Latest Government Jobs and updates

Sunday

TNPSC Tamil - இரட்டுற மொழிதல்

 இரட்டுற மொழிதல்  

          (Source TN Textbook)

1. கீரைப்பாத்தியும் குதிரையும்

 கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்

வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்

மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்

ஏறப் பரியாகு மே

பாடல் விளக்கம்:

 கீரைப்பாத்தியில்

       மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

 

குதிரை

      வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும். கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

     இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

2. ஆழிக்கு இணை

 

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

 

பாடல் விளக்கம்:

  தமிழ் :  

            தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப்

பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல் :

        கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று

வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.


No comments:

Post a Comment