Tuesday

TNPSC Tamil study material part-B Thirukkural


             வலியறிதல்

                        பொருட்பால்

                         அதிகாரம்(48)

                       அறம்-அரசியல்

1.வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன் தன் வலிமையும் பகைவர் வலிமையும் துணை நிற்பவர் வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

2.ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
விளக்கம்: ஒரு செயலை மேற்கொள்ளும் போது,அதை பற்றி நன்கு அறிந்து தெரிந்து செயல்படுவதால் அச்செயல் நன்றாக முடியும் என்பதே.

3.உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம்: தன்னுடைய பலத்தை அறிந்து செயல்பட வேண்டும்.அவ்வாறு செயல்படாமல் தோல்வி அடைத்தவர்கள் பலர்.

4.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
விளக்கம்: எதிரியின் வலிமையை தெரிந்து கொள்ளாமல் தன்னை பெருமை பாராட்டுபவன் விரைவில் கெட்டு அழிவான்.

5.பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம்: மயில் இறகை அளவுக்கு மிகுதியாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும்.அதுபோல வலிமைமிக்கவன் பகைவரிடம் அளவுக்கு மீறி பகை கொண்டால் அழிந்து விடுவான்.

6.நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.
விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏற நினைப்பது உயிர்க்கே அழிவை உண்டாக்கும்.எதிரியை அழிக்க எல்லை மீறி முயற்சி செய்வது அழிவை உண்டாக்கும்.

7.ஆற்றி னளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
விளக்கம்: தன்னிடம் இருக்கும் பொருளை அறிந்து பிறர்க்கு உதவ வேண்டும்.அதுவே சிறப்பாக வாழ வழிவகுக்கும்.

8.ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
விளக்கம்: வருவாய் சிறியதாக இருந்தால் செலவை விரிவுபடுத்தாமல் குறைந்து செலவு செய்தால் நம் வாழ்வில் எந்த தீங்கும் வராது.

9.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
விளக்கம்: பொருளின் அளவை அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை எல்லா வளமும் இருப்பது போல அழிந்து விடும்.

10.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
விளக்கம்: தனக்கு உள்ள செல்வத்தின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் பிறர்க்கு உதவுவது செல்வத்தை எல்லாம் விரைவில் அழித்து விடும்.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...