Tuesday

TNPSC Tamil study material part-B Aranoolgal Nanmanikadikai(அறநூல்கள்,நான்மணிக்கடிகை)


          நான்மணிக்கடிகை

            “மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
            தனக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
            காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
              ஓதின் புகழ்சால் உணர்வு.”

ஆசிரியர்- விளம்பிநாகனார்
பாடல்-104
பொருள்-அறம்
சமயம்- வைணவம்
காலம்-4ம் நூற்றாண்டு(கடைச்சங்க காலம்)

பாடல் விளக்கம்:

குடும்பத்திற்கு விளக்குப் போன்றவள் பெண்.பெண்ணுக்கு விளக்குப் போன்றவர்கள் அவள் பெற்ற குழந்தைகள்.குழந்தைகளுக்கு விளக்குப் போன்றது கல்வி.கல்விக்கு விளக்காக விளங்குவது நல்ல எண்ணங்கள்.

நூற்குறிப்பு: 

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று,நான்மணிக்கடிகை.இதனை விளம்பிநாகனார் இயற்றியுள்ளார்.விளம்பி என்பது ஊர்பெயர்.நாகனார் என்பது இயற்பெயர். கடிகை என்றால் அணிகலன் என்று பொருள்.இதன் ஒவ்வொரு பாடல்களும் நான்கு கருத்துகளைக் கூறுகின்றது.இதற்கு நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்றும் பொருள் உண்டு.இதன் இரண்டு பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....