Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil New Syllabus 2022 - Part I

 

TNPSC Tamil New Syllabus

 

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

கட்டாயத் தமிழ்  மொழி தகுதித் தேர்விற்கான திட்டம், பாடத்திட்டம்

(விரிந்துரைக்கும் வகை)

நேரடி நியமனத்திற்கான பதவிகள்:

தொகுதி-I

தொகுதி -IA (உதவி வனப் பாதுகாவலர்)

தொகுதி -IB (உதவி ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை)

தொகுதி -IC ( மாவட்டக் கல்வி அலுவலர்)

தொகுதி -II மற்றும் IIA

மற்றும் இதர இரண்டு நிலைகளைக் கொண்ட போட்டித் தேர்வுகள்


கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான

தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம்

(விரிந்துரைக்கும் வகை வினாவிற்கான தலைப்புகள்)


           தேர்வுத் திட்டம்

 

1. மொழிபெயர்த்தல்

 

(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்

(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

2. சுருக்கி வரைதல்

3. பொருள் உணர்திறன்

4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்

5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்

   அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்

   ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

   இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

   ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை

   உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

   ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

 6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)

 7. தமிழ் மொழி அறிவு

         

         பாடத்திட்டம்

 

1. தாற்கால நிகழ்வுகள்

2. சமுதாயப் பிரச்சனைகள்

3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்

4. இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள்

5. அறிவியலும் தொழில்நுட்பமும்

6. கலையும் பண்பாடும்

7. பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம்,சுயமரியாதை இயக்கம்.

8. இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ்,புதிய வகைமைகள்.

9. தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள் ...), சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.

1௦. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல்

பிரித்தெழுதுக,எதிர்ச்சொல்,எதிர்மறை வாக்கியம்,பிழை நீக்கி எழுதுக.

11. திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்

  அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்

  ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை

  இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்

  ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை

  உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு

  ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

No comments:

Post a Comment