Latest Government Jobs and updates

Thursday

TNPSC Tamil - சிற்றிலக்கியங்கள் - கலிங்கத்துப் பரணி

 

     சிற்றிலக்கியங்கள்

       

       கலிங்கத்துப் பரணி  (Source TN Textbook)

 

  படை வேழம்

 

கலிங்கப் படையின் நடுக்கம்

 

எதுகொல் இது மாயை ஒன்றுகொல்

எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை

அதுகொல் என அலறா இரிந்தனர்

  அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே

 

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்

 

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி

மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்

இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்

 இருவர் ஒருவழி போகல் இன்றியே

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்

உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர்

அபயம் அபயம் எனநடுங்கியே

மழைகள் அதிர்வன போல் உடன்றன

வளவன் விடுபடை வேழம் என்றிருள்

முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்

 முதுகு செயும்உப காரம் என்பரே

பாடல் விளக்கம்:

 

      சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தியோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

        அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

          கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

       சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

No comments:

Post a Comment