Monday

TET Study Materials - Paper 2 Child development Unit 4

 

Teachers Eligibility Test   -   Paper 2

 

(i) Child Development and  Pedagogy

 

(Relevant to Age 11– 14)

 UNIT IV: Social, Emotional and Moral Development

 

Erikson’s stages of Social development (எரிக்சனின் உள சமூக வளர்ச்சிக் கொள்கை)

   

v  எரிக்சன் என்பவர் மனித வளர்ச்சியில் உடல்தேவைகளை விட சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார்.

 

v  குழந்தை வளர வளர அதன் சமூகத் தொடர்பு விரிவும் சிக்கலும் அடைகிறது.

 

v  இதனை எட்டு வளர்ச்சி நிலைகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

v  குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளில் குறிப்பிட்ட சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

v  இதனை எரிக்சன் எந்தெந்த சமூக நிலைகளில் என்னென்ன சமூக பிரச்சினைகள் எழக்கூடும் என்பதை விவரித்துள்ளார்.

 

 

F  முதல் நிலைகுழவிப்பருவம்  (பிறப்பு முதல் 2 வயது வரை)

 

è பிரச்சினைகள் : நம்பிக்கை வைத்தல் மற்றும் நம்பிக்கையின்மை

è முக்கிய நிகழ்வுகள் : உணவூட்டல்        

è சமூக செல்வாக்குகள் : தாய் மற்றும் செவிலியர்

 

F  இராண்டாவது நிலை – முன்பிள்ளைப் பருவம் (2 முதல் 3 வரை)

è பிரச்சினைகள் : சுதந்திரமாக இயங்குதல் மற்றும் வெட்கப்படுதல்

è முக்கிய நிகழ்வுகள் : கழிவறைப் பயிற்சி

è சமூக செல்வாக்குகள் : பெற்றோர்

 

F  மூன்றாவது நிலை – பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய நிலை (3 முதல் 5 வரை)

è பிரச்சினைகள் : தானே முற்பட்டு செயலாற்றுதல் மற்றும் குற்ற உணர்வு

è முக்கிய நிகழ்வுகள் : சுற்றுப்புறத்தை ஆராய்தல்

è சமூக செல்வாக்குகள் : ஆதாரக் குடும்பம்

 

F  நான்காவது நிலை – பள்ளிக்கு செல்லும் நிலை (6 வயது முதல் 12 வயது வரை)

è பிரச்சினைகள் : உற்சாகமாக உழைத்தல் மற்றும் தாழ்வுணர்வு

è முக்கிய நிகழ்வுகள் : சுற்றுப்புறம்,பள்ளி

è சமூக செல்வாக்குகள் : பள்ளி

 

F  ஐந்தாவது நிலை – குமரப்பருவம் (13 முதல் 19 வயது வரை)

è பிரச்சினைகள் : தன்னைப் பற்றிய நிலையான கருத்து மற்றும் தன்னைப் பற்றிய தெளிவற்ற குழப்பமான கருத்து

è முக்கிய நிகழ்வுகள் : சமூக உறவுகள்

è சமூக செல்வாக்குகள் : ஓப்பார் குழு,பிற குழுக்கள் விரும்பும் தன்மை

 

F  ஆறாவது நிலை – முன் முதிர் பருவம் (19 முதல் 4௦ வயது வரை)

è பிரச்சினைகள் : நெருக்கமான உறவும் ஒருமைப்பாட்டு உணர்வும் மற்றும் தனிப்பட்ட நிலைமை

è முக்கிய நிகழ்வுகள் : உறவுகள்

è சமூக செல்வாக்குகள் : நண்பர்கள்,பால் தொடர்பு உறுப்பினர்கள்,ஒத்துழைக்கும் மற்றும் போட்டியிடும் குழுக்கள்                                      

 

F  ஏழாவது நிலை – நடு முதிர் பருவம் (4௦ முதல் 65 வயது வரை)

è பிரச்சினைகள் : தாராள மனப்பான்மை மற்றும் தன்னுள் ஒடுங்கி செயல்படுதல்

è முக்கிய நிகழ்வுகள் : பணி மற்றும் பெற்றோராதல்

è சமூக செல்வாக்குகள் : பொறுப்புகளையும்,குடும்ப கடமைகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்வோர்

 

F  எட்டாவது நிலை – பின் முதிர் பருவம் (65 வயதுக்குப்பின்)

 

è பிரச்சினைகள் : நேர்மை மற்றும் முழுமையான நம்பிக்கை இழப்பு

è  முக்கிய நிகழ்வுகள் : தன் வாழ்வு பற்றிய ஆய்வு சிந்தனை

è சமூக செல்வாக்குகள் : மனித இனம்

 

Kohlberg’s stages of Moral development (கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சிக் கொள்கை)

 

v  குழந்தைகளிடம் அறநெறி சார்ந்த ஆய்வுத்திறன் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதை கோல்பர்க் கண்டறிந்தார்.

 

v  நன்னெறி தொடர்புடைய சில பிரச்சினைகளை வைத்து அவற்றிற்கு ஏற்ற தீர்வுகளை காண மாணவர்களை குழுக்களாகப் பிரித்து அவர்களின் முடிவை கேட்டு அறித்தார்.

 

v  மேலும் அவர்கள் கொடுத்த முடிவுகளையும் அறநெறி சார்ந்த காரணங்களையும் முன் வைத்து கோல்பர்க் சில முடிவுகளைக் கண்டறித்தார்.

 

v  11-12 வயதை அடையும்போது ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கத்தை இவர்கள் அடைகிறார்கள்.

 

v  இவர்கள் உணர்ச்சிகள்,தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் பிறரது நடத்தைகளை மதிப்பிடுவர்.

 

v  கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறார்.அவை ஒவ்வொன்றிலும் இரண்டு படிநிலைகள் என மொத்தம் ஆறு படிநிலைகள் உள்ளன.

 

F  முதல் நிலை : மரபுக்கு முற்பட்ட நிலை

படிநிலை I : தண்டனைக்கு அஞ்சி பணிந்து நடக்கும் போக்கு

படிநிலை II : தேவை நிறைவேற்றம் மற்றும் மகிழ்வுறுதல்

 

F  இரண்டாம் நிலை : மரபுநிலை

படிநிலை III : பிறர் அங்கீகாரத்தை பெறும் நோக்கு

படிநிலை IV : சட்டம் ஒழுங்கு நோக்கு

 

F  மூன்றாவது நிலை : மரபுக்கு பிந்தைய நிலை

படிநிலை V : சமூக ஒப்பந்த நோக்கு

படிநிலை VI : உலகளாவிய அறநெறிகள் இருத்தலை ஒப்புக்கொள்ளும் நோக்கு

Friday

TET Study Materials - Paper 2 Child development Unit 3

 

Teachers Eligibility Test   -   Paper 2

 Child Development and  Pedagogy

(Relevant to Age 11– 14)

 

UNIT III: Cognitive Development

 

Piaget’s stages of cognitive development (பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி கொள்கை)

அறிதிறன்:

v  அறிதிறன் என்பது புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல்,சுருக்கி அமைத்தல்,விரிவு படுத்தல்,நினைவு கூர்தல் போன்ற உளச் செயல்களை ஆராய்ந்து அவற்றை பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் ஆகும்.

 

v  வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்களே அறிதிறன் செயல்கள் ஆகும்.

 

v  இவை அனைத்தும் நமது புலன்காட்சி,கவனம்,சிந்தனை,

ஆராய்ந்தறிதல்,பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல்,நினைவு ஆகிய செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.

 

       அறிதிறன் வளர்ச்சி

v  சுவிட்ஸர்லாந்து சேர்ந்த ஜீன் பியாஜே என்பவரின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சி என்பது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமாகவும் அமைந்த படிநிலைகளைக் கொண்டுள்ளது.

 

v  இவ்வாறு நடக்கும் வளர்ச்சியானது நான்கு வளர்ச்சி நிலைகளாகவும் அவற்றிற்கு உரிய நடத்தை மாற்றங்களையும் கொண்டதாக அமைகிறது.

 

v  இவரின் கருத்துப்படி குழந்தை தன்னுடைய அனுபவங்களை ஒருங்கமைத்து இணக்கமான நடத்தைப் பெற உதவும் கருவியே நுண்ணறிவுவாகும்.

 

     அறிதிறன் வளர்ச்சி என்னும் செயல்பாடு

                அறிதிறன் வளர்ச்சி என்னும் செயல்பாட்டின் உட்கூறுகள் நான்கு வகைப்படும்.

(i)      தன்வயப்படுத்தல்

(ii)    பொருத்துதல்

(iii)   இணங்குதல்

(iv)  ஒருங்கமைத்தல்

அறிதிறன் வளர்ச்சிப் படிநிலைகள் நான்கு வகைப்படும்.

(i)      புலனியக்கநிலை (௦ முதல் 2 வரை)

(ii)    செயலுக்கு முற்பட்ட நிலை (2 முதல் 7 வரை)

(iii)   பருப்பொருள் நிலை (7 முதல் 11 வரை)

(iv)  கருத்தியல் நிலை (11 வயதுக்கு மேல்)

 

Bruner’s Theory

       

v  யூரி பிரான் ஃபென்ப்ரென்னர் என்ற அமெரிக்க உளவியலாளர் சூழியத் தொகுதிகள் அமைப்புக் கொள்கையை உருவாக்கினார்.

 

v  இக்கொள்கையானது குழந்தையின் உள்ளார்ந்த பண்புகளையும் அக்குழந்தை சூழ்ந்துள்ள சுற்றுசூழல் தொகுதிகளும் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து அக்குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாடு அடைவதில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை விளக்குகிறது.

 

குழந்தையின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்தும் நிலைகள்:

v  நுண் அமைப்பு

 

v  இயல்பான அல்லது இடைநிலை அமைப்பு

 

v  உடனடிச் சுற்றுச்சூழலுக்கு வெளியே உள்ள சூழல்

 

v  பெரு அமைப்பு

 

v  சுற்றுச்சூழல் அமைப்புகளில் கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...