

4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

விளக்கம்: புலவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவரை விட்டு பிரியும் போது இவரை இனி எப்பொழுது காண்போம் என எண்ணுவதும், புலவர்களின் தொழிலாகும்.

 

5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

விளக்கம்: செல்வர்கள் முன் ஏழைகள் பணிவாக நடந்து கொள்வது போல கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.

 

6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

விளக்கம்: மணல் நிறைந்த இடத்தில் தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும்.அதுபோல நூல்களைக் கற்கக் கற்க அறிவு வளரும்.

 

7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

விளக்கம்: கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாம்,எந்த ஊரும் தன் ஊராம்.அப்பிடியிருக்க,சிலர் சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.

 

8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

விளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கு படிப்பு,ஏழேழு பிறவிக்கும் உதவும் என்பதே.

 

9.தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

விளக்கம்: கல்வியால் உலகம் இன்பம் அடையும்.அதைக் கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.

 

10.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

விளக்கம்: ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வி ஆகும்.மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும்.கல்வியே சிறந்த செல்வம் ஆகும்.

No comments:

Post a Comment