Wednesday

TNPSC Tamil study material part-B Thirukkural


          செய்நன்றியறிதல்

                 அறத்துப்பால்

                     அதிகாரம்(11)

                 அறம்-இல்லறவியல்

1.செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்: நாம் பிறர்க்கு ஒரு உதவியும் செய்யாதிருக்க,நமக்கு பிறர் செய்கின்ற உதவிக்கு இந்த மண்ணுலகமும்,விண்ணுலகமும் ஈடாகாது.

2.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம்: வேண்டிய காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யபட்ட காலத்தை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுலகத்தை விட பெரியதாகும்.

3.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம்: எந்த பயனையும் எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவி கடலை விட பெரியதாகும்.

4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
விளக்கம்: ஒருவன் தினை அளவு உதவி செய்தாலும் அப்பயனை உணர்ந்தவர் அவ்வுதவியை பனை அளவாக கருதி போற்றுவர்.

5.உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்: ஒருவருக்கு செய்யும் உதவி அவ்வுதவியின் அளவை வைத்து மதிக்ககூடாது.அவ்வுதவி செய்யபட்டவரின் தன்மையை வைத்து மதிக்க வேண்டும்.

6.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
விளக்கம்: துன்பம் வந்த காலத்தில் நமக்கு உதவி செய்தவரின் நட்பை கைவிட கூடாது.அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.

7.எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:நமக்கு துன்பம் நேர்ந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பை ஏழு பிறவிகளிலும் மறக்க கூடாது.

8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
விளக்கம்: பிறர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.ஆனால் அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்.

9.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
விளக்கம்: உதவி செய்த ஒருவர் கொலை குற்றம் செய்தாலும் அவர் முன்பு செய்த நன்மையை நினைக்க தீமை மறைந்துவிடும்.

10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
விளக்கம்: எந்தவித தவறு செய்தவனுக்கும் தப்பிக்க வழிகள் உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அதிலிருந்து தப்ப வழி இல்லையாம்.

Thursday

TNPSC Tamil study material part-B Thirukkural


                                               ஒப்புரவறிதல்

                                                    அறத்துப்பால்

                                           அதிகாரம்(22)

                 அறம்-இல்லறவியல்  
                                              
1.கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
விளக்கம்: மழை பொழியும் மேகத்திற்கு நாம் கைம்மாறு செய்வது இல்லை. அதுபோல,பிறர்க்கு உதவி செய்து விட்டு அவர்களிடம் கைம்மாறு எதிர்பார்க்ககூடாது.

2.தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறர்க்கு கொடுத்து உதவ வேண்டும்.

3.புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.

4.ஒத்த தறிவானுயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழ்பவரை உயிர் உள்ளவராக மதிப்பர்.உதவி செய்யாதவரை இறந்த பிணமாகக் கருதுவர்.

5.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்: மக்களுக்கு பயன்படும் கிணற்றில் நீர் நிறைந்து இருப்பது போல பிறர்க்கு உதவுபவரின் செல்வமும் குறையாது.

6.பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்.
விளக்கம்: ஊர் நடுவே இருக்கும் மரத்தின் பழம் எல்லார்க்கும் பயன்படுவது போல, உதவி செய்பவரின் செல்வமும் பயன்படும்.

7.மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்பவனின் செல்வமானது மற்றவர்க்கு எல்லா துன்பங்களையும் போக்கும் மருத்து மரமாகப் பயன்படுகிறது.

8.இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்: பிறர்க்கு உதவி செய்யும் குணம் உடையவர் தன்னிடம் பொருள் இல்லாத வறுமையாக இருந்தாலும் உதவி செய்ய தயங்கமாட்டார்கள். 
        
9.நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
விளக்கம்: பிறர்க்கு உதவும் இயல்பு உடையவர் உணவு பொருள் இல்லாத நிலையை வறுமை என்று கருதமாட்டார்.பிறர்க்கு உதவ முடியாத நிலையை வறுமை என்று கருதி வருந்துவர்.

10.ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
விளக்கம்: பிறர்க்கு உதவுவதால் தன் செல்வம் அழியும் நிலை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை விற்றாவது பிறர்க்குஉதவி செய்பவருக்கு புகழ் கிடைக்கும்.

Tuesday

TNPSC Tamil study material part-B Thirukkural


             வலியறிதல்

                        பொருட்பால்

                         அதிகாரம்(48)

                       அறம்-அரசியல்

1.வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன் தன் வலிமையும் பகைவர் வலிமையும் துணை நிற்பவர் வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

2.ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
விளக்கம்: ஒரு செயலை மேற்கொள்ளும் போது,அதை பற்றி நன்கு அறிந்து தெரிந்து செயல்படுவதால் அச்செயல் நன்றாக முடியும் என்பதே.

3.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம்: தன்னுடைய பலத்தை அறிந்து செயல்பட வேண்டும்.அவ்வாறு செயல்படாமல் தோல்வி அடைத்தவர்கள் பலர்.

4.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
விளக்கம்: எதிரியின் வலிமையை தெரிந்து கொள்ளாமல் தன்னை பெருமை பாராட்டுபவன் விரைவில் கெட்டு அழிவான்.

5.பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம்: மயில் இறகை அளவுக்கு மிகுதியாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும்.அதுபோல வலிமைமிக்கவன் பகைவரிடம் அளவுக்கு மீறி பகை கொண்டால் அழிந்து விடுவான்.

6.நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.
விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏற நினைப்பது உயிர்க்கே அழிவை உண்டாக்கும்.எதிரியை அழிக்க எல்லை மீறி முயற்சி செய்வது அழிவை உண்டாக்கும்.

7.ஆற்றி னளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
விளக்கம்: தன்னிடம் இருக்கும் பொருளை அறிந்து பிறர்க்கு உதவ வேண்டும்.அதுவே சிறப்பாக வாழ வழிவகுக்கும்.

8.ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
விளக்கம்: வருவாய் சிறியதாக இருந்தால் செலவை விரிவுபடுத்தாமல் குறைந்து செலவு செய்தால் நம் வாழ்வில் எந்த தீங்கும் வராது.

9.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
விளக்கம்: பொருளின் அளவை அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை எல்லா வளமும் இருப்பது போல அழிந்து விடும்.

10.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
விளக்கம்: தனக்கு உள்ள செல்வத்தின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் பிறர்க்கு உதவுவது செல்வத்தை எல்லாம் விரைவில் அழித்து விடும்.

TNPSC Tamil study material part-B Thirukkural


                           காலமறிதல்

            (செயலை நிறைவேற்றுவதற்கு                 ஏற்ற காலத்தை அறிதல்)

                           பொருட்பால்

                             அதிகாரம்(49)

                     அறம்-அரசியல்

1.பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம்: காகம் தன்னை விட வலிமையான கோட்டானை பகலில் வெல்லும்.அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும்.

2.பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
விளக்கம்: ஒரு செயலை அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.

3.அருவினை என்ப உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்.
விளக்கம்: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும் கருவியையும் அறிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

4.ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்: காலத்திற்காகக் காத்திருந்து இடம் அறிந்து செயல்பட்டால் இவ்வுலகத்தையே வெல்ல முடியும்.

5.காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
விளக்கம்: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர் அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பர்.

6.ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்கம்: ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பது,ஆடு தன் எதிரியை தாக்க பின்வாங்கி சென்று தாங்குவது போல தாங்கி வெற்றி பெறுவான் என்பதே.

7.பொள்ளேன ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம்: அறிவுடையவர் தன் பகைவர் தீங்கு செய்தால் உடனே கோபம் கொள்ளாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க காலம் வரும் வரை காத்திருப்பர்.

8.செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
விளக்கம்: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும்போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு முடிவுகாலம் வரும் போது கெட்டு அழிவார்கள்.

9.எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
விளக்கம்: செய்தற்கரிய செயலை செய்ய அரிய வாய்ப்பு கிடைக்கும் போதே செய்து முடித்தல் வேண்டும்.

10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
விளக்கம்: கொக்கு இரைக்கு காத்திருத்து இரை வந்ததும் விரைந்து செயல்படுவது போல நாமும் காத்திருந்து செயல்பட வேண்டும்.

தேவதேவன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....