GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
வாணிதாசன்
இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி
பெற்றோர் : அரங்கதிருக்காமு, துளசியம்மாள்
பிறந்த ஊர் : புதுவை அடுத்த வில்லியனூர்
காலம் : 22/7/1915 – 7/8/1974
சிறப்புப்பெயர்கள் : பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமைக் கவிஞர்,
பாவலரேறு.
நூல்கள் : தமிழச்சி, பாட்டு பிறக்குமடா, கொடி முல்லை, சிரித்த
நுணா, எழிலோவியம், குழந்தை இலக்கியம், இரவு வரவில்லை, எழில் விருத்தல், தொடுவானம்,
தீர்த்தயாத்திரை, வாணிதாசன் கவிதைகள், இன்ப இலக்கியம், இனிக்கும் பாட்டு, பொங்கல்
பரிசு, பாட்டரங்கப் பாடல்கள்.
குறிப்பு :
F இவருக்கு கவிஞரேறு, பாவலர் மணி என்ற
பட்டங்களை பெற்று இருக்கிறார்.
F தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்பட்டார்.
F இவருடைய பாடல்கள் உருசியம், ஆங்கிலம் போன்ற மொழிகளில்
மொழிப்பெயர்க்கப் பட்டுள்ளது.
F இவருக்கு ‘ரமி’ என்ற புனைப்பெயரும் உண்டு.
F பாரதிதாசனின் மாணவர். இவரிடம் தொடக்கக்கல்வி பயின்றுள்ளார்.
F இவருடைய பாடல்கள் வாணிதாசன் கவிதைகள் என்ற தலைப்பில்
வெளியாகியுள்ளது.
F இவரது பாடல்கள் சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட
தமிழ்கவிதை என்ற நூலில் வெளியாகியது.
F தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட
புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
F இவர் தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை
வெளியிட்டுள்ளார்.
F இவருக்கு பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் செவிலியர்
விருதை வழக்கியுள்ளார்.
F இவரது முதல் நூல் தமிழச்சி ஆகும்.
F இவருடைய கவிதைகள் ஆனந்த விகடன், பொன்னி, பிரசண்ட
விகடன், மன்றம், முரசொலி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.
F பாரதிதாசனை அடுத்து இயற்கை அழகை மிகுதியாக பாடியவர்.
F சமதர்ம நோக்கும் சீர்திருத்தப் போக்கும் கொண்டவர்.
F பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
மேற்கோள் :
è இடுவெயில் போல் உழைக்கும் சேரி வாழ் ஏழைமக்கள்.........
è ஓடைப் புது மலர்த் தாமரை நீ..........
è பாரதிதாசன் பெயரை உரைத்திடப் பாட்டுப் பிறக்குமடா..........
è மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்.........
è நிலவில் பாரி அடிப்பதுவும் நீரில் ஓரி அடிப்பதுவும்............
è பிறப்பினிலே தாழ்ந்த உயிர் உயர்ந்த உயிர் இல்லை...........