சான்றாண்மை
(பண்புகளால் நிறைந்து நிற்றல்)
பொருட்பால்
அதிகாரம்(99)
பொருள்-குடியியல்
1.கடன்என்ப நல்லவை
எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு.
விளக்கம்: நல்ல குணம் கொண்டவர்கள் நல்ல செயல்களை எல்லாம்
தமது கடமை என நினைத்து வாழ்வர்.
2.குணநலம் சான்றோர்
நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
விளக்கம்: நல்ல குணங்களை கொண்டு இருந்தாலே எல்லா சிறப்பும்
வந்து சேரும்.வேறு எந்த நலன்களும் சிறப்பை தராது.
3.அன்புநாண்
ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.
விளக்கம்: அன்புடைமை,நாணம்,உதவி செய்தல்,இரக்கம்
கட்டுதல்,உண்மை பேசுதல் போன்ற ஐந்து குணங்களை சான்றாண்மையின் தூண்களாகும்.
4.கொல்லா நலத்தது
நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
விளக்கம்: தவம் என்பது பிற உயிர்களை கொல்லாமை,பிறர் குறைகளை
சொல்லாமை சான்றாண்மை எனப்படும்.
5.ஆற்றுவார் ஆற்றல்
பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
விளக்கம்: ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிக்க ஆற்றலும்
பணிவாக நடத்தலும் வேண்டும்.அதுவே பகைவரை நண்பராக்க உதவும்.
6.சால்பிற்குக்
கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
விளக்கம்: தம்மை விட ஆற்றல் குறைந்தவரிடத்தில் தோல்வி
அடைத்தால் அதை ஏற்று கொள்ள வேண்டும்.அதுவே ஒருவரின் சான்றாண்மையை அறிய உதவும்
உரைகல் ஆகும்.
7.இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
விளக்கம்: நமக்கு தீங்கு
செய்தவருக்கு நன்மை செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யாவிட்டால் சான்றாண்மை பண்பு
இருந்தும் எந்த பயனும் இல்லை.
8.இன்மை ஒருவற்கு
இளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
விளக்கம்: சான்றாண்மை என்னும் பண்பு ஒருவருக்கு இருந்தால்
வறுமை அவருக்கு ஒரு குறையாக இருக்காது.
9.ஊழி பெயரினும் தாம்பெயரார்
சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
விளக்கம்: சான்றாண்மை பண்பு கொண்டவர்களை கடல் என்று
புகழ்வர்.உலகம் அழியும் காலம் வந்தாலும் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள்.
10.சான்றவர்
சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
விளக்கம்: சான்றாண்மை பண்பில் குறைவு ஏற்பட்டவர்களின்
பாரத்தை பூமி தாங்காது.
No comments:
Post a Comment