Thursday

TNPSC Tamil - திருக்குறள் - இனியவைகூறல்

 

திருக்குறள்

இனியவைகூறல் (இனிமை பயக்கும் சொற்களைப் பேசுதல்) (Source TN Textbook)

 அறத்துப்பால்

அதிகாரம்(10)

அறம்-இல்லறவியல்

1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

விளக்கம்: அன்பு நிறைந்து பேசுபவரின் வாய் சொற்கள் வஞ்சனை இல்லாது இருக்கும்.

2.அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒருவருக்கு மனம் விரும்பி பொருள்களை கொடுத்து மகிழ்வதை விட முகம் மலர்ந்து அவர்களிடம் பேசுவது நல்ல மகிழ்ச்சியை தரும்.

3.முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

விளக்கம்: தன்னை பார்க்க வருவோரை கண்டவுடன் முகம் மலர்ந்து இனிய சொற்களை பேசுவதே சிறந்த அறமாகும்.

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

விளக்கம்: எல்லாரிடமும் இனிய சொற்களை பேசுவதால் துன்பம் என்னும் வறுமை தம்மை அணுகாது.

5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம்: பிறரிடத்தில் பணிவாகவும் இனிய சொற்களை பேசுவதும் உண்மையான அணிகலன்கள் ஆகும்.வேறு எந்த அணிகலன்களும் அழகை தராது.

6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

விளக்கம்: பிறர்க்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது சிறந்த அறமாகும்.

7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

விளக்கம்: பிறருக்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது இன்பத்தை தரும்.

8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும்.

விளக்கம்: பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சொற்களை பேசாது இனிய சொற்களை பேசுபவனின் வாழ்வு இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இன்பத்தை கொடுக்கும்.

9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

விளக்கம்: இனிய சொல் பேசுவது இன்பத்தை தரும் என்று அறிந்தும்,பிறரிடம் கடுஞ்சொற்களை பேசுவது தவறான செயல் ஆகும்.

10.இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

விளக்கம்: பிறரிடம் பேசும் போது இனிய சொற்களை பேசாது துன்பம் தரும் கடுஞ்சொற்களை பேசுவது கையில் கனியை வைத்து கொண்டு காய்களை உண்பது போன்றது ஆகும்.

No comments:

Post a Comment

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....