Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
6ம் வகுப்பு
இயல் 4
துணைப்பாடம் (Source TN Textbook)
ஊர்த்திருவிழா – ஒரு கலைவிழா
திருவிழா என்றால், ஊரே அதிரும்படியான மேளசத்தம்
கேட்கும். வாணவேடிக்கைகள், விதவிதமான ஆட்டங்கள் நடைபெறும். உங்கள்
ஊர்த்திருவிழாவிலும் இவையெல்லாம் உண்டு அல்லவா?
அத்தகைய
ஒரு திருவிழாவிற்கு ஓவியர் ஒருவர் சென்றிருந்தார். அவர் தீட்டிய வண்ணப்படத்தில்,
தாம் பார்த்த திருவிழாக் காட்சிகளை உயிரோட்டத்துடன் வரைந்தார். அந்தப் படம்தான்
முன்பக்கத்தில் உள்ளது.
எவ்வளவு
அழகாய் இருக்கிறது பார்த்தீர்களா? கொஞ்சநேரம் படத்தைப் பார்த்துக்கொண்டே
இருங்கள்... என்ன, பார்த்துவிட்டீர்களா?
இப்போது
வகுப்பறையிலுள்ள மாணவர்களாகிய நீங்கள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து கொள்ளுங்கள்.
கீழுள்ள வினாக்களுக்கு ஒவ்வொரு குழுவும் அவரவர் குழு உறுப்பினர்களின் கருத்துகளைக்
கேட்டு எழுதித் தொகுத்தல் வேண்டும். வாருங்கள், கலந்துரையாடலாம்.
1. படத்தில் எத்தனைவிதமான காட்சிகளைக் காண முடிகிறது?
2.
மொத்தம்
எத்தனை ஆட்டங்களைப் படத்தில் காண்கிறீர்கள்?
3.
படத்தின்
இடப்பக்கத்தின்மேல் ஆணும் பெண்ணும் இசைக்கும் கருவியின் பெயர் என்ன?
4.
இடப்பக்கத்தின்கீழ்
ஆடுகிற ஆட்டத்தின் பெயர் என்ன?
5.
சிலைக்கு
முன்பாக ஆணும் பெண்ணும் ஆடுகிற ஆட்டத்தின் பெயர் என்ன?
6.
படத்தின்
வலப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் பெண்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?
7.
எத்தனை
விதமான வண்ணங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன?
8.
இப்படம்
உங்களுக்குள் ஏற்படுத்திய எண்ணத்தை மூன்று வரிகளில் எழுதுங்கள்.
9.
உங்கள்
ஊரில் நடைபெறும் விழாக்களைப் பட்டியலிடுங்கள்.
10. உங்கள் ஊர்த்திருவிழாவில் வேறு என்னென்ன ஆட்டங்கள்
நடைபெறும்?
குழுக்களில் மேற்கண்ட வினாக்களுக்குக் கலந்துரையாடிக் கருத்துகளைத்
தொகுக்கவும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் குழுத்தலைவர் முன்வந்து, தான் தொகுத்த
செய்திகளை வகுப்பறையில் கூறவும். எந்தக் குழு சிறப்பாகக் கருத்துகளைத் தொகுத்து
வழங்குகிறதோ, அந்தக்குழுவை அழைத்துக் கையொலி எழுப்பி, அனைவரும் பாராட்டுதல்
வேண்டும்.
No comments:
Post a Comment