Wednesday

TNPSC Tamil - திருக்குறள் - நட்பு

திருக்குறள்

 நட்பு (Source TN Textbook)

 பொருட்பால்

அதிகாரம்(79)

பொருள்- நட்பியல்

 1.செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம்: நட்பை கொண்டு செய்கின்ற செயலுக்குச் சிறந்த பாதுகாப்பு உண்டு.

 

2.நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.

விளக்கம்: அறிவுடையவர்களின் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டு போகும்.அறிவு இல்லாதவர்கள் நட்பு தேய்பிறை போல தேய்த்துக் கொண்டு போகும்.

 

3.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம்: நல்ல நூல்களை கற்கக் கற்க இன்பம் தரும்.அதுபோல பண்புடையவர்களின் பழகக் பழக இன்பம் தரும்.

 

4.நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

விளக்கம்: நட்பு என்பது பேசி சிரிப்பதற்கு மட்டுமல்ல, மற்றவர்கள் செய்யும் தவறுகளை கூறி அவர்களை திருத்தவும் நட்பு உதவும்.

 

5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

விளக்கம்: ஒருவரோடு ஒருவர் பேசி பழகுவது நட்பு ஆகாது.அவர்களோடு ஒத்த மனப்பான்மையோடு செயல்படுவதே நட்பு ஆகும்.

 

6.முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

விளக்கம்: முகம் மட்டும் மலருவது நட்பாகாது,உள்ளமும் மலரும்படி அன்பு கொண்டு நடப்பதே நட்பு ஆகும்.

 

7.அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

விளக்கம்: நண்பன் தீய வழியில் சென்றால் அவனை நல்ல வழியில் நடக்க செய்வதும், அவனுக்கு ஒரு துன்பம் என்றால் தானும் வருந்துவதே நட்பு.

 

8.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம்: நண்பனுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதை நீங்கி அவனுக்கு உதவி செய்வதே உண்மையான நட்பாகும்.

 

9.நட்பிற்கு வீற்றிருக்கை யாதொனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நண்பனுக்கு உதவி செய்து தாங்குவது சிறந்த நட்பாகும்.

 

10.இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

விளக்கம்: இவர் எனக்கு இத்தன்மையானவர்,நாம் இவர்க்கு இத்தன்மையானவர் என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுவதால் நட்பு தன் சிறப்பை இழந்து விடும்.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...