Teachers Eligibility Test - Paper 2
(i) Child Development and Pedagogy
(Relevant to Age 11– 14)
UNIT
V: Learning
Nature
and importance of learning
Nature of learning (கற்றலின்
தன்மைகள்)
v கற்றல் அனைத்து உயிரிகளிடமும் காணப்படுகின்றது.
v கற்றல் என்பது தொடர்ச்சியானது.
v கற்றலால் நடத்தை செம்மையுறுகிறது.
v கற்றல் நோக்கத்தோடு கூடியது.
v கற்றல் பன்முகம் கொண்டது.
v கற்றல் அனுபவங்களால் விளைவது.
v கற்றல் என்பது பிறரால் அளிப்பது அல்ல மாறாக தங்களது சுய
அனுபவங்களால் கற்றுக் கொள்ளுவது ஆகும்.
Importance of learning
கற்றலுக்கு
அளிக்கப்படும் மூன்று முக்கிய கூறுகள்:
v
செயல் : முயற்சியால்
அறிவு,செய்திறன்கள்,மனப்பான்மைகள் போன்றவற்றைப் பெறும் செயல்.
v
விளைவு : நடத்தை
மாற்றத்தை விளைவித்தல்
v
விளைவின் தன்மை : கற்றலினால்
விளையும் நடத்தை மாற்றம்,ஓரளவு நிலைத்த தன்மையைப் பெற்றிருத்தல்.
Factors influencing the learning
(கற்றலில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகள்)
v
ஊக்குவித்தல்
v
கற்போரின் தன்மைகள்,ஆற்றல்கள்,தேவைகள்
மற்றும் கற்கும் திறன்
v
கற்கும் சூழல்கள்
v
கற்பிக்கும்
ஆசிரியரின் பண்புகள் மற்றும் திறமைகள்
v
கற்கும் முறைகள்
v
கற்றலுக்குக்
கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் வசதிகள்
Theory of learning
(கற்றல் கொள்கை)
v
பல்வேறு
உளவியலாளர்கள் கற்றல் நிகழும் தருணங்களை உற்றுநோக்கி ஆய்வகச் சோதனைகளுக்கு
உட்படுத்தி கற்றல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.இதனை கற்றல் கொள்கை
என்கின்றனர்.
v
கற்றல் கொள்கையை
ஆறு அம்சங்களாக பிரித்துள்ளனர்.அவை,
(i)
கற்றல் என்றால்
என்ன?அல்லது கற்றல் எவ்வாறு நிகழ்கிறது?
(ii)
கற்றலில் தனியாள்
வேறுபாட்டிற்கான’ காரணம் என்ன?
(iii) மறத்தல் ஏன் நிகழ்கிறது?
(iv) கற்றலில் பரிசு,தண்டனை இவற்றின் பங்கென்ன?
(v)
கற்றல் மாற்றம்
எவ்விதம் ஏற்படுகிறது?
(vi) கற்றலை ஊக்கப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
v
கற்றல் கொள்கையை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
(i)
தூண்டல் – துலங்கல் தொடர்புக் கொள்கைகள்
(ii) கெஸ்டால்ட் (அ)
அறிவுப்புலக் கொள்கைகள்
Pavlov’s
Classical Conditioning Theory (பாவ்லாவின் ஆக்கநிலையிருத்த கற்றல்
கொள்கை)
v பாவ்லாவ் என்ற இராஷ்ய நாட்டை சேர்ந்த உடற்கூற்று வல்லுநரால்
நடத்தப்பட்ட பல பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் உருவான
கற்றல் வகை தான் சிறப்பு ஆக்கநிலையிறுத்தம் எனப்படும்.
v விலங்கினங்கள் ஆக்கநிலையிறுத்தம் மூலம் சிறப்பாகக் கற்றுக்
கொள்கின்றன என்று பாவ்லாவ் ஒரு சோதனை வாயிலாக விளக்கினார்.
v இந்த சிறப்பு ஆக்கநிலையிறுத்தம் பாவ்லாவின்
ஆக்கநிலையிறுத்தம் என்றும் எதிர்வினை ஆக்கநிலையிறுத்தம் என்றும் குறிப்பிடுவர்.
v ஒரு செயற்கைத் தூண்டலை இயற்கைத் தூண்டலோடு இணைத்துக்
கொடுப்பதன் மூலம் அவற்றிற்கு இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தும் கற்றலை
ஆக்கநிலையிறுத்தக் கற்றல் என்பர்.
பாவ்லாவின் பரிசோதனை
v நாயின் வாயில் இயற்கைத் தூண்டலான மாமிசத் துண்டை வைக்கும்
போது நாயிடம் தோன்றும் உமிழ்நீர் சுரத்தல் என்பது இயல்பான எதிர்வினை அல்லது
கட்டுப்படுத்தப்படாத எதிர்வினை ஆகும்.
(I) ஆக்க நிலையிறுத்தம் ஏற்படுவதற்கு முன்:
உணவு - உமிழ்நீர்
சுரத்தல்
மணி ஓசை – ஒரு குறிப்பிட்ட துலங்கல் இல்லை
(II) ஆக்க நிலையிறுத்தம் ஏற்படுதல்
மணி ஓசை + உணவு –
உமிழ்நீர் சுரத்தல்
(III) ஆக்க நிலையிறுத்தம் ஏற்பட்டபின்
மணி ஓசை –
உமிழ்நீர் சுரத்தல்
:
ஆக்கநிலையிறுத்தக் கோட்பாடுகள்
(i)
உருவாதல் விதி
(ii) ஆக்கநிலையிறுத்தம்
அழிந்து போதல்
(iii) பொதுமைப்படுத்துதல்
விதி
(iv) வேறுபடுத்தி
அறிதல் அல்லது பிரித்து உணர்தல்
(v) இரண்டாம் நிலை
ஆக்கநிலையிறுத்தம்
Skinner’s Operant Conditioning (ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தம்)
v
அமெரிக்க
உளவியலாளாரான B.F.ஸ்கின்னர் என்பவர் எந்தத் தூண்டலும் உயிரியிடத்தில் ஒரு
குறிப்பிட்ட துலங்கலை வெளிக் கொணரக் கூடிய ஆற்றல் பெற்றதில்லை என்று கூறினார்.
v
உயிரி
தன்னிச்சையாக பல்வேறு துலங்கல்களை வெளிப்படுத்துகிறது.
v
எடுத்துக்காட்டாக,
எலி காரணம் ஏதுமின்றி முகத்தை நாக்கால் நக்கிக் கொள்கிறது.நாய் குரைக்கிறது.புறா
தரையைக் கொத்துகிறது.
v
இவை யாவும்
உயிரியால் தன்னிச்சையாக வெளியிடப்பட்ட துலங்கல்கள் ஆகும்.
v
ஓர் உயிரி பல்வேறு
துலங்கல்களை வெளியிடும்போது அவற்றில் நாம் விரும்பும் ஒரு குறிப்பிட்ட துலங்கல்
தோன்றும்.
v
அவ்வாறு தோன்றும்
போது உடனடியாகப் பாராட்டுதல் அல்லது பரிசளித்தல் போன்ற வலுவூட்டியை அளித்தால்
அந்தக் குறிப்பிட்ட துலங்கல் திரும்பக் திரும்ப தோன்றி அதுவே ஒரு பழக்கமாக
மாறிவிடும்.
v
எனவே நாம்
விரும்பும் துலங்கலை வலுவூட்டி நடத்தையாக ஆக்குதல் ஸ்கின்னரின் செயல்படு
ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை அம்சமாகும்.
v
செயல்படு
ஆக்கநிலையிறுத்தத்தை ‘‘துலங்கல் சார் ஆக்கநிலையிறுத்தம்’’ என்றும் பாவ்லாவின் ஆக்கநிலையிறுத்தத்தை
‘‘தூண்டல்சார் ஆக்கநிலையிறுத்தம்’’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
v
செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தில்
வலுவூட்டியானது நாம் எதிர்பார்க்கும் அல்லது விரும்பும் துலங்கல் நிகழ்ந்த பின்னரே
அளிக்கப்படுகிறது.
v
பாராட்டு அல்லது
பரிசைப் பெற உயிரி தனது சுற்றுப்புறச் சூழலில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இயங்க
வேண்டியிருக்கிறது.இதனை செயல்படு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் என்று அழைக்கிறோம்.
v
உயிரி ஒரு
குறிப்பிட்ட துலங்கல் அல்லது நடத்தையை வெளிப்படுத்துவதன் வாயிலாக பாராட்டு அல்லது
பரிசைப் பெறுகிறது.
v
ஒரு குறிப்பிட்ட
நடத்தை பரிசைப் பெறும் கருவியாக அமைவதால் இதை கருவிசார் ஆக்கநிலையிறுத்தம் என்று
அழைக்கிறோம்.
ஸ்கின்னரின் சோதனை
v ‘ஸ்கின்னர் அறை’ என்ற சிறிய பெட்டியில் பசியோடு உள்ள எலி ஒன்று விடப்பட்டது.
v ஒரு சிறிய கம்பியை அமுக்குவதன் மூலம் பெட்டியின் மேல் உள்ள துவாரம் வழியாக
உணவுத் துண்டுகள் கீழே விழுமாறு அமைக்கப்பட்டு இருந்தது.
v எலி பசியோடு இருந்தால் பெட்டியினுள் அங்கும் இங்கும் ஓடியது.
v தற்செயலாக பெட்டியில்
இருந்த கம்பி எலியால் அமுக்கப்பட்டு கதவு திறந்து எலிக்கு உணவு கிடைத்தது.
v ருசி கண்ட எலி திரும்பத்
திரும்ப கம்பியை அமுக்கி உணவு பெற்றுக் கொள்ளத் தொடங்கியது.
Trial and Error learning
(தார்ண்டைக்கின் முயன்று தவறிக்கற்றல்)
v
எந்த ஒரு
செயலினையும் கற்றுக் கொள்ளும் போது பலமுறை முயன்று பல தவறுகளை செய்து பின்பு சரியான
பயிற்சிப் பெற்று தவறுகளை திருத்தி நன்றாகக் கற்றுக் கொள்கின்றோம்.
v
இவ்வாறு முயன்று தவறிக் கற்றல் முறையில் ஒவ்வொரு முறையும் நாம் எடுத்துக்
கொள்ளும் நேரமும் செய்யும் தவறுகளும் குறைந்து கொண்டே வருகிறது.
v
இறுதியாக மிகக்
குறைந்த நேரத்தில் எந்தவித தவறுமின்றி அச்செயலை கற்றுக் கொள்கின்றோம்.
v
விலங்குகள்
பெரும்பாலும் முயன்று தவறிக் கற்றல் முறையையே பயன்படுத்துகின்றன.
v
சித்திரமும்
செந்நாப்பழக்கமும் பயிற்சியால் விளைவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
v
விளைவு விதியே
எல்லாவகைக் கற்றலுக்கும் அடிப்படை என்பது தார்ண்டைக்கின் நம்பிக்கை.
தார்ண்டைக்கின் சிக்கல் அறை பரிசோதனை
v
மூன்று பக்கங்கள்
மரச்சட்டத்தாலும் முன்பக்கம் கம்பிக் கதவாலும் அமைக்கப்பெற்ற ஒரு சிறிய பெட்டியில்
பசியுள்ள பூனை விடப்பட்டு பெட்டிக்கு வெளியே கருவாட்டுத் துண்டுகள் வைக்கப்பட்டன.
v
ஒரு சிறு
கொக்கியைத் தூக்குவதன் மூலம் பூனை பெட்டியின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து
தனக்குப் பிடித்தமான உணவான கருவாட்டுத் துண்டுகளை உட்கொள்ள முடியும்.
v
பெட்டியில்
அடைக்கப்பட்ட பூனை பெட்டியின் கதவைத் திறப்பதற்கான வழிமுறையை அறிந்திராத
காரணத்தால் பசியால் அங்கும் இங்கும் துள்ளிக் குதிப்பது, கால் நகங்களால் கதவை
பிராண்டுதல்,பற்களால் கடித்தல்,கம்பிகளுக்கு இடையே புகுந்து வெளியே வர
முற்படுதல்,வாலால் அடிப்பது போன்ற செயல்களை செய்தது.
v
வாலால் அடிக்கும் போது எதேச்சையாக கொக்கி தூக்கப்பட்டு பூனை வெளியே வந்து மீன்
துண்டை எடுத்துக் கொண்டது.
v
திரும்பவும் பூனை
பெட்டியில் அடைக்கப்பட்டவுடன் வாலால் மட்டும் அடித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே
வந்தது.
v
இப்போது தவறுகளின்
எண்ணிக்கையும் கொக்கியைத் தூக்கி பெட்டிக்கு வெளியே வருவதற்கான நேரமும் கணிசமாகக்
குறைந்து காணப்பட்டது.
v
சோதனை மேலும்
தொடரப்பட்டத்தில் சில முயற்சிகளுக்குப் பின் பூனையின் தவறான இயக்கங்கள்
களையப்பட்டு நேராக சென்று தன் காலால் கொக்கியைத் தூக்கி கதவைத் திறக்க பூனை
கற்றுக் கொண்டது.
v
கற்றல் நிகழ்ந்த பின்னும் முயற்சிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்கும்போதும் கொக்கியைத் திறப்பதற்குப் பூனை எடுத்துக் கொண்ட
நேரம் குறைந்து சென்று திறன் அதிகரித்தது.
v
தார்ண்டைக்கின்
சோதனை கூறுவது என்னவென்றால் கொடுக்கப்பட்டுள்ள சோதனைத் தூண்டலுக்கு பொருத்தமான
துலங்கலை தேர்ந்தெடுத்து இணைத்தலே கற்றல் ஆகும்.
தார்ண்டைக்கின் கற்றல் விதிகள்
(i)
ஆயத்த விதி
(ii)
பயிற்சி விதி
(iii) விளைவு விதி
Insight learning
(உட்காட்சிவழிக் கற்றல்)
v உட்காட்சிவழிக் கற்றல் அறிதிறனுக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்கிறது.
v பெறப்பட்ட தகவல்களிருந்து இதுவரை தெரியாத புதிய தகவல்களை
திடீரென அறிந்து கொள்வதை உட்காட்சி என்னும் உளச் செயலாகும்.
v உட்காட்சிவழிக் கற்றலை கோஹ்லர் என்பவர் மனிதக் குரங்குகளை
வைத்து நடத்திய சோதனை மிக முக்கியமானது ஆகும்.
கோஹ்லர் சோதனை
v
கோஹ்லரின் சோதனைகளில் சுல்தான் என்ற மனிதக்குரங்கு
பசியுடன் இருக்கும்போது ஓர் அறையில் அடைக்கப்பட்டது.
v
அறையின் வெளியே
ஒரு குலை வாழைப்பழம் வைக்கப்பட்டது.
v
அறையினுள் ஒரு
பெரிய குச்சியும், ஒரு சிறிய குச்சியும் வைக்கப்பட்டது.
v
பெரிய குச்சியின்
ஒரு முனை உள்ளீடற்ற துளையைக் கொண்டதாக இருந்தது.இத்துளையினுள் சிறிய குச்சியின்
ஒரு முனை நுழையக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.
v
இந்த இரு குச்சிகளையும்
தனியாகப் பயன்படுத்தி வாழைப்பழத்தை அடைய முடியாது.
v
என்னென்றால் இரு
குச்சிகளையும் இணைந்து பயன்படுத்தினால் மட்டுமே வாழைப்பழத்தை அடைய முடியும்.
v
இரு குச்சிகளையும்
இணைந்து தொடக்கூடிய தொலைவில் வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்தது.
v
சோதனையின் தொடக்கத்தில் குரங்கானது பெரிய
குச்சியைப் பயன்படுத்தி வாழைப்பழத்தை அடைய முயற்சி செய்தது அது தோல்வியில் முடிந்தது.
v
அதன்பிறகு பலமுறை
முயற்சி செய்து தோல்வி கண்டது.பின்பு முயற்சியைக் கைவிட்டு அறையின் மூலையில்
உட்கார்ந்து குச்சிகளைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது.
v
அப்போது தற்செயலாக
சிறிய குச்சியின் ஒரு முனை பெரிய குச்சியில் இருந்த துளையில் பொருத்தியது.
v
இதனைக் கண்ட
குரங்கு திடீரென உந்தப்பட்டு குச்சிகளை சரியாகப் பொருத்தி அதை பயன்படுத்தி
வாழைப்பழத்தை அடைவதில் வெற்றிப் பெற்றது.
உட்காட்சி
வழிக்கற்றலில் இடம்பெறும் படிநிலைகள்
1)
ஆயத்தம் செய்தல்
2)
மனதில் அசைபோடுதல்
அல்லது ஆழ்நிலை உறக்கம்
3)
உள்ளொளி அல்லது
உட்காட்சி ஏற்படுதல்
4)
மதிப்பிடுதல்
அல்லது சோதித்தறிதல்
உள்ளொளிக்
கற்றலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
1)
கற்பவரின்
நுண்ணறிவு
2)
முன் அனுபவங்கள்
3)
பிரச்சனை தோன்றும்
முறை
4)
ஆரம்ப முயற்சி
5)
திரும்பத் திரும்பச்
செய்தலும் பொதுமைப்படுத்தலும்
உள்ளொளிக் கற்றலில் இடம் பெறும் கோட்பாடுகள்
(i)
முழுமைக்காட்சி
விதி
(ii)
அண்மை விதி
(iii) ஒப்புடைமை விதி
(iv) மூட்ட விதி
(v)
தொடர்ச்சி விதி