Monday

TET Study Materials - Paper 2 Child development Unit 4

 

Teachers Eligibility Test   -   Paper 2

 

(i) Child Development and  Pedagogy

 

(Relevant to Age 11– 14)

 UNIT IV: Social, Emotional and Moral Development

 

Erikson’s stages of Social development (எரிக்சனின் உள சமூக வளர்ச்சிக் கொள்கை)

   

v  எரிக்சன் என்பவர் மனித வளர்ச்சியில் உடல்தேவைகளை விட சமூக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிறார்.

 

v  குழந்தை வளர வளர அதன் சமூகத் தொடர்பு விரிவும் சிக்கலும் அடைகிறது.

 

v  இதனை எட்டு வளர்ச்சி நிலைகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

v  குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளில் குறிப்பிட்ட சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

v  இதனை எரிக்சன் எந்தெந்த சமூக நிலைகளில் என்னென்ன சமூக பிரச்சினைகள் எழக்கூடும் என்பதை விவரித்துள்ளார்.

 

 

F  முதல் நிலைகுழவிப்பருவம்  (பிறப்பு முதல் 2 வயது வரை)

 

è பிரச்சினைகள் : நம்பிக்கை வைத்தல் மற்றும் நம்பிக்கையின்மை

è முக்கிய நிகழ்வுகள் : உணவூட்டல்        

è சமூக செல்வாக்குகள் : தாய் மற்றும் செவிலியர்

 

F  இராண்டாவது நிலை – முன்பிள்ளைப் பருவம் (2 முதல் 3 வரை)

è பிரச்சினைகள் : சுதந்திரமாக இயங்குதல் மற்றும் வெட்கப்படுதல்

è முக்கிய நிகழ்வுகள் : கழிவறைப் பயிற்சி

è சமூக செல்வாக்குகள் : பெற்றோர்

 

F  மூன்றாவது நிலை – பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய நிலை (3 முதல் 5 வரை)

è பிரச்சினைகள் : தானே முற்பட்டு செயலாற்றுதல் மற்றும் குற்ற உணர்வு

è முக்கிய நிகழ்வுகள் : சுற்றுப்புறத்தை ஆராய்தல்

è சமூக செல்வாக்குகள் : ஆதாரக் குடும்பம்

 

F  நான்காவது நிலை – பள்ளிக்கு செல்லும் நிலை (6 வயது முதல் 12 வயது வரை)

è பிரச்சினைகள் : உற்சாகமாக உழைத்தல் மற்றும் தாழ்வுணர்வு

è முக்கிய நிகழ்வுகள் : சுற்றுப்புறம்,பள்ளி

è சமூக செல்வாக்குகள் : பள்ளி

 

F  ஐந்தாவது நிலை – குமரப்பருவம் (13 முதல் 19 வயது வரை)

è பிரச்சினைகள் : தன்னைப் பற்றிய நிலையான கருத்து மற்றும் தன்னைப் பற்றிய தெளிவற்ற குழப்பமான கருத்து

è முக்கிய நிகழ்வுகள் : சமூக உறவுகள்

è சமூக செல்வாக்குகள் : ஓப்பார் குழு,பிற குழுக்கள் விரும்பும் தன்மை

 

F  ஆறாவது நிலை – முன் முதிர் பருவம் (19 முதல் 4௦ வயது வரை)

è பிரச்சினைகள் : நெருக்கமான உறவும் ஒருமைப்பாட்டு உணர்வும் மற்றும் தனிப்பட்ட நிலைமை

è முக்கிய நிகழ்வுகள் : உறவுகள்

è சமூக செல்வாக்குகள் : நண்பர்கள்,பால் தொடர்பு உறுப்பினர்கள்,ஒத்துழைக்கும் மற்றும் போட்டியிடும் குழுக்கள்                                      

 

F  ஏழாவது நிலை – நடு முதிர் பருவம் (4௦ முதல் 65 வயது வரை)

è பிரச்சினைகள் : தாராள மனப்பான்மை மற்றும் தன்னுள் ஒடுங்கி செயல்படுதல்

è முக்கிய நிகழ்வுகள் : பணி மற்றும் பெற்றோராதல்

è சமூக செல்வாக்குகள் : பொறுப்புகளையும்,குடும்ப கடமைகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்வோர்

 

F  எட்டாவது நிலை – பின் முதிர் பருவம் (65 வயதுக்குப்பின்)

 

è பிரச்சினைகள் : நேர்மை மற்றும் முழுமையான நம்பிக்கை இழப்பு

è  முக்கிய நிகழ்வுகள் : தன் வாழ்வு பற்றிய ஆய்வு சிந்தனை

è சமூக செல்வாக்குகள் : மனித இனம்

 

Kohlberg’s stages of Moral development (கோல்பர்க்கின் ஒழுக்க வளர்ச்சிக் கொள்கை)

 

v  குழந்தைகளிடம் அறநெறி சார்ந்த ஆய்வுத்திறன் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதை கோல்பர்க் கண்டறிந்தார்.

 

v  நன்னெறி தொடர்புடைய சில பிரச்சினைகளை வைத்து அவற்றிற்கு ஏற்ற தீர்வுகளை காண மாணவர்களை குழுக்களாகப் பிரித்து அவர்களின் முடிவை கேட்டு அறித்தார்.

 

v  மேலும் அவர்கள் கொடுத்த முடிவுகளையும் அறநெறி சார்ந்த காரணங்களையும் முன் வைத்து கோல்பர்க் சில முடிவுகளைக் கண்டறித்தார்.

 

v  11-12 வயதை அடையும்போது ஒழுக்கம் பற்றிய சார்பு நோக்கத்தை இவர்கள் அடைகிறார்கள்.

 

v  இவர்கள் உணர்ச்சிகள்,தேவைகள் போன்றவற்றின் அடிப்படையில் பிறரது நடத்தைகளை மதிப்பிடுவர்.

 

v  கோல்பர்க் குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறார்.அவை ஒவ்வொன்றிலும் இரண்டு படிநிலைகள் என மொத்தம் ஆறு படிநிலைகள் உள்ளன.

 

F  முதல் நிலை : மரபுக்கு முற்பட்ட நிலை

படிநிலை I : தண்டனைக்கு அஞ்சி பணிந்து நடக்கும் போக்கு

படிநிலை II : தேவை நிறைவேற்றம் மற்றும் மகிழ்வுறுதல்

 

F  இரண்டாம் நிலை : மரபுநிலை

படிநிலை III : பிறர் அங்கீகாரத்தை பெறும் நோக்கு

படிநிலை IV : சட்டம் ஒழுங்கு நோக்கு

 

F  மூன்றாவது நிலை : மரபுக்கு பிந்தைய நிலை

படிநிலை V : சமூக ஒப்பந்த நோக்கு

படிநிலை VI : உலகளாவிய அறநெறிகள் இருத்தலை ஒப்புக்கொள்ளும் நோக்கு

No comments:

Post a Comment

சாலை இளந்திரையன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....