Latest Government Jobs and updates

Saturday

TNPSC Tamil study material part-B Thirukkural


                                                        வாய்மை

                                                   அறத்துப்பால்

                                                   அதிகாரம்(30)

                                 அறம்-துறவறவியல்

1.வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும்.

2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால் அதுவே வாய்மை எனப்படும்.

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
விளக்கம்: ஒருவன் மனசாட்சிக்கு விரோதமாக பொய் கூறினால்,அதுவே அவன் நெஞ்சை வருந்தி கொண்டிருக்கும்.

4.உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
விளக்கம்: ஒருவன் பொய் கூறாது வாழ்ந்தால் அவனை இவ்வுலகம் பாராட்டும்,எல்லார் உள்ளங்களிலும் இருப்பான்.

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
விளக்கம்: உள்ளத்திலும்,பேச்சிலும் தூய்மையாக இருப்பவரை தானம் தவம் செய்பவரைக் காட்டிலும் உயர்வாகக் கருதுவர்.

6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
விளக்கம்: ஒருவன் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருந்தால்,அவனுக்கு புகழும் நன்மையும் வந்து சேரும்.

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
விளக்கம்: பொய் சொல்லாது வாழ்ந்தால்,தான தருமங்கள் செய்யாமல் எல்லா அறங்களும் ஒரு சேர வந்து விடும்.

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம்: உடம்பு நீரால் தூய்மை அடையும்.அதுபோல,மனம் வாய்மையால் தூய்மை அடையும்.

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்: விளக்கானது இருளை நீக்கி வெளிச்சைத்தைத் தருவது போல,வாய்மை என்னும் விளக்கு சான்றோர்க்கு நல்ல புகழை தரும்.

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம்: உண்மை பேசுவதே இவ்வுலகில் பெரிய அறமாகக் கருதப்படுகிறது.அதுவே வாய்மையின் தலைமைப்பண்பாக  விளங்குகிறது.

No comments:

Post a Comment