Latest Government Jobs and updates

Thursday

TN TRB BLOCK EDUCATIONAL OFFICER 2023 (வட்டாரக் கல்வி அலுவலர்) - தமிழ் இலக்கணம்

BLOCK EDUCATIONAL OFFICER

 

(வட்டாரக் கல்வி அலுவலர்)

 

Part I

 

தமிழ்

 

இலக்கணம்

 

நால்வகைச் சொற்கள்

 

v  தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருவதை சொல் என்பர்.

v  (எ.கா) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

v  இலக்கண அடிப்படையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,

F பெயர்ச்சொல்

F வினைச்சொல்

F இடைச்சொல்

F உரிச்சொல்

பெயர்ச்சொல்

è ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.

è (எ.கா) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

வினைச்சொல்

è ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும். வினை என்னும் சொல்லுக்கு செயல் என்று பெயர்.

è (எ.கா) வா, போ, எழுது, விளையாடு.

இடைச்சொல்

è பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது.

è (எ.கா) உம் – தந்தையும் தாயும்

மற்று – மற்றொருவர்

ஐ – திருக்குறளை

உரிச்சொல்

è பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்.

è (எ.கா) மா – மாநகரம்

சால – சாலச்சிறந்தது

No comments:

Post a Comment