BLOCK EDUCATIONAL OFFICER
(வட்டாரக் கல்வி அலுவலர்)
Part I
தமிழ்
இலக்கணம்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
v நம் முன்னோர்கள் பெயர்ச்சொற்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை,
F இடுகுறிப்பெயர்
F காரணப்பெயர்
இடுகுறிப்பெயர்
è நம் முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் இல்லாமல் பெயர் இட்டுள்ளனர்.
è அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுக்குறிப்பெயர்கள் ஆகும்.
è (எ.கா) மண், மரம், காற்று.
è இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
F இடுக்குறிப் பொதுப்பெயர்
F இடுக்குறிச் சிறப்புப்பெயர்
இடுக்குறிப் பொதுப்பெயர்
è
ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய
எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுக்குறிப் பொதுப்பெயர் ஆகும்.
è
(எ.கா) மரம், காடு.
இடுக்குறிச் சிறப்புப்பெயர்
è
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு
பொருளை மட்டும் குறிப்பது இடுக்குறிச்
சிறப்புப்பெயர் ஆகும்.
è
(எ.கா) மா, கருவேலங்காடு
காரணப்பெயர்
è நம் முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் கருதி பெயர் இட்டுள்ளனர்.
è அவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும்.
è (எ.கா) நாற்காலி, கரும்பலகை.
è இதனை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
F காரணப் பொதுப்பெயர்
F காரணச் சிறப்புப்பெயர்
காரணப் பொதுப்பெயர்
è
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய
எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது காரணப் பொதுப்பெயர் ஆகும்.
è
(எ.கா) பறவை, அணி.
காரணச் சிறப்புப்பெயர்
è
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப்
பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச் சிறப்புப்பெயர் ஆகும்.
è (எ.கா) வளையல், மரங்கொத்தி.
No comments:
Post a Comment