Latest Government Jobs and updates

Tuesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 - Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 1 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 1

செய்யுள்      (Source TN Textbook)

வாழ்த்து

          திருவருட்பா

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்

எண்ணில் கலந்தே இருக்கின்றான் – பண்ணில்

கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து.

பாடல் பொருள்

       கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்; என் பாட்டில் கலந்து இருக்கிறான்; அவன், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

ஆசிரியர் குறிப்பு

       இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா – சின்னம்மையார். ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் ‘திருவருட்பா’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் இவரே.

         அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை.

      இவரது திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல், வாழ்த்துச் செய்யுளாகத் தரப்பட்டுள்ளது.

திருக்குறள்

            அன்புடைமை

               அறத்துப்பால் 

                   அதிகாரம்(8)

              அறம்: இல்லறவியல்

1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.

3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.

4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.

5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.

6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும்  அஃதே துணை.

விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.

7.என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.

8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று.

விளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.

9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.

10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.

No comments:

Post a Comment