Latest Government Jobs and updates

Tuesday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)8ம் வகுப்பு பாடப்பகுதி


8ம் வகுப்பு பாடப்பகுதி

சுடர் – ஒளி
ஆனந்தம் – மகிழ்ச்சி
பராபரம் – மேலான பொருள்,இறைவன்
வினை – செயல்


காப்பு – காவல்
நீரவர் – அறிவுடையார்
கேண்மை – நட்பு
பேதையார் – அறிவிலார்
நயம் – இன்பம்
நகுதல் – சிரித்தல்
நட்டல் – நட்புக்கொள்ளுதல்
இடித்தல் – கடிந்துரைத்தல்
கிழமை – உரிமை
முகநக – முகம் மலர
அகம் – உள்ளம்
ஆறு – நல்வழி
உய்த்து – செலுத்தி
அல்லல் – துன்பம்
உடுக்கை – ஆடை
இடுக்கண் – துன்பம்
களைவது – நீக்குவது
கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்
ஊன்றும் – தாங்கும்
புனைதல் – புகழ்தல்
புல் – கீழான
குழவி – குழந்தை
பிணி – நோய்
கழறும் – பேசும்
மயரி – மயக்கம்
சலவர் – வஞ்சகர்
மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
குவை – குவியல்
மாரன் – மன்மதன்
அளகு – கோழி
ஆழி – கடல்
வடிஅம்பு – வடிக்கப்பட்ட அம்பு
விசும்பு – வானம்
செற்றான் – வென்றான்
அரவு – பாம்பு
பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
வள்ளை – ஒரு வகை நீர்க்கொடி
கடா – எருமை
வௌவி – கவ்வி
சங்கின் பிள்ளை – சங்குக்குஞ்சுகள்
கொடி – பவளக்கொடி
கோடு – கொம்பு
கழி - உப்பங்கழி
திரை – அலை
மேதி – எருமை
கள் – தேன்
புள் – அன்னம்
சேடி – தோழி
ஈரிருவர் – நால்வர்
ஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்
தார் – மாலை
செம்மைசேர் – புகழ்மிகு
கடிமாலை – மணமாலை
சூழ்விதி – நல்வினை
காசினி – நிலம்
நன்னுதல் – அழகிய நெற்றி
வெள்கி – நாணி
களிகூர – மகிழ்ச்சி பொங்க
வயவேந்து – வெற்றிவேந்தன்,நளன்
ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
மல்லல் – வளம்
மறுகு – அரசவீதி
மடநாகு – இளைய பசு
மழவிடை – இளங்காளை
செம்மாந்து – பெருமிதத்துடன்
மது – தேன்
தியங்கி – மயங்கி
சம்பு – நாவல்
மதியம் – நிலவு
வாய்மை – உண்மை
களையும் – நீக்கும்
வண்மை – வள்ளல்தன்மை
துலங்குதல் – விளங்குதல்
சேய்மை – தொலைவு
தவம் – பெரும்பேறு
திடம் – உறுதி
மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
உபாயம் – வழிவகை
நகை – புன்னகை
முகை – மொட்டு
மேனி – உடல்
தாது – மகரந்தம்
போது – மலர்
பொய்கை – குளம்
பூகம் – கமுகம்,பாக்குமரம்
திறல் – வலிமை
மறவர் – வீரர்
வழக்கு – நன்னெறி
ஆன்ற – உயர்ந்த
நயன் – நேர்மை
நன்றி – உதவி
பாடறிவார் – நெறியுடையார்
மாய்வது – அழிவது
அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
நண்பு – நட்பு
நயம்இல – தீங்கு,இனிமையற்ற
கடை – இழிவு
நகல்வல்லர் – சிரித்துமகிழ்பவர்
மாயிரு ஞாலம் – மிகப்பெரிய உலகம்
திரிந்தற்று – திரிந்தது போன்றது
பசியறாது – பசித்துயர் நீங்காது
அயர்ந்த – களைப்பற்ற
நீடிய – தீராத
வான்பெற்ற நதி – கங்கையாறு
துழாய் அலங்கல் – துளசிமாலை
களபம் – சந்தனம்
புயம் – தோள்
தைவந்து – தொட்டுத்தடவி
ஊன் – தசை
பகழி – அம்பு
நாமம் – பெயர்
இருநிலம் – பெரிய உலகம்
கைம்மாறு – பயன்
மாசற்ற – குற்றமற்ற
தேட்டையிட – செல்வம்திரட்ட
மீட்சி – மேன்மை
மாள – நீங்க
மதி – அறிவு
அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
உதயம் – கதிரவன்
மதுரம் – இனிமை
நறவம் – தேன்
கழுவுதுகளர் – குற்றமற்றவர்
சலதி – கடல்
அலகுஇல் – அளவில்லாத
புவனம் – உலகம்
மதலை – குழந்தை
பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்,வைத்தீசுவரன் கோவில்

Monday

TNPSC Tamil study material Part-A Poruthuthal(பொருத்துதல்)7ம் வகுப்பு பாடப்பகுதி


7ம் வகுப்பு பாடப்பகுதி

பண் – இசை
வண்மை – கொடைத்தன்மை
போற்றி – வாழ்த்துகிறேன்
புரை – குற்றம்
பயக்கும் – தரும்
சுடும் – வருத்தும்
எய்யாமை – வருந்தாமை
அகம் – உள்ளம்
அமையும் – உண்டாகும்
அறிகை – அறிதல் வேண்டும்
தானை – படை
கடனே – கடமை
ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
காதல் – அன்பு,விருப்பம்
மேதை – அறிவு நுட்பம்
வண்மை – ஈகை,கொடை
பிணி – நோய்
மெய் – உடம்பு
சிறந்தன்று – சிறந்தது
வழிபடுதல் – போற்றி வணங்குதல்
துன்னலர் – பகைவர்,அழகிய மலர்
பரிவாய் – அன்பாய்
சாடும் – தாக்கும்,இழுக்கும்
ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
மெத்த – மிகுதியாக
பந்தயம் – போட்டி
புலவீர் – புலவர்களே
கலைமடந்தை – கலைமகள்
உண்பொழுது – உண்ணும் பொழுது
பெறினும் – பெற்றாலும்
பால்பற்றி – ஒருபக்கச்சார்பு
தோல்வற்றி – தோல்சுருங்கி
சாயினும் – அழியினும்
குன்றாமை – குறையாது இருத்தல்
தூஉயம் – தூய்மை உடையோர்
ஈயும் – அளிக்கும்
நில்லாமை – நிலையாமை
நெறி – வழி
தூய்மை – தூயதன்மை
மாந்தர் – மக்கள்
நிறைஒழுக்கம் – மேலான ஒழுக்கம்
தேற்றாதான் – கடைப்பிடிக்காதவன்
வனப்பு – அழகு
தூறு – புதர்
வித்து – விதை
புண்ணியனார் – இறைவர்
உருகுவார் – வருந்துவார்
பதுமை – உருவம்
மெய்ப்பொருள் – நிலையானபொருள்
கணக்காயர் – ஆசிரியர்
மாரி – மழை
சேமம் – நலம்
தேசம் – நாடு
முட்டு – குவியல்
நெத்தி – நெற்றி
திரு – செல்வம்
நிவேதனம் – படையலமுது
கனகம் – பொன்
புரவி – குதிரை
கோ – அரசன்
கடுகி – விரைந்து
மேழி – கலப்பை,ஏர்
வேந்தர் – மன்னர்
ஆழி – மோதிரம்
கசடு – குற்றம்
எண் – எண்கள்,கணக்கு
எழுத்து – இலக்கண இலக்கியங்கள்,வரிவடிவம்
உவப்ப – மகிழ
தலைக்ககூடி – ஒன்றுசேர்ந்து
உடையார் – செல்வர்
இல்லார் – ஏழை
ஏக்கற்று – கவலைப்பட்டு
கடையர் – தாழ்ந்தவர்
மாந்தர் – மக்கள்
சாந்துணையும் – சாகும்வரையிலும்
ஏமாப்பு – பாதுகாப்பு
காமுறுவர் – விரும்புவர்
விழுச்செல்வம் – சிறந்தசெல்வம்
மாடு – செல்வம்
தத்தும் புனல் – தத்திச்செல்லும் நீர்
சித்ரம் – சிறப்பான காட்சிகள்
கதி – துணை
பேறு – செல்வம்
நனி – மிகுதி,மிக்க
தரம் – தகுதி
புவி – உலகம்
விண் – வானம்
வரை – மலை
முழவு – மத்தளம்
மதுகரம் – தேன் உண்ணும் வண்டு