Latest Government Jobs and updates

Tuesday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

 

BLOCK EDUCATIONAL OFFICER

 (வட்டாரக் கல்வி அலுவலர்)

   Part I

         தமிழ்

இலக்கணம்

மயங்கொலிகள்

v  மயங்கொலி எழுத்துகள் – எட்டு

                   ண, ன, ந, ல, ழ, ள, ர, ற

ண, ன, ந எழுத்துகள்

F – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

F - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

F - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

Ø  (ட்,ண்) (த்,ந்) (ற்,ன்) – இன எழுத்துகள்

Ø  டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,

Ø  தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,

Ø  றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

v  என்னும் எழுத்துக்கு முன் ண் வரும் எழுத்துகள்

(கண்டம், வண்டி, நண்டு)

v  என்னும் எழுத்துக்கு முன் ன் வரும் எழுத்துகள்

(மன்றம், நன்றி, கன்று)

Ø  ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் வந்தால் பொருள் வேறுபடும்.

è வாணம் – வெடி

è வானம் – ஆகாயம்

è பணி – வேலை

è பனி – குளிர்ச்சி

ல, ள, ழ எழுத்துகள்

F – நா மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் வகர லகரம் என்பர்.

F – நா மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்பர். இதனை பொது ளகரம் என்றும் அழைப்பர்.

F – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருவதால் ழகரம் தோன்றும். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர லகரம்’ என்பது இலக்கண மரபு. இதனைச் சிறப்பு ழகரம் என்றும் அழைப்பர். ழ தமிழுக்கே சிறப்பானது.

F ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்.

è விலை – பொருளின் மதிப்பு

è விளை – உண்டாக்குதல்

è விழை – விரும்பு

è இலை – செடியின் இலை

è இளை – மெலிந்து போதல்

è இழை – நூல் இழை

 

ர, ற எழுத்துகள்

F – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றும். இது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்பர்.

F - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப் பகுதியை

உரசுவதால் றகரம் தோன்றும். இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்பர்.

è ஏரி – நீர் நிலை

è ஏறி – மேலே ஏறி

è கூரை – வீட்டின் கூரை

è கூறை – புடவை


No comments:

Post a Comment