Sunday

TNPSC Tamil - அறநூல்கள் - நாலடியார்

அறநூல்கள்

 நாலடியார் (Source TN Textbook)

  வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சி்றப்பின் அரசர் செறின்வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பி்ற.

 

பாடல் விளக்கம்:

       கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

 நூற்குறிப்பு:

 

       நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. 400 பாடல்களை கொண்டது.நாலடி நானூறு,குட்டி திருக்குறள் என்றும் சிறப்பு பெயர்கள் உண்டு.இந்நூலை சமண முனிவர் பாடியுள்ளார்.

No comments:

Post a Comment

பசுவய்யா

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....